இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு பன்னாட்டு சமூகத்தை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா
இலங்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு சர்வதேச சமூகத்தை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இயன் கெல்லி, இலங்கையின் வடபகுதியில் நடந்த போரின் இறுதி கட்டத்திலும் அதற்குப் பிறகும் அங்கு என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்களை பன்னாட்டு சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9161
பிரபாகரனின் பெற்றோருக்கு சிங்கள அரசு விதித்திருக்கும் தடை!
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9233செய்தியைக் காண்க:
ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-( அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.
இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான்.
வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும் (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும்
செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.
இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி
அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.
லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது
மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.
ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது.
வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.
தி டாவின்ஸி கோட் தொடர்ச்சி என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?
அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.
நம் நாட்டில் உள்ள மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக