சனி, 30 மே, 2009

2009-05-30



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Pundit Nehru's Friendliness



ஈராக், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் அமெரிக்க பயங்கரவாதிகளால் தொடர்ந்தும் கற்பழிக்கப்படுகிறார்கள். இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவை சட்டத்தின் முன் செல்லாக்காசு.

ஆதாரங்களை அழித்து சட்டப்படி குற்றம் புரியும் தீவிரவாதிகளை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்?
எந்த நீதிமன்றத்தில் போய் நீதி கேட்க முடியும்?

தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று அலறும் தாய் பொய் சொல்கிறாள். தவறு செய்த தீவரவாதி உண்மை சொல்கிறான்.
கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தும் கேட்டுத்தான் என்ன பலன்.

சட்டப்படி நடத்தப்படுகிற ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் கொலைகள் இன்னும் எத்தனையோ கொடூரங்கள் கணக்கில் வருவதில்லை. அவை கணக்கெடுக்கப்படுவதில்லை.

Former U.S. soldier Steven Green got life in prison after being convicted of murdering four Iraqis.

கடந்த வியாழக்கிழமை (28) 14 வயது சிறுமியை கற்பழித்து அவளையும் மூன்று குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்ததற்காய் பகிரங்க மன்னிப்பு கோரினான் அமெரிக்க இராணுவ வீரன் ஸ்டீவ் க்ரீன்.

''நான் ஒரு குடும்பத்தை அழிப்பதற்குகாரணமாகிவிட்டேன். மீண்டும் அவர்களை திரும்ப பெற முடியுமென்றால் அது என்னால் முடியாது.'' என்று பயங்கரவாதி ஸ்டீவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினான்.(ஸ்டீவ் க்ரீன் கோரிய மன்னிப்பு அறிக்கை) பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தமை, அவள் பெற்றோர் மற்றும் 6 வயதான சகோதரியை கொலை செய்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கென்டக்கி மாவட்ட நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டான் ஸ்டீவ்.

பயங்கரவாதம் எங்கே விதைக்கப்படுகிறது? அதை விதைப்பவர்கள் யார்?
தன் மகள் கற்பழிக்கப்படுவதை கண்களால்; பார்க்கிற கொடுமையை ஒரு தந்தையாக ஒரு தாயாக இருந்து யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
அத்;தனை கொடுமைகளும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்டீவ்வைப்போன்ற எத்தனையோ தீவிரவாதிகள் இன்னும் கடமையில் இருக்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டீவ்வுடன் அவனுடைய சகாக்கள் 5 பேர் அமெரிக்க இராணுவத்தால் பல குற்றச்செய்ல்கள் புரிந்த காரணத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்னர். பின்பு அவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 மாதம் முதல் 110 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


உன் போன்ற தீவிரவாதிகளை செருப்பால் அடித்து கொலை செய்ய வேண்டுமென்று என் மனசாட்சி உத்தரவிடுகிறது.

இப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கேமரா காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, 'அவாக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது. ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது.

இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.
சமீப காலமாக கலைஞர் அவர்கள் தமது தலைசிறந்த நாடகங்களை அரங்கேற்றி வருவது நாமெல்லாரும் அறிந்ததே. அந்த வரிசையில் இப்போது அடுத்ததாக 'பாகப்பிரிவினை' நாடகம் வெளிவந்துள்ளது. இது கலைஞரின் முத்திரை நாடகமாக அமையும் என ஆவலோடு அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆவலினை பூர்த்தி செய்யும் வகையில் நாம் நாடகத்தின் விமர்சனத்தை முன் வைக்கிறோம்.

நாடகக் காட்சிகள் எழுபதுகளில் நடப்பதாகத் தொடங்குகிறது. நாயகன் தமது சொத்தை அதன் நிறுவனரின் இறப்பிற்குப் பிறகு அடைகிறார். அப்போதே பல்வேறு எதிர்ப்புகளைத் திறம்பட சமாளிக்கிறார். சொத்தை அடைந்த சில காலத்திற்குள்ளாகவே அவருக்கும் வில்லனுக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வில்லனாக நடித்தவர் பிரபல கத்திச் சண்டை வீரர் ராமச்சந்திரன். இப்பிரச்சனையில் நாயாகன் தந்து சொத்தின் பெரும்பகுதியை இழக்க நேரிடுகிறது. அதற்குப் பின்னர் வரும் காட்சிகளில் நாயகன் தனது சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடுகிறார்.

காட்சிகள் 90களுக்கு வந்தவுடன் நாடகம் வேகம் எடுக்கிறது. மதுரையில் மூத்த மகனையும் சென்னையில் இளைய மகனையும் குடி வைத்துவிட்டு இருவருக்கும் இடையில் நாயகன் அல்லாடுவது சுவராசியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சொத்து யாருக்கு என்ற கேள்வி எழும்போதெல்லாம் நாயகன் சாமர்த்தியமாக இரு மகன்களையும் சமாளிப்பது மிகவும் நகைச்சுவையாகக் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பேரன்கள் தலையெடுக்கிறார்கள். தாத்தாவான நாயகன் பேரனுக்கு பதவி சூட்டி பார்த்து மகிழும் காட்சிகள் நிறைவைத்தருகின்றன.

கதையின் திடீர்த் திருப்பமாக வருவது நாயகனின் பேரன்கள் வந்து சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுவதுதான். அப்போது ஏற்படும் பிரச்சனைகள் பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன. அதிலும் குறிப்பாக பேரன்களுக்கும் மூத்த மகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கும் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதைத் தொடர்ந்து பேரன்களும் மகன்களும் சந்திக்கும் போதெல்லாம் விலகி விலகிப் போகிறார்கள். பின்னர் வழக்கம்போல பேரன்களும் மகன்களும் தாத்தாவின் முன்னிலையில் இணைகிறார்கள்.

அதன் பின் நடக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. பின்னர் பல்வேறு திருப்பங்களுக்குப் பின்னர் மகன்களுக்கும் பேரன்களுக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கிறார் தாத்தா. டெல்லியில் மகனுக்காக நாயகன் நடத்தும் போராட்டம் கண்ணீரை வரவழைக்கிறது. மூத்த மகனுக்கு பதவி கிடைத்தௌம் எல்லோரும் எதிர்பார்த்தபடியே இளைய மகனுக்கும் பதவி கொடுக்கப்படுகிறது. பின்னர் எல்லோரும் ஒன்றாய் நின்று தாத்தாவுடன் போஸ் கொடுக்க சுபமாய் நாடகம் முடிகிறது.

கலைஞரின் நாடகம் என்ற எதிர்பார்ப்பை இந்த நாடகம் ஓரளவு நிறைவேற்றி விட்டது என்றே சொல்லலாம்.


நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே. அவை உங்கள் அனைவரையும் புண்படுத்தவே நடத்தப்பட்டன.
என்ன..டா இது உடல் ஆரோக்கியத்துக்கு தானே உணவு சருமத்துக்கு ஏற்ற உணவா என்று கேட்க தோணுதா?
நம்முடைய வயது அதிகம் ஆவதை முதலில் சொல்வது நமது சருமம் தான். இது உண்மைதானுங்க. ஆகையால் உணவில் மீது அக்கரை கொண்டால் நம் இளைமையினை தக்க வைக்க முடியும்.

ஏற்க்கனவே நாம் முன்று வகையான சருமத்தை பற்றி இதில் பார்த்திருக்கோம். அவர்களுக்கு ஏற்ற உணவுகளை இப்ப பார்ப்போம்.


எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்
அதிகமாக முகத்தில் திட்டு திட்டாக எண்ணெய் வழியும்.. அவர்களுக்கு பொடுகு, பருக்கள் வர வாய்ப்புள்ளதால் மிகவும் தலையினை சுத்தமாக வைக்கவும்.வாரம் ஒரு முறை முகத்துக்கு ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு வெளியாகும். துவரங்கள் அடைப்படும்.
உணவில் அதிகம் பச்சை காய்கறிகள், சாலட்,பழங்கள் அதிகம் சேர்க்கவும். கொழுப்பு நீக்கிய பால்,த்யிர்,மோர் சேர்க்கவும். அடிக்கடி உணவில் முளைகட்டிய பயிறு வகைகள் சேர்க்கலாம்.

உலர்ந்த சருமம் கொண்டவர்கள்:
இவர்களின் சருமம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் இருக்கு. ஆகையால் இவங்க அதிகமாக உணவில் விட்டமின்கள் நிறைந்த உணவுகளும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்.
விட்டமின்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை இது தருகிறது।

மலச்சிக்கல் அதிகம் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ளவும்

நார்மல் சருமம் கொண்டவர்கள்:
இவங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. இவங்களுக்கு பெரும் பாலும் எல்லா வகையான பேக் மற்றும் உணவுகளும் ஏற்றுக்கொள்ளும்..
இப்படியே உங்கள் சருமத்தை பாதுகாத்தால் போதும். அதிகமாக மோர்,தண்ணீர் குடிக்கவும்.ஆயிலி அயிட்டம், நான் - வெஜ் உணவுகளை குறைப்பது அனைவரின் சருமத்துக்கும் நல்லது.

இப்படி நிங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் உண்மையான வயதை விட 5 வயது கம்மியாக தான் தெரிவிங்க... அப்பறம் என்ன...ம்ம்...ம்ம்
பாகிஸ்தானின் ஸவாத் மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வழிநடத்திய தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலியானார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டு வந்த தலிபான் தீவிரவாதிகள், ஸ்வாத் மலைப் பகுதியில் ஊடுருவினர். இவர்களை முற்றிலுமாக ஒழிக்கும்படி அமெரிக்கா வற்புறுத்தியது. இதையடுத்து ஸ்வாத் மலைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம் தீவிரமாக இறங்கியது. தலிபான்களின் முக்கிய தலைவர்கள் 21 பேரின் பெயர்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டு அவர்களின் தலைக்கு பல கோடி ரூபா [...]

கருத்துகள் இல்லை: