சனி, 30 மே, 2009

2009-05-30

புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் இறுதி மூன்று வார காலத்தில், யுத்தப் பகுதியில் சிக்குண்டிருந்த பொது மக்கள் இருபதாயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னணி பிரித்தானிய நாளேடு ஒன்றை இலங்கை அரசாங்கம் வன்மையாகச் சாடியுள்ளது.

உறுதிசெய்யப்படாத தகவல்கள் மற்றும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை `த ரைம்ஸ்` நாளேடு நடத்திவருவதாக இலங்கையின் வெளியுறவுத்துறைச் செயலரான பாலித கோஹொன தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க பயங்கரவாதக் குழுவொன்றை இலங்கை அரசாங்கம் அழித்துள்ளது என்றும், மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்டிருந்த பணயக் கைதிகள் என்று குறிப்பிட்டு அவர்கள் இரண்டரை லட்சம் பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தால் நிர்மூலமாக்கப்பட்டிருந்த ஓர் இடம் என்று கூறப்படுகின்ற ஓர் இடத்தைக் காட்டும் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் `த ரைம்ஸ்` பத்திரிகை பிரசுரரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறிய நிலையில் நேற்று (மே. 29) வெள்ளிக்கிழமை அதிகாலை கல்முனை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு சுற்று வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளியில் காணப்படும் நாணல்காடு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அப்பிரதேசம் நோக்கி நாலா புறத்திலிருந்தும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று காலை ஆறு மணி தொடக்கம் குண்டுத் தாக்கதல் நடத்திய விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசம் ஆழம் கூடிய சகதியான சூழலைக் கொண்டுள்ளதால், தேடுதல் நடவடிக்கை முடிவடைய காலதாமதம் ஏற்படும் என அறிய முடிகிறது.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படும்போது கடந்த காலத்தில் இந்த நாணல்காட்டில் புலிகள் தங்கியிருந்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அதே பாணியில் இந்த நாணல் காட்டை தற்போது எஞ்சியுள்ள புலிகள் பயன்படுத்த எத்தனித்து வருவதாகவும், அதற்காகவே இப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர் தன்னை உருமறைத்துக் கொள்வதற்காக தாடி, மீசை, தலைமுடி என்பவற்றை வளர்த்துக்கொண்டு மக்களினுள் மறைந்திருந்துள்ளார்.

அவரை இனம் கண்டு கொண்ட மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். புலிகளியக்கத்தில் இருந்து மரணிப்பவர்களின் உடலங்களை பெற்றோர் உறவினர்கள் உரிமைகோரிச் செல்லும்போது அம்மக்களின் உரிமைகள் மாவீரர் பணிமனைக்கு பொறுப்பாளரான பொன் தியாகத்தினால் மறுக்கப்பட்டமையை அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் எனப் புகழப்பட்ட மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

படத்துக்கு தலைப்பும் "காதல் மன்னன் - தி கிங் ஆப் ரொமான்ஸ்" என்றே சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எடுப்பவர் ஜெமினியின் மகள்களுள் ஒருவரும் புகழ்பெற்ற பெண்கள் மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் நீடித்த வெகு சில தமிழ் நடிகர்களில் ஜெமினியும் ஒருவர். அந்தக் காலத்தில் ஆக்ஷனுக்கு எம்ஜிஆர், நவரசத்துக்கு சிவாஜி, காதல் படங்கள் என்றால் ஜெமினி என்பதே ரசிகர்களின் தீர்ப்பாக இருந்தது. ஆனால் காதல் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த நடிப்பைத் தந்தவர் ஜெமினி. அதற்கு உதாரணம் புன்னகை.

மிஸ்ஸியம்மா, கல்யாணப் பரிசு, பாவமன்னிப்பு, வஞ்சிக்கோட்டை வாலிபன், பாச மலர், நாணல், புன்னகை போன்ற காலத்தால் அழியாத பல காவியப் படங்களில் ஜெமினியின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது.

ஜெமினியின் இந்த திரையுலகச் சாதனைகளை ஒரு உயிரோட்டமுள்ள ஆவணப் படமாக எடுக்கிறார்கள். படத்தை இயக்குபலர் வெங்கட்ராமன்.

இந்தப படம் குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் இப்படிக் கூறுகிறார்:

என் தந்தையின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். ரகசியங்கள் ஏதுமில்லை. ஜெமினி என்ற இயல்பான நடிகரின் மகள் என்பதே எனக்குப் பெருமை. அவர் மீது பாசம், அதையும் தாண்டிய மரியாதை நிரம்ப உண்டு.

'காதல் மன்னன்' என்ற இந்தப் படம் ஜூலையில் ரிலீஸாகிறது. திரையரங்குகளிலும் வீடியோ வடிவிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நீச்சல் உடையில் குத்தாட்டம் போடுவது முமைத் கானுக்கு புதிதில்லை என்றாலும், தெலுங்கு அளவுக்கு தமிழில் அவர் பெரிய அளவு பேசப்படவில்லை. தெலுங்கில் இப்போது முன்னணி நாயகியாக வேறு மாறிவிட்டார். ஆனால் தமிழில் இதுவரை அவர் குத்தாட்டப் பாடல்களோடு தன் கலைச் சேவையை நிறுத்திக் கொண்டிருந்தார்.

இப்போது முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

புன்னமி நாகு என்று தெலுங்கில் ஏற்கெனவே அவர் நடித்து வெளி வந்த படம்தான் இப்போது தமிழில் பவுர்ணமி நாகம் என்ற பெயரில் தயாராகிறது.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி முழுவதிலும் நீச்சலுடையில் வருகிறாராம் முமைத் கான். இந்தப் பாடலுக்கு தெலுங்கில் பயன்படுத்திய அதே பாடலை தமிழிலும் பயன்படுத்தியுள்ளார்களாம்.

பீச்சில் டூ பீஸில் அவர் போட்டுள்ள ஆட்டம் இளசுகளை சூடேற்றும் என்கிறார் இயக்குநர்.

புன்னமி நாகுவால் தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துவிட்டது. இப்போது அதே படம் பவுர்ணமி நாகமாக தமிழில் வருகிறது. இதுவும் எனக்கு பெரிய திருப்பு முனையைத் தரும் என்கிறார் முமைத் கான் சந்தோஷத்துடன்.
நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க

கருத்துகள் இல்லை: