இணையத்தில் தேடியதில் சில Flash Application களைக் கண்டேன். டிரம்ஸ், வயலின், கீபோர்ட் இவற்றிற்கான ப்ளாஷ் அப்ளிகேசன்ஸ் இவை. இவற்றைத் தனியாக தரவிறக்கம் செய்து இணைய இணைப்பின்றியும் இசையமைத்து புதுசா பட்டையைக் கிளப்பலாம்.
உங்கள் கணினியின் keyboard, mouse வாயிலாக கீழே உள்ள musical keyboard ஐ இசைத்துப் பாருங்கள். காதில் headset ஐ அணிந்து கேட்டுப் பாருங்கள்.
ButtonBeats.com
இணையப்பக்கத்தில் ஒரு widget ஆகப் பொதிந்து படங்காட்டலாம். கீழே பாருங்கள். கணினியின் மவுஸ், விசைப்பலகை இவற்றால் இந்த இசைக்கருவிகளை மீட்டி மகிழலாம்.
http://www.buttonbeats.com/
குறிப்பிட்ட இணையதளத்தில் நமது பெயரைக் கொடுத்து நமது பெயரில் வேறு யாரேனும் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகிவிட்டார்களா? என சோதிப்பதற்காகவே சிறப்புத் தளங்கள் உள்ளன. இந்த சேவையைச் செய்யும் இணைய தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.
100+ சமூகக் குழுமங்களில் நாம் கொடுக்கும் பெயரை ஒப்பிட்டு, முடிவுகளை அறிவிக்கிறது. Available ஆக இருந்தால் பச்சை நிறத்திலும், ஏற்கனவே யாரோ நம் பெயரில் உறுப்பினராக ஆகிவிட்டனர் என்றால் Available என்பதை குறுக்குக் கோடிட்டு சிவப்பு வண்ணத்திலும் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றது.
http://www.knowem.com/
http://www.usernamez.com/
http://www.checkusernames.com/
http://www.usernamecheck.com/
http://www.namechk.com/
உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.
இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது.
Firewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும்.
https://secure.logmein.com/products/hamachi/vpn.asp?lang=en
பெயர்ச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்
வினைச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்.
2000 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கவிஞர் அறிவுமதி அவர்கள் சொன்னதுதான் மேலே உள்ளது. என் தந்தையின் பெயரில் அமைக்கப் பட்டிருந்த அந்த அரங்கில் அறிவுமதி போல் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையே இருந்தனர். ஓவ்வொரு முறை பிரபாகரன் பெயர் உச்சரிக்கப்பட்ட போதும் முடிந்த அளவு நானும் பலம் கண்டு கத்தியது நினைவிலிருக்கிறது.
எப்போதிலிருந்து என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால் எப்போதுமே அவர் என் ஆதர்ச ஹீரோதான். எனக்கு இந்தியர் என்பதில் எப்படி உடன்பாடில்லையோ அது போலத்தான் தமிழன் என்பதிலும். இந்த உணர்வுகளின் வெளியே இருந்துப் பார்த்தாலும் அவர் ஒரு வரலாற்று நாயகர்தான். ஒரு இனத்தின் போராளி என்பதல்ல பிரபாகரன் மேல் நான் கொண்ட பற்றின் காரணம், புலிகள் செய்த தவறுகள் பல இருக்கலாம். ஆனால் அவைகள் தாண்டியும் அவர்கள் மீதும், பிராபகரன் மீதும் வரும் ஆர்வத்தின் ஆரம்பம் எதுவென சரியாக தெரியவில்லை.
சே குவேரா உலக மக்கள் அனைவருக்காகவும் போராடியவர். எந்த ஒரு நட்டோடும் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இல்லையென்றாலும் அவரின் வரிசையில் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டியவர் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தொடக்கம், வளர்ச்சி, எழுச்சி வீழ்ச்சியென அனைத்தும் வரலாறாக்கப் பட வேண்டும். அவரை ஒரு தீவிரவாதியாகத்தான் இன்னமும் பல தமிழர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பின் மற்ற இந்தியர்கள் என்ன சொல்வார்கள்? இவை மாற வேண்டும்.
அங்கிருக்கும் மீதி மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இரண்டாம் தர குடிமக்களாக சிங்கிள வெறிப்பிடித்த அரசை அனுசரித்து போக வேண்டியதுதானோ? அபப்டியே வாழ்ந்தாலும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றித்தானே இருக்கிறார்கள்? என்ன செய்யப்போகிறது உலகம்? இருக்கும் ஒரு லட்சம் மக்களை வளர்ந்த நாடுகள் சில பங்கிட்டு தத்தெடுத்துக் கொள்ள முடியாதா? ஒரு நாட்டிற்கு 20 ஆயிரம் மக்கள் என்றால் என்னவாகி விடப் போகிறது? யாராவது முன் வருவார்களா? இந்தியாவையும் சேர்த்துதான் கேட்கிறேன். பழி வாங்கியாச்சு அம்மையாரே!!! மீதமிருப்பது புலிகள் அல்ல. கருணை காட்டக் கூடாதா? மூன்று அமைச்சரோடு இதற்கும் அனுமதி வாங்கி வாருங்கள் கலைஞரே.. உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.
நம் குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே சில நாட்களில் வழமைக்கு திரும்பி விடுகிறோம். நாளையே பிரபாகரன் நம்மை விட்டு தூரம் செல்லக்கூடும். ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது பிரபாகரனையும் அவன் பின்னால் இருந்த முகமறியா பல்லாயிரக்கணக்கான புலிகளின் தியாகத்தைத்தான்.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். வேண்டாம். இவர்களை புதைத்து விடுங்கள். நாளை இன்னொரு பிரபாகரன் தோன்றி வந்தாலும் நான் கட்டிய வரிப்பணம் டாங்கியாக இலங்கை வந்து சேரும். நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் பாதுகப்பற்றது. வைரமுத்து சொன்னது போல்
உலகத்தை நேசி ஒருவனையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே..
பி.கு: பிரபாகரன் இறந்ததாக சொன்ன அன்று எழுதியது. பின் புது சந்தேகத்தை எழுப்பினார்கள். இன்றுவரை விடை தெரியவில்லை. எங்கே இருக்கிறாய் பிரபாகரா????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக