கிம் கி டுக் கின் "தீவு" படத்தினைக் குறித்தான பகிர்வில் ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னைக் கொலைகாரனாகவும்,ஆஃப்ரிக்க கண்டத்தில் கறுப்பின மக்களை வேட்டையாடி, கை விலங்கிட்டு அமெரிக்காவுக்கு இட்டுச் சென்று விற்ற அடிமை ஏஜண்டாகவும்,ப்ரூப் ரீடராகவும்,மேதாவியாகவும்,விக்கிபீடியா "காப்பி"யாளனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.அந்தப் படு மோசமான வரி இதுதான்
நமது "....."imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.அந்த வரி தேவையற்றதெனும்படியான அனுஜன்யாவின் பகிர்வினுக்கு இப்படி பதில் தந்திருந்தேன்
அனுஜன்யா என் நோக்கம் ஜெமோவோ "....." அல்ல.வேறொரு கோணம்தாம் :)பெருமதிப்பிற்குறிய சிருஷ்டிகர்த்தா எங்கேயும் போய் தேட வேண்டிய அவசியம் வந்துவிடாமலிருக்கவே imdb plot summary இணைப்பினை இப்படித் தந்திருந்தேன்
Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.அந்த plot summary இப்படித் தொடங்கும்
Mute Hee-Jin is working as a clerk in a fishing resort in the Korean wilderness; selling baits, food and occasionally her body to the fishing tourists.கொரியத் திரைப்படங்கள் விமர்சகர்களால் சரியாக அணுகப்படுவதில்லை என்கிற ஆதங்கம்தான் அந்தப் பதிவின் பிரதானமாய் இருந்தது.மற்றபடி எவரின் புத்திசாலித்தனங்களையும் சந்தேகிப்பதோ அல்லது என் புத்திசாலித்தனங்களை அடுத்தவனை முட்டாளாக்கி நிரூபிப்பதோ என் நோக்கம் இல்லை.அந்த பதிவை சாதாரணமாய் படித்திருந்தாலே இந்த உணர்வைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.அப்படிப் புரியாமல் வேரொரு மனநிலையை அந்தப் பதிவு தந்திருக்குமெனில் அதற்காக வருந்துகிறேன்.மேலும் அவரைப் போன்றவர்கள் அந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியை எப்படி சிலாகிக்காமல் விட்டார்கள்?மேலும் அவரின் விமர்சனம் ஹீ ஜின்னை ஒரு கொலைகாரியாக சித்தரிக்கும் அபத்தத்தைக் கூட அவர் உணரவில்லையா என்கிற பல ஆதங்கங்கள்தாம் அவரைப் பற்றிய என் ஒற்றை வரிக்கு காரணங்களாக இருந்தன.
"ஆனானப் பட்ட ஹிந்து தினசரி" என்கிற வரியைப் படித்த போது எழுந்த அதிர்ச்சியும் கசப்பும் இவரின் பிம்பங்களைத் தரைமட்டமாக்கியது.ஹிந்து வை மலம் துடைக்க கூட பயன்படுத்துவதில்லை என்கிறபடியால் இவர் அழைப்பு விடுத்திருக்கும் ப்ரூஃப் ரீடர் பணியை ஏற்க முடியாமல் போவதை மிகுந்த வருத்ததோடு பதிவு செய்கிறேன்.
நீ என்ன எப்படி கொற சொல்லலாம்? நீ எப்படி என்னோடதில தப்பு கண்டுபிடிக்கலாம்?.நான் முட்டாள்தான்யா! ஆனா நீ கொலகாரன்....காப்பி அடிக்கிறவன்!.....அறிவ அதிகாரமா பயன்படுத்துறவன்!!..... ப்ரூப் ரீடர் வேலைக்குதான் லாயக்கு... ஆனா நான் சிருஷ்டிகர்த்தா என்ன குண்டாந்தடியால அடிக்காதே!!!!.....இந்த வரிகளை அவர் சத்தமாய் சொல்வதாய் நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு பீறிட்டெழுந்தது.அவருக்காக வருத்தப்படுவதைத் தவிர்த்து இந்த நல்ல மனநிலையில் என்னால் எதுவும் செய்துவிடமுடியவில்லை.
பன்முகத் தன்மை குறித்தெல்லாம் பாடமெடுத்தவர்கள் தமக்கென வரும்போது மட்டும் ஓட்டுக்குள் சுருங்குவதும் வன்மத்தை உமிழ்வதும் நம் சூழலில் புதிதில்லை என்றாலும் இவரின் உமிழ்தல்கள் இவரின் பிம்பத்தின்மீதே படிந்து போனது நிரந்தர சோகம்.
போகிற போக்கில் புழுதி வாறித் தூற்றும் வேலையை வேறு செய்து வருகிறார்.அதைப் பற்றியெல்லாம் விரிவாய் எழுத பயமாய் இருக்கிறது.பாபாவின் பூரண ஆசி பெற்ற ' ஆ' சாமி யை விமர்சித்தால் எங்கே நானும் மண்டையைப் போட்டு விடுவேனோ என்கிற பயம் வேறு நேற்று இரவிலிருந்து தொற்றிக் கொண்டது.இவருக்கு மேலே இருந்து படு பயங்கர பாதுகாப்புகள் வேறு வந்து கொண்டிருப்பதால் விரல்கள் நடுங்க இந்தக் கருமத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
ஐநூறு மைல் நீளமுள்ள துண்டுநிலத்துக்கு முதல்வராகிவிட்டு உடனே பல்கலைகழகத்துக்கு போய் டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்ளும் நம் ஊர் மானம் கெட்ட கொள்ளைகார மிருகங்களுக்கு..(மிருகங்கள் மன்னிக்கவும்)..அரசியல்வாந்திகளுக்கு ஒபாமா தன் உதாரணம் மூலம் செருப்படி கொடுத்திருக்கிறார்.
அரிசோனா பல்கலைகழகம் ஒபாமாவின் பெயரை கவுரவ டாக்டர் விருதுக்கு பரிசீலித்து டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு அவர் எந்த சாதனையும் செய்யவில்லை என முடிவு செய்தது.அதன்பின் அதை ஒபாமாவுக்கும் தெரிவித்து மாணவர்களுக்கு விருது வழங்க அவரை அழைத்தது.ஒபாமா கோபிக்காமல் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் "நான் இன்னமும் எந்த சாதனையும் செய்யவில்லை.அமெரிக்க ஜனாதிபதியாவது என்பது ஒருவர் தன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தினார் என்பதற்கான அறிகுறி அல்ல" என பேசியிருக்கிறார்.
அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைக்காத அரிசோனா பல்கலைகழகத்தை பாராட்டுவதா இல்லை தனக்கு டாக்டர் பட்டம் வாங்க தகுதி இல்லை என்று கூறிய பல்கலைகழகத்தின் பரிந்துரை சரியானது என்று கூறிய ஒபாமாவை பாராட்டுவதா என புரியவில்லை.
மசாலாபடத்தில் நடித்த நடிகருக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி நக்கிபிழைக்கும் நம் ஊர் பல்கலைகழகங்களும், மணிக்கணக்கில் இந்திரன்,சந்திரன் என புகழ்மாலைகளை கேட்டு ரசிக்கும் நம் அரசியல்வாந்திகளும் இனியாவது திருந்தினால் சரி.
"ஸ்டேசனுக்கு வந்து பொண்ணுக புகார் தர்ரதே பெருசு.இதுல நீங்க இப்படி அதட்டினா அவ பயந்துக்க மாட்டாளா?" புகார் தர வந்த கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று முணுமுணுத்தது.
"யோவ்.உனக்கு இது அதிசய கேசு.எனக்கு இது ஆயிரத்துல ஒண்ணு..ஆஃபடர் ஆல் கள்ள தொடர்பு மேட்டரு.அதுக்கு புகார் தர ஒரு கூட்டம்..இவனுங்க பேச்சை கேட்டு நீ வரதட்சிணை கொடுமைன்னு புகார் தந்தா அவனை நான் புடிச்சு உள்ளே தான் போட வேண்டி இருக்கும்.அப்புறம் உனக்கு கடைசிவரைக்கும் வாழாவெட்டி பட்டம் தான் மிச்சம்.நல்லா யோசிச்சு பாரு" எஸ்.ஐ பரிவுடன் கூறினார்.
"இல்லைங்க மேடம்."அவர் முன்னாள் கிளாஸ்மேட் பொண்ணு கூட நெருங்கி பழக ஆரம்பிச்சுட்டார்.என்னை கண்டுக்கறதில்லை.மதிக்கறதில்லை.கண்டுக்காம இருந்தா இரு,போறதுன்னா போங்கறார்.நான் வேற என்னதான் செய்யறது?நீங்க எப்படியாச்சும் அவர் கிட்ட பேசி அவளை கழட்டி விட்டீங்கன்னா உங்க காலில் விழுந்து..."
"காலில் விழுந்து கட்டவுட் வெப்பியாக்கும்?இதா பாரம்மா....ஸ்டெசன்ல முந்தி கட்டபஞ்சாயத்து பண்ணி தம்பதிகளை சேத்து வெச்சுட்டிருந்தோம்.டிஎஸ்பிக்கு புகார் போய் இப்ப அதை எல்லாம் நிறுத்திட்டோம்.இதை நீயும் உன் சொந்தகாரங்களும் சேந்து தான் பேசி முடிவு பண்னனும்.என் கிட்ட புகார் கொடுத்தா நான் அப்புறம் உம்புருஷனை அரெஸ்ட் பண்ணிதான் தீருவேன்.உம்புருசனுக்கு நல்ல கம்பனில உத்தியோகம் இருக்கு.அது வீணா பறி போயிடும்.அப்புறம் ஐயோன்னா வராது..அம்மான்னா வராது..புரியுதா?" வேதவல்லி அதட்டினார்.
வாசவி மெதுவாக தலையாட்டினாள்.
"இந்த காலத்துல எவன் இதை எல்லாம் செய்யலை?" எஸ்.ஐ குரலை மெதுவாக இறக்கினார்..."இந்தா பாரு.அந்த லாக்கப்புல வசந்தின்னு ஒருத்தி உக்காந்துகிட்டிருக்கல்ல?அவ புருசன் கல்யானமாகி கொஞ்ச நாள் கழிச்சு வேறொருத்தியை செட்டப் பண்ணிகிட்டான்.இவளை முதல் தாரமா வெச்சு கவுரவமா நடத்தறதா சொன்னான்.கேக்காம ஆங்காரப்பட்டு வீட்டை விட்டு வந்து எவன் கையிலோ சிக்கி சீரழிஞ்சு இப்ப விபசாரியா இருக்கா"
வாசவி வசந்தியை உற்றுப்பார்த்தாள்.வசந்தியின் முகத்தில் அப்படி ஒன்றும் சோகம் தென்படவில்லை.என்ன வேணா நடக்கட்டும் என்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது போல் பட்டது.
"போலிசெல்லாம் வாண்டாம்னு அப்பவே சொன்னேன்.இந்த மனுசன் தான் ரோசப்பட்டுகிட்டு இழுத்துகிட்டு வந்துட்டார்.இந்தாளு சின்ன வயசுல ஆடாத ஆட்டமா?எல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்.சொன்னா கேக்கறாளா இவ?இவளுக்கு படிப்பும் இல்லை,வேலையும் இல்லை.இவங்கப்பனுக்கு இப்பவே ஊரெல்லாம் கடன்.நாங்க ரெண்டுபேரும் போய் சேந்தா இவ ரோட்டுல தான் நிக்கணும்" வாசவியின் அம்மா புலம்பினார்.
"எம்பொண்ணு ரோட்டுல எதுக்கு நிக்கணும்?அந்த நாயை புடிச்சு உள்ள போட்டுட்டு நானே இன்னொரு கலியாணம் பண்ணி வெப்பேன்" வாசவியின் அப்பா சொல்லிவிட்டு லொக்கு,லொக்கு என்று இருமினார்.
"இந்த விவாகரத்து,புரட்சி எல்லாம் பேசறதுக்கு நல்லா தான் இருக்கும்.செயல்முறைக்கு ஒத்துவராது.இந்த மாதிரி ஆயிரம் கேசை பாத்தவ நான்.புரியுதா?" வேதவல்லி நல்லவிதமாக சொல்லி பார்த்தார்.
வாசவி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.பிறகு கொடுத்த புகார் கடிதத்தை திரும்ப வாங்கிக்கொண்டாள்."எம் புருசன் வீட்டுக்கு போறேன்" என மெதுவாக சொன்னாள்.
"நல்ல முடிவு.நீ உங்க சொந்தக்காரங்க யார் பேச்சையும் இனிமேல் கேக்காதே.புரியுதா?" வேதவல்லி அட்வைஸ் செய்தார்.
தலையாட்டிவிட்டு வாசவி வெளியே நடந்தாள்.ஸ்டேசன் வாசலை தாண்டும்போது யதேச்சையாக நின்றாள்.வசந்தியை திரும்பி பார்த்தாள்.வசந்தியும் அவளை பார்த்தாள்.தலைகுனிந்துகொண்டு ஸ்டேசன் வாசலை தாண்டினாள் வாசவி.
"உன் புருசன் கூட பொழைக்கறதுக்கு பதில் என்னை மாதிரி தொழில் செஞ்சே பிழைக்கலாம்.." வசந்தியின் குரல் ஆக்ரோஷமாக ஸ்டேஷனெங்கும் ஒலித்தது.
வாசவி நின்றாள்.
'நிஜமாதான்...ஜெயிலில் இருந்தாலும் நான் ரொம்ப சுதந்திரமா இருக்கேன்.நீ மறுபடி ஒரு ஜெயிலில் அடைபட போயிட்டிருக்கே.நானாவது ஒரு வாரத்தில் விடுதலையாயிடுவேன்.உனக்கு ஏது விடுதலை?"
"அவ கெடக்கறா அவுசாரி..நீ நட..." வாசவியின் அம்மா முணுமுணுத்தார்.அவர் குரலும் ஏனோ தளர்ந்திருந்தது.
கையை உதறிவிட்டு ஸ்டேசனுக்குள் மீண்டும் நுழைந்தாள் வாசவி.
வசந்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.பூவாய் சிரித்தாள் வசந்தி.
பல வருடங்களுக்கு முன்பு பெமினா இதழில் படித்த ஒரு சிறுகதையில் இந்திய கணவன் ஒருவன் அமெரிக்க பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறான்.அவன் இந்திய மனைவி அவனுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறாள்.கடைசியில் ஒருநாள் அவள் கணவன் திரும்பி வருகிறான்.திரும்பி வந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கிறான்.அந்த விளக்கம் முழுவதும் இந்திய கலாசாரத்தை உயர்த்திபிடிப்பதாகவே இருக்கிறது.அதன்பின் முத்தாய்ப்பாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறான்.."டாய்லட் பேப்பர் பயன்படுத்துபவளுடன் என்னால் வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது.."
அதற்கு என்ன அர்த்தம் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.டாய்லட் பேபர் சுகாதர கேடானதா இல்லை தண்ணீர் விட்டு கழுவுவது சுத்தமானதா என்ன சொல்ல வருகிறார் என்றே அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை.
அமெரிக்க டாய்லட்டுகள் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிப்பவை.நம் ஊரில் ஆய் போவதை "காலை கடனை கழிப்பது" என்று ஏதோ கடன் கட்டும் இடமாக கருதி குறிப்பார்கள்.பாத்ரூமுக்கு போனோமா,வேலையை முடித்தோமா வந்தோமா என்று நம் ஊரில் இருப்பார்கள்.அமெரிக்காவில் அப்படி இல்லை.
நம் ஊர் டாய்லட் பவுலில் குத்த வைத்துதான் உட்கார முடியும்.அதனால் எத்தனை சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு எழுகிறோமோ அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பார்கள்.வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட் பவுலில் சேரில் உட்கார்வது போல் அக்கடாவென உட்கார்ந்து ஆய்போகலாம்.பலர் அதனாலேயே வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட்டுகளுக்கு போகும்போது தினசரியையும் எடுத்துப்போய் ஆற அமர படித்து முடிப்பார்கள்.நம் ஊரில் ஆய்போகும்போது சாப்பிடுவதை அசிங்கமாக நினைப்பார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஆய்போகும்போது ஒரு கோப்பை ஒயினை எடுத்துப்போய் சிப்புகிறவர்கள் இருக்கிறார்கள்.பல அமெரிக்க ஓட்டல்களில் காப்பி மெஷினை டாய்லட்டுகளில் தான் வைத்திருப்பார்கள்.
அமெரிக்க டாய்லட்டுகள் ஒவ்வொன்றிலும் பாத்டப்புகள் தவறாமல் இருக்கும்.அதில் நீரை நிரப்பி மிதப்பது அமெரிக்கர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ஆக பாத்ரூமில் இத்தனை நேரத்தை செலவழிப்பதால் அதை சுத்தமாக வைத்திருப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.பாத்ரூம் தரையில் துளி தன்ணீர் படாமல் கார்பெட் போட்டிருப்பார்கள்.குளிக்கும்போது பாத்டப்பில் நின்றுகொண்டு ஷவரில் குளிக்கலாம்.தன்ணீர் வெளியே விழாமல் இருக்க திரை போட்டு மூடியிருப்பார்கள்.
ஆய்போய்விட்டு தன்ணீர் விட்டு கழுவுவது நம் ஊருல் சுகாதாரமாக கருதப்படுகிறது.ஆனால் இது நம் ஊருக்கு நாக்ரிக மாற்றத்தில் வந்த புது வழக்கம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் அட்டாச்ட் பாத்ரூம்கள் எல்லாம் கிடையாது.ஊர் மக்கள் எல்லோரும் இட்டேரி என்று சொல்லப்படும் இடத்துக்கு சென்றுதான் ஆய்போக வேண்டும்.இட்டேரிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும்.அங்கே சற்று புதர் மறைவாக இருக்கும் இடத்தில் உடகர்ந்து ஆய்போவார்கள்.ஆண்கள்,பெண்கள் என்று எந்த வித்திய்சாமும் இல்லாமல் ஊர்கூடி ஆய்போகும் இடம் தான் இட்டேரி.
இட்டேரிகளுக்கு செம்பை எடுத்து போகிறவர்கள் இருப்பார்கள்.இருந்தாலும் ஒரு சின்ன செம்பு தன்ணீரில் சுத்தமாக கழுவ முடியாது என்பதால் சின்ன சைஸ் கருங்கல்லாக பார்த்து நாலைந்தை எடுத்துகொண்டு இட்டேரிக்கு போய் ஆய்போனபின் முதலில் கரும்கல்லில் ஆயை துடைத்து வீசுவார்கள்,அதன்பின் சின்ன சொம்பில் இருக்கும் நீரைகொண்டு கழுவிக்கொண்டு வீடுவந்து சேர்வார்கள்.
எங்கள் ஊருக்கு அடாச்ச்ட் பாத்ரூமும்,தன்ணீர் குழாயும் வந்தபிறகு இட்டேரிக்கு போவது சுத்தமாக நின்றுவிட்டது.அதன்பின் துடைக்கும் வழக்கம் சுத்தமாக நின்றுபோய் கழுவும் வழக்கம் தான் இந்திய கலாசாரம் என்றும் துடைப்பது அமெரிக்க கலாசாரம் என்றும் நம் மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்.உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம்.
நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்
17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது
வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்
எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!
- ச.பிரேம்குமார்
என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக