எப்போதும் வாதம் செய்தால்
எதிர் வாதம் என்ன செய்வது?
நட்பு உனக்கும் எனக்கும் பொது
உனக்கு இனிப்பது எனக்கு கசக்கனுமா?
உனக்கு வேண்டதவைகள்
நானும் புறம்தள்ளினேன்
என்னை தள்ள காரணம் தேடுகிறாய்??
நம் இனிய தருணங்கள்
தடை போடுகிறது தடிக்க
துடிக்கும் என் வார்த்தைகளுக்கு...
என்ன வேண்டும் என்னிடம்
கொடுத்து பெற கோடி விஷயங்கள்
நான் வேண்டுவது அன்பை மட்டுமே.....
நீயும் நானும் மட்டுமே
பேசித்தீர்க்க முடியும்,
அமர்ந்து பேச நான் தயார்,
அமரவே நீ தயாரில்லை என்றபோதும்,
என் கண்ணில் என்றாவது
பொய் பார்த்ததுண்டா?
கோபமும் சிரிப்பும் மரத்து
மறந்து போனேன்,
சேர்த்து வைக்கும் சின்ன கைகளை
மதித்து மீண்டும் வாதம் செய்ய
எழுகிறேன், முடிவு எப்போது?
எப்போதும் வாதம் செய்தால்
எதிர் வாதம் என்ன செய்வது?
நட்பு உனக்கும் எனக்கும் பொது
உனக்கு இனிப்பது எனக்கு கசக்கனுமா?
உனக்கு வேண்டதவைகள்
நானும் புறம்தள்ளினேன்
என்னை தள்ள காரணம் தேடுகிறாய்??
நம் இனிய தருணங்கள்
தடை போடுகிறது தடிக்க
துடிக்கும் என் வார்த்தைகளுக்கு...
என்ன வேண்டும் என்னிடம்
கொடுத்து பெற கோடி விஷயங்கள்
நான் வேண்டுவது அன்பை மட்டுமே.....
நீயும் நானும் மட்டுமே
பேசித்தீர்க்க முடியும்,
அமர்ந்து பேச நான் தயார்,
அமரவே நீ தயாரில்லை என்றபோதும்,
என் கண்ணில் என்றாவது
பொய் பார்த்ததுண்டா?
கோபமும் சிரிப்பும் மரத்து
மறந்து போனேன்,
சேர்த்து வைக்கும் சின்ன கைகளை
மதித்து மீண்டும் வாதம் செய்ய
எழுகிறேன், முடிவு எப்போது?
ரொம்ப எளிதான பாவ் பாஜி இன்னைக்கு.
பாவ் கடையில் வாங்குங்க. ( செய்யரக்குள்ள போதுமடா சாமின்னு ஆயிடும்)
தேவையான பொருட்கள்
காரட், உருளை கிழங்கு, பட்டாணி, காலிபிளவர் - 2 கப் (எல்லாம் சேர்த்து வேக வைத்து)
பெரிய வெங்காயம் - 2 (பொடியா அறிந்தது)
தக்காளி - 2 கப் ( பொடியா அறிந்தது)
குடமிளகாய் - 1 கப் ( பொடியா அறிந்தது)
பூண்டு - 4 பல் மிக பொடியா அறியனும்
அஜிநோமேட்டோ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 சிறிய ஸ்பூன்
சாட் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
நான் ஸ்டிக் பாத்திரம் உபயோகியுங்கள்.
சிறிது வெண்ணை போட்டு, சர்க்கரை சேர்த்த உடன் வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து, அஜினோ மோட்டோ சேருங்கள்,பாவ் பாஜி
பின் சாட் மசால், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்,
காய்கறி கலவைகள் சேர்த்து நன்றாக மசித்து கிளறவும்,
தேவையான உப்பு போட்டு, கொத்தமல்லிதழை சேருங்கள்.
சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக வருமாறு கிளறவும்.
பாவ் மீது சிறிது வெண்ணை தடவி சூடு பண்ணி பாஜி உடன் பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், கிரேவி மீதி ஆனால் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
ரொம்ப எளிதான பாவ் பாஜி இன்னைக்கு.
பாவ் கடையில் வாங்குங்க. ( செய்யரக்குள்ள போதுமடா சாமின்னு ஆயிடும்)
தேவையான பொருட்கள்
காரட், உருளை கிழங்கு, பட்டாணி, காலிபிளவர் - 2 கப் (எல்லாம் சேர்த்து வேக வைத்து)
பெரிய வெங்காயம் - 2 (பொடியா அறிந்தது)
தக்காளி - 2 கப் ( பொடியா அறிந்தது)
குடமிளகாய் - 1 கப் ( பொடியா அறிந்தது)
பூண்டு - 4 பல் மிக பொடியா அறியனும்
அஜிநோமேட்டோ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 சிறிய ஸ்பூன்
சாட் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
நான் ஸ்டிக் பாத்திரம் உபயோகியுங்கள்.
சிறிது வெண்ணை போட்டு, சர்க்கரை சேர்த்த உடன் வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து, அஜினோ மோட்டோ சேருங்கள்,பாவ் பாஜி
பின் சாட் மசால், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்,
காய்கறி கலவைகள் சேர்த்து நன்றாக மசித்து கிளறவும்,
தேவையான உப்பு போட்டு, கொத்தமல்லிதழை சேருங்கள்.
சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக வருமாறு கிளறவும்.
பாவ் மீது சிறிது வெண்ணை தடவி சூடு பண்ணி பாஜி உடன் பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், கிரேவி மீதி ஆனால் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
சினிமா எனக்கு எனிமா மாதிரி, சில நல்ல படங்களும் நல்ல கதைகளும் தியேட்டரில் பார்க்க பிடிக்கும். கமல் படம் அனேகமாக எல்லா படங்களும் பார்ப்பேன், மலையாள படங்களில் திலிப் நடித்த காமெடி படங்கள் பிடிக்கும். தமிழில் பழைய கார்த்திக் நடித்த ( கார்த்திக்கின் ரொமான்ஸ் ரொம்ப நல்ல இருக்கும்) படங்கள், சிவகுமாரின் ரோசாப்பூ ரவிக்கைகாரி, மணிரத்னம் படங்கள் பிடிக்கும். பிடிக்கவே பிடிக்காத படங்கள் சிம்பு, விஜய், விஷால், பரத், விஜயகாந்த் யப்பா முடியலே... சினிமா எனிமா ஆனா கதை இது.
ரொம்ப பிடிச்ச படம்னா அது நம்ம தாத்தா எம்.ஜி.ஆர் தான். சிவாஜி நல்ல நடிகர்தான், அவரை விமர்சனம் பண்ணும் தகுதி எனக்கு இல்லை, ஆனாலும் அவர் படங்களில் ஒரு நெகடிவ் வைப்ரேசன் இருக்கும். அழுத ஓவரா அழுவார், பாசமா பொழிஞ்சு கொன்றுவார். ஆனா எம்.ஜி.ஆர் படம் ஒரு சந்தோஷ மனநிலையில் துவங்கி அப்படியே, காதல், அம்மா, வீரம், நகைச்சுவை, கொஞ்சுண்டு துக்கம், முடிவில் சுபம் அப்படி ஒரு கலக்கலா இருக்கும்.
என் கல்லூரி நாட்களில் விகிரமதிதன் படம் எங்க ஊரில் எம்.ஜி.ஆர் படம் பாக்கரத்துக்குனே ஒரு தியேட்டர் இருக்கு அதில் எப்பவும் தாத்தா படம்தான் ஓடும். மதியம், சாயங்காலம் இரண்டு முறை இந்த படத்தை ஒரே நாளில் பார்த்தேன். (ரெகார்ட்)தாத்தாக்கு அழவே வராது, அழுதா நமக்கு சிரிப்பா வரும்..எல்லா படங்களும் ஒரு பாசிடிவ் வைப்பரேசன் இருக்கும்.
அதிலும் கருப்பு வெள்ளை படங்களில் தலைவர் ரொம்ப அழகா இருப்பார், அவர் டிரஸ் சென்சும் நல்ல இருக்கும். கலர் படம் வந்த பின்பும் காவல்கரனுக்கு முந்தைய படங்களில் ஒரு ராஜா களையோடு இருக்கற மாதிரி தோணும்.(!?) அவரின் மன்னாதிமன்னன் படத்தில் அவரும் பத்மினியும் சூப்பர்... ரிக்சா காரனில் "ஓயம் ஓயம்" ( அட.. ஓரம் தான்) மறக்க முடியாது...
இப்ப படம் எடுப்பவர்கள் தயவு செய்து அவர் படத்தில் காமெடியை பார்த்து எடுக்க சொன்னால் படத்தையே காப்பி அடிகரங்க. ( பிரபு தேவா சொந்தமா கொஞ்சம் யோசிங்க)
அவரின் ஹீரோயின் நெஜமாவே அழகா காட்டுவார். அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40, மாட்டுக்கார வேலன், எங்க வீடு பிள்ளை(சான்சே இல்லை),இன்னும் பெயர் தெரியாத படங்களும் பாட்டும் நினைவில் நிற்பவை. அவர்க்கு பொருத்தமான ஜோடின்னா அது சரோஜாதேவி, பத்மினியும் தான்....
இன்னும் கொஞ்சம் படம் அவர் நடித்துஇருக்கலாம்..நேத்துதான் ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்து ஓராவது தடவையா பார்த்தேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக