பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் IPL T20 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
வெற்றியடைந்தது!
மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
எதிர்த்து 232 வாக்குகள் பதிவாயின. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மர்மம் நீங்கியது. கம்யூனிஸ்டுகளின் பணியால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு நின்ற மதவாதத்தின் முயற்சி தோல்வியடைந்தது.

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.
அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர். அதைத் துடைத்துக் கொண்டு, தனது அவமானத்திற்கு பழிவாங்கத் துடிக்கிறது உச்சிக் குடுமி நீதிமன்றம்.
இதோ இன்று கலைஞருக்கு அது விடுத்துள்ள எச்சரிக்கையில் "தலைமைச் செயலரின் அறிக்கையைத் தனது அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரைவில் முதல்வர் பதிலளிக்காவிட்டால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
பிறப்பிக்கட்டும்! பிறப்பிக்கட்டும்!! அப்போது தான் கனன்று கொண்டிருக்கும் தமிழின உணர்வு கொழுந்துவிட்டெரியும்!
இந்தியா என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் எம் தமிழினம் மீண்டு வரும்! உச்சிக் குடுமி நீதிமன்றமே உன் ஆணவ ஆணையை அனுப்பு!
தமிழினத்திடமிருந்து மீண்டும் கிடைக்கும் உனக்கு ஆப்பு!
முந்தைய பதிவுகள்:
உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!
எவன் மசுர புடுங்கப் போனீங்க!
பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....
கலைக்கட்டும் கலைஞர் அரசை!

சென்னை பண்பலையில் 'வி.ஐ.பி நேரம்' நிகழ்ச்சி
"எப்படி நீங்கள் ஒலிபரப்பு துறைக்கு வந்தீர்கள்?"
"ஏசியாநெட் வானொலியில் தமிழ்நிகழ்ச்சியை பெண்மணி ஒருவர் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் பேசிய தமிழ் மலையாளியான நிலைய இயக்குனருக்கே பிடிக்கவில்லை. என்வே மாற்றுக்காக ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. நண்பரொருவர் என்னை முயற்சி செய்யச் சொன்னார். நானும் 'சரி'யென்று ஒலிப் பேழையில் என்னைப் பற்றிய குறிப்பை பதிவு செய்து அனுப்பினேன். நிலைய இயக்குனர் கோயாவைச் சந்திக்கச் சொல்லி அழைப்பு வந்தது. போய் சந்தித்தேன்.
நிலைய இயக்குனர் அறையில் சந்திப்பு. எம்மாதிரி நிகழ்ச்சி என்பதை விளக்கினார் அவர். வாரம் மூன்று முறை ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்களை வழங்க வேண்டும்.அதற்கான தொகுப்புரை வழங்க வேண்டும். அவ்வளவுதான் என்றார்.
கொஞ்ச நேரம் பொதுவாக எனது பின்னணி குறித்து கேட்டறிந்தார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராகப் பணியாற்றியிருப்பது தெரிந்ததும் மகிழ்ந்தார். நிலைய இயக்குனர் முகைதீன் கோயாவுக்கு தமிழ தெரியாவிட்டாலும் தமிழ் மீது மிகுந்த மரியாதை இருந்தது. What a poetic language? என்று வியந்தார். சில தமிழ் - மலையாளப் பதங்களுக்கிடையிலிருக்கும் ஒற்றுமை குறித்துப் பேசிய பின் சில இசைத்தகடுகளைத் தந்து, 'இதிலிருந்து நான்கு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு உரை எழுதி நாளை மறுநாள் வாருங்கள். உங்கள் குரலைப்பதிவு செய்யலாம்' என்றார்.
'ஏன் நாளை மறுநாள் வரை காத்திருக்க வேண்டும்? இப்போது செய்ய முடியாதா? ' என்றேன்
'எழுதிக்கொள்ள வேண்டாமா?' என்றார்
'எதற்கு?' என்றேன்
மேலும் கீழும் பார்த்து விட்டு ஒலிப்பதிவறைக்குள் அழைத்துச் சென்று ஒலிப் பொறியாளரை அறிமுகம் செய்து வைத்தார். 'சுனில், இத்தேகத்திண்டெ வோய்ஸ் எடுத்தோ. எங்ங்னயுண்டென்னு நோக்கட்டே!' என்றார்.
சமிக்ஞை கிடைத்ததும் பேசத் துவங்கினேன். இரண்டு நிமிடங்களுக்குப் பின் வெளியே வந்த போது கோயா தோளில் கையைப் போட்டுக் கொண்டே, "கொள்ளாம் கேட்டோ?!" என்றார் புன்னகையோடு. அப்படித்தான் மிக மிகத்தற்செயலாக நான் ஒலிபரப்புத் துறைக்குள் வந்தேன்" என்றேன்
"சரி! இப்போது உங்கள் விருப்பப் பாடலைத் தேர்வு செய்யுங்கள்"
"காலங்களில் அவள் வசந்தம்" பாடல் ஒலிபரப்பானது.
பாடல்முடிந்ததும் நேர்முகம் கண்ட ஜெயபிரகாஷ் சொன்னார் " நீங்கள் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாட்டை தேர்வு செய்தது உங்களுக்கு முன்னால் உங்கள் வானொலியில் பணிபுரிந்த பெண்ணுக்காகத்தானே?' என்றார். காற்றலையில் சற்று நேரம் சிரிப்பலைகள் பரவின.
****************************
காலை 8 மணி முதல் 9 மணி வரை. நேர்முகத்திற்காக அழைக்கப்பட்டு அமர்ந்திருந்தேன். எனது விருப்பப் பாடல்களையும் நேர்முகத்திற்கிடையில் ஒலிபரப்புவாரக்ள்.சில பாடல்களைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நேர்முகம் வழக்கமான முகம்னகளோடு தொடங்கியது
"எப்படி நீங்கள் ஒலிபரப்பு துறைக்கு வந்தீர்கள்?"
"ஏசியாநெட் வானொலியில் தமிழ்நிகழ்ச்சியை பெண்மணி ஒருவர் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் பேசிய தமிழ் மலையாளியான நிலைய இயக்குனருக்கே பிடிக்கவில்லை. என்வே மாற்றுக்காக ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. நண்பரொருவர் என்னை முயற்சி செய்யச் சொன்னார். நானும் 'சரி'யென்று ஒலிப் பேழையில் என்னைப் பற்றிய குறிப்பை பதிவு செய்து அனுப்பினேன். நிலைய இயக்குனர் கோயாவைச் சந்திக்கச் சொல்லி அழைப்பு வந்தது. போய் சந்தித்தேன்.
நிலைய இயக்குனர் அறையில் சந்திப்பு. எம்மாதிரி நிகழ்ச்சி என்பதை விளக்கினார் அவர். வாரம் மூன்று முறை ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்களை வழங்க வேண்டும்.அதற்கான தொகுப்புரை வழங்க வேண்டும். அவ்வளவுதான் என்றார்.
கொஞ்ச நேரம் பொதுவாக எனது பின்னணி குறித்து கேட்டறிந்தார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராகப் பணியாற்றியிருப்பது தெரிந்ததும் மகிழ்ந்தார். நிலைய இயக்குனர் முகைதீன் கோயாவுக்கு தமிழ தெரியாவிட்டாலும் தமிழ் மீது மிகுந்த மரியாதை இருந்தது. What a poetic language? என்று வியந்தார். சில தமிழ் - மலையாளப் பதங்களுக்கிடையிலிருக்கும் ஒற்றுமை குறித்துப் பேசிய பின் சில இசைத்தகடுகளைத் தந்து, 'இதிலிருந்து நான்கு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு உரை எழுதி நாளை மறுநாள் வாருங்கள். உங்கள் குரலைப்பதிவு செய்யலாம்' என்றார்.
'ஏன் நாளை மறுநாள் வரை காத்திருக்க வேண்டும்? இப்போது செய்ய முடியாதா? ' என்றேன்
'எழுதிக்கொள்ள வேண்டாமா?' என்றார்
'எதற்கு?' என்றேன்
மேலும் கீழும் பார்த்து விட்டு ஒலிப்பதிவறைக்குள் அழைத்துச் சென்று ஒலிப் பொறியாளரை அறிமுகம் செய்து வைத்தார். 'சுனில், இத்தேகத்திண்டெ வோய்ஸ் எடுத்தோ. எங்ங்னயுண்டென்னு நோக்கட்டே!' என்றார்.
சமிக்ஞை கிடைத்ததும் பேசத் துவங்கினேன். இரண்டு நிமிடங்களுக்குப் பின் வெளியே வந்த போது கோயா தோளில் கையைப் போட்டுக் கொண்டே, "கொள்ளாம் கேட்டோ?!" என்றார் புன்னகையோடு. அப்படித்தான் மிக மிகத்தற்செயலாக நான் ஒலிபரப்புத் துறைக்குள் வந்தேன்" என்றேன்
"சரி! இப்போது உங்கள் விருப்பப் பாடலைத் தேர்வு செய்யுங்கள்"
"காலங்களில் அவள் வசந்தம்" பாடல் ஒலிபரப்பானது.
பாடல்முடிந்ததும் நேர்முகம் கண்ட ஜெயபிரகாஷ் சொன்னார் " நீங்கள் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாட்டை தேர்வு செய்தது உங்களுக்கு முன்னால் உங்கள் வானொலியில் பணிபுரிந்த பெண்ணுக்காகத்தானே?' என்றார். காற்றலையில் சற்று நேரம் சிரிப்பலைகள் பரவின.
****************************
நேரலை நிகழ்ச்சிகளைக் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறை மருத்துவர் அக்பர் கவுசர் மற்றும் ரவி தமிழ்வாணன் ஆகியோருடன் நேர்முகம். அவர்களுடன் உரையாடிக் கொண்டே நேயர்களிடமும் அவர்களைப் பேச வைத்துக் கொண்டிருந்தேன்.
நிகழ்ச்சி நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
அடுத்ததாக வந்த அழைப்பு.
'வணக்கம்'
'வணக்கம். ஆசிப் மீரான் சாரா?'
ஆமாங்க. நான் தான் சொல்லுங்க'
'நல்லா இருக்கீங்களா?'
ம்ம் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா?'
'நல்லா இருக்கேங்க. ரொம்ப நாளா பேசணும்னு நெனச்சேன். இன்னைக்குத்தான்.."
"புரியுதுங்க. நன்றி! உங்க பேரு என்னன்னு சொல்லுங்க?'
பேர், ஊர் எல்லாம் சொன்னதன் பின், 'ரொம்ப நன்றிங்க. இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா ரெண்டு பேரு வந்திருக்காங்க. அவங்க கூட பேசுங்க"
கொஞ்ச நேரம் மௌனம்
'ஹலோ.. இருக்கீங்களா?"
"ம்ம் இருக்கேன்.
"அப்ப அவங்க கிட்ட பேசுங்க"
"இல்லீங்க. நான் அவங்க கிட்ட பேச போன் செய்யலை உங்க கிட்டத்தான் பேசணும்னு ரொம்ப நாளா காத்திட்டிருந்தேன். இன்னைக்குப் பேசிட்டேன். அது போதும்ங்க"
"ஹலோ" என்று நான் சொல்வதற்குள் இணைப்பு துண்டிக்கப்ப்ட அந்த நேரலை நிகழ்ச்சியில் நான் வியர்த்துப் போய் என்ன சொல்வதென்று விழித்திருக்க, ரவி தமிழ்வாணன் "நான் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முந்பே உங்களுக்கு ரசிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். இப்போது உறுதிப்படுத்திக் கொண்டேன்" என்றார் சிரித்தவாறே. அவர் மட்டும் அவ்வாறு சமாளித்து என்னைக் காப்பாற்றாமல் போயிருந்தால் அன்றைக்கு நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசியிருந்திருப்பேனா என்பது இப்போதும் சந்தேகமாகவே இருக்கிறது.
*******************************
இது போன்று பிரபலங்க்ளுடனான நேர்முகங்க்ளின் போது நிகழ்ந்த சில சுவரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடும். எப்போதென்பது எனக்கே தெரியாது
****************
தைத் திங்கள்தான் தமிழ் வருடப் பிறப்பு என்பது போய் மீண்டும் புத்தாண்டு வாழ்த்து முழக்கங்கள் கேட்கத் துவங்கி விட்டன. இந்த தமிழ்ப் புத்தாண்டுக்குப் பெயர் 'விரோதி'யாமே?! அடங்கொய்யால!! 'விரோதி'க்குக் கூட வாழ்த்துச் சொல்றதுதான் தமிழர் பண்பாடு போலிருக்கு.
நல்லா இருங்கடே!!
[] [] [] [] [] []
'அண்ணாச்சி! தமிழ்ப் புத்தாண்டுக்கு நம்ம வீட்டுல சாப்பிட வாங்க' என்று சரவணவேல் அழைத்தார். யாரு அவரு என்று நெற்றியைச் சுருக்க வேண்டாம். நம்ம குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான். (மரியாதையினால ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). 'என்னடா! இன்னைக்கு என்ன புத்தாண்டு'ன்னு கேட்டா 'கலைஞரே சொல்லிட்டாராம். 'இன்னுமாடா அவரு சொல்றதையெல்லாம் நம்பிக் கேட்டுக்கிட்டு இருக்குறீங்க?'ன்னு கேட்டேன். 'இருந்துட்டு போகட்டும் அண்ணாச்சி. வடை பாயசத்தோடு சாப்பிடுறதுக்கு இன்னொரு புத்தாண்டு வந்தா நல்லதுதானே?'ன்னு சொல்லிட்டான். தமிழன் சோத்துப் பிண்டம்ன்னு இதே கலைஞர் அன்னைக்கு தன் உடன்பிறப்புகளைப் பார்த்து சொன்னது இன்னைக்குக் குசும்பருக்கும் பொருந்துவதை நினைத்து மெய்சிலிர்த்தேன்.
[] [] [] [] [] []
சமீப காலமாக ஏதும் படிக்க நேரமில்லை. (படிச்சுட்டாலும்......) வளைகுடா திரைப்பட பெருவிழா நடக்கிறது. குறும்படங்களின் விழா என்பதாலும், வளைகுடா நாடுகளில் வாழும் படைப்பாளிகளின் திரையாக்கம் பார்க்க வாய்ப்பு என்பதாலும் மிக முக்கியமாக அனுமதி இலவசம் என்ப்தாலும் நம் அமீரகப் பதிவர்கள் யாரேனும் உற்சாகமாகப் பார்த்து விட்டு எழுதுவார்கள் என்று காத்திருந்தேன். ஒன்றுக்கும் வழியில்லாததால் நான் மட்டும் போய் மூன்று குறும்படங்கள் பார்த்தேன் . Press, Naked Human, Night இவைதான் படங்கள். முறையே ஈராக், குவைத், அமீரகப் படைப்பாளிகளின் உருவாக்கத்தில் வந்தவை. ஆனால், இந்த குறும்படத்திற்கான தொழில்நுட்ப உத்திகள் வியக்க வைக்கின்றன. ஒரு முழு நீளத்திரைப்படத்திற்கான சிரத்தையும் உழைப்பும் படத்தில் காண முடிந்தது. நாளை மீண்டும் முடிந்தால் பார்க்க வேண்டும். படங்களைப் பற்றி விரிவாகப் பின்னர்.
[] [] [] [] [] []
'அடர்கானகப் புலி'யும், 'கட்டுடைப்பு கவிஞனும்', 'குறி'யீட்டு நவீனத்துவவாதியுமான அய்யனார் தனது பிறந்த நாளை நேற்று இரவு (13.04.2009) துபாயில் அமைந்துள்ள கிராண்ட் ஹோட்டலில் மிக விமர்சையாகக் கொண்டாடினார். அவரது ரசிகைகளின் தொந்தரவு இருக்குமென்பதாலேயே அவரது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் நடைபெறும் இடம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் அவரது ஏராளமான ரசிகைகள் ஹோட்டலின் முன்பு கூடியிருந்தனர். (பெண்களாக இருந்தால் அவர்கள் தனது ரசிகைகளாக மட்டுமே இருக்க முடியுமென்று ஆழமாக நம்புகிறவர் அய்யனார் என்பதை அறிக)
ஒரு ரசிகை ஒரு தாளில் அவரிடமிருந்து கையெழுத்தும் பெற்றுக் கொண்டார். (சாப்பிட்டதுக்கு கிரெடிட் கார்டில் பணம் கொடுத்தால் கையெழுத்து வாங்காமல் என்ன செய்வார்களாம்?!)
அவரை வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் ஒரு கவிதை எழுதப் போவதாகச் சொன்னபோது பதறி எழுந்து அதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றியது நான் தான். இதற்காகவாவது எனக்கொரு விழா எடுக்கலாம் என்றாலும் புகழ்ச்சி அய்யனாரின் கவிதையைப் போல எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விசயம் என்பதையும் அறிக
பரோட்டாவும், சிக்கன் சில்லி ஃப்ரையும் (ஆஹா!!) பெப்பர் சிக்கனும் குலோப் ஜாமூனும் தந்து தனது பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய வள்ளல் அய்யனாருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
விகடனில் அய்யனாருடையது சொக்க வைக்கும் நடை என்று முன்பொருமுறை எழுதியிருந்தார்கள். நேற்று விடுதியை விட்டு அய்ய்னார் அகோரியைப் போல நடந்து வெளியில் வரும்போதுதான் கவனித்தேன். ஆஹா! எவ்வளவு பெரிய உண்மை?!
[] [] [] [] [] []
இருமலால் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தேன். என்னமோ காச நோய் வந்தவன் போல நான் இருமியதைப் பார்த்து முகம் சுளித்தவர்கள் அதிகம். நானும் அல்லோபதி, ஹோமியோபதி என்று அல்லோலகல்லோலபதியாகி நொந்து போயிருந்த வேளையில் ஒழுங்காகப் படித்த ஒரு மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தது த்ற்செயல்தான். அவரது புண்ணியத்தால் இப்போது இருமல் கட்டுக்குள் இருந்தாலும் ஏதோ ஒவ்வாமை காரணமாக (அட! கவிதை இல்லீங்க. இது உடல்ரீதியான ஒவ்வாமை) இது நிகழ்வதாகவும் அதற்கான சிகிச்சை அமீரகத்தில் மிக அதிகச் செலவு தரும் என்பதால் தாயகத்தில் அதற்கான பரிசோதனையைச் செய்யும்படியும் சொல்லியிருக்கிறார். இன்ஷா அல்லாஹ்!! செய்ய வேண்டும் விரைவில்.
[] [] [] [] [] []
துபாயின் கலாசாரத்தை மதித்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடுத்தல் போன்ற கட்டுடைப்புகளைச் செய்ய வேண்டாம்.கண்ணியமான ஆடை அணியுங்கள் என்று துபாய் அரசு வேண்டிக் கொண்டாலும் மேற்கைச் சேர்ந்தவர்கள் அணியும் ஆடைகளில் மாற்றம் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அதிலும் உலகத்திலேயே அதிகப் பரிசுத் தொகை கொண்ட குதிரைப் பந்தயப் போட்டிகள் துபாயில் நிகழ்ந்தபோது இவர்கள் அணிந்து வந்த ஆடைகளைப் பார்த்தால் அந்த அறிவிப்பை மேற்கத்தியர்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 'மாறாமலேயே இருந்தா என்ன அண்ணாச்சி கெட்டு போகப் போவுது?' என்று குசும்பன் கேட்டதை மட்டும் நான் வெளியில் சொல்லப் போவதில்லை
[] [] [] [] [] []
கம்யூனிசத்துக்கும் கேபிடலிசத்துக்கும் என்ன வித்தியாசம்?
கம்யூனிசத்தில் வங்கிகளை அரசுடைமையாக்கி பின்னர் திவாலாக்குவார்கள்
கேபிடலிசத்தில் திவாலான வங்கிகளை அரசுடைமையாக்குவார்கள்.
[] [] [] [] [] []
துபாயில் தூசிக் காற்று அடித்து அம்ர்க்களப்படுத்தியதில் ஆளாளுக்கு நொந்து போய் இருக்க தினமும் இதே போன்று காற்றடிக்க வேன்டும் என்று குசும்பர்ர்ர்ர்ர்ர்ர் மட்டும் கடவுளை வேண்டிக் கொள்கிறாராம். காரணத்தை அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் செங்கொடித் தோழ்ர்களுக்குக் கிடைத்த மரண அடியில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் அவர்கள் - கேரளத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குள்ளேயே நடந்த குடுமிப்பிடி சண்டை , தோழமை கட்சிகளுக்கிடையேயான தகராறு, தோழர்களின் அராஜகப் போக்குகள் எல்லாமாகச் சேர்ந்து எதிர்பார்த்த முடிவுகளையே தந்திருக்கிறது. கேரளமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் மேற்கு வங்கத்தில் மகா கூட்டணிக்கு முன்னால் மார்க்சிஸ்டுகள் சிதறு தேங்காய் போலச் சிதறிப் போவோமென்று தோழர்கள் கருதவேயில்லை.
யாருக்கு எப்படியோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீகைப் பொறுத்தவரை கேரளத்தில் இந்தத் தேர்தல் வாழ்வா சாவா மரணப் போராட்டமாக இருந்தது.

மதானி மார்க்ஸிஸ்டுகளோடு கைகோர்த்துக் கொண்டு முஸ்லீம் லீகை கடுமையாக விமர்சிக்க, மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டதாக காங்கிரஸ் மார்க்ஸிஸ்டுகளைச் சாட இம்முறை மதானியின் உணர்ச்சிமிக்க உரைகள் முஸ்லீம் லீகின் கோட்டைகளான பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதிகளை உடைத்து விட்டுத்தான் மறுவேலை செய்யப் போகிறதென்று ஊகங்கள் உலா வந்தன.
'சிவப்பணிகிறது மலப்புரம்' என்று செங்கொடித் தோழர்கள் உற்சாக முழக்கமிட கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தோடு தேங்கி நின்றதைப் போல இம்முறை நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் முஸ்லீம் லீக் உறுதியாக இருந்தது. அதன் தலைமை அதற்கான தீவிரப் பணிகளை முடுக்கி விட்டது. கட்சியின் அடிமட்டம் வரை நிர்வாகங்க்ள் தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. அதிருப்தியாளர்களை மீண்டும் கட்சியை நோக்கி இழுக்கும் முயற்சிகளை தலைமையே நேரடியாக மேற்கொண்டது. மலப்புரம் 'சிகப்பணியாமல்' பச்சை போர்த்திக் கொண்டேயாக வேண்டுமென்ற உறுதியோடு மிகத் தீவிரமாக தொண்டர்கள் இயங்கினார்கள்.
'இம்முறை கேரளத் தேர்தலில் மிக கடுமையாக உழைத்தவர்கள் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள்தாம்' என்று செஞ்சட்டைத் தோழர்களே தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுமளவிற்கு இழந்ததைத் திரும்பப் பெறும் கனவோடு மிகக் கடுமையான உழைப்பை முஸ்லீம் லீக் மேற்கொண்டது.
கேரளத்தைப் பொறுத்தவரை வடக்கு கேரளமான மலப்புரம் இசுலாமியர்கள் அதிகம் வாழும் இடம். எங்கே எந்த அலை வீசினாலும் மஞ்சேரி, பொன்னானி போன்ற இடங்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் லீக் வேட்பாளர்கள் ஜெயிப்பதென்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது
குறிப்பாக பொன்னானி 77இல் இருந்து தொடர்ந்து முஸ்லீம் லீக் வேட்பாளர்களையே தேர்வு செய்து வந்திருக்கிறது. பனாத்வாலா தொடர்ந்து இந்தத் தொகுதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்.
ஆனால், லீக் பணக்கார இசுலாமியர்களின் அரசியல் புகலிடம் என்ற கடுமையான குற்றச்சாட்டுடன் லீகைச் சேர்ந்தவர்களே வெளியேறியதும், லீக் இரண்டாகப் பிளவுபட்டதும், ஜமாத் தே இஸ்லாமி போன்ற அமைப்புகளும் இயங்கத் துவங்கியதும் முஸ்லீம் லீகைப் பலவீனப்படுத்தின என்றாலும் மஞ்சேரி (இப்போது மலப்புரம்) அசைக்க முடியாத பெருங்கோட்டையாகவே இருந்து வந்தது சென்ற தேர்தல் வரைக்கும்.
ஆனால், கடந்த நாடாளும்ன்றத் தேர்தலில் சுழன்றடித்த செங்காற்றின் முன்னால் பச்சைக் கொடி பதறிப் போனது. வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த ஈ.அகமது மட்டுமே பொன்னானி தொகுதியில் அசையாமல் நிற்க முடிந்தது. - கடந்த தேர்தலில் மஞ்சேரி தொகுதியில் லீக் தோல்வியடைந்தது அவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது.
அந்தத் தேர்தலில் இரண்டு இடங்களில் இருந்தும் 7,33,228 வாக்குக்ளை மட்டுமே பெற்றிருந்த லீக் இம்முறை கடுமையாக உழைத்து தனது மலபார் (மஞ்சேரி), பொன்னானி என்ற தனது இரண்டு தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்துக் கொண்டதென்பதோடு இம்முறை கடந்த முறையை விட சுமார் 80,000 வாக்குகள் அதிகம் பெற்றுக் கொண்டதென்பதும் குறிப்பிடத் தகுந்தது.
கடந்த முறை பொன்னானி தொகுதியில் லீகின் சார்பில் வெற்றி பெற்ற ஈ.அகமது இம்முறை மலபாரில் போட்டியிடத் தீர்மானித்ததும், அவர் பயந்து ஓடுவதாக செந்தோழர்கள் பரிகசித்தார்கள். ஆனால், பொன்னானி லீகின் கோட்டை என்பதால் இழந்து விட்ட மலபார் தொகுதியை மீட்பதற்காகவே ஈ.அகமது போன்ற சக்திவாய்ந்த வேட்பாளரை அங்கே நிறுத்துவதாக லீக் சொன்னது. சொன்னதைப் போலவே பொன்னானியை நிலை நிறுத்தியதோடு, இழந்து போன மலபார் தொகுதியையும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் லீக் நிலைநிறுத்திக் கொண்டது கம்யூனிஸ்டுகளை பெரும் கவலைக்குள்ளாக்கி யிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் சமீப தொகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, வடகரை, கண்ணூர் போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவும் முஸ்லீம் லீகின் உழைப்பும் ஆதரவும் பெரும்பங்கு வகித்திருக்கிறதென்று காங்கிரஸ்காரர்கள் சொல்வதில் இருக்கும் உண்மையை அரசியல் வல்லுனர்கள் ஆமோதிக்கிறார்கள். இதுதான் செஞ்சட்டைத் தோழர்களுக்குப் பெரும் தலைவலியாகவும் தொடங்கியிருக்கிறது.
இந்தக் கதைகளைச் சொல்வதற்கு நான் முஸ்லீம் லீக் ஆதரவாளன் என்பது காரணமில்லை. கேரளத்தில் இசுலாமியர்களுக்கென்று பாரம்பரியமான தொகுதிகளும் அதில் உறுதியான வெற்றி வாய்ப்புகளும் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் நிலை அவ்வாறில்லை. ஏதேனும் திராவிடக் கட்சிகளின் சார்பில் ஒரு இடத்தைக் கேட்டு பெறுவதே கூட முஸ்லீம் லீக்கின் பெரும் சாதனையாக இருக்கிறது.
இந்த நிலையில் துபாயில் இஸ்லாமிய வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் அப்துல் ரஹமான், வேலூர் தொகுதியில் தொகுதிக்குப் புதியவ்ரென்றாலும் முஸ்லீம் லீக் சார்பாகப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
பெரும் காங்கிரஸ்தலைகளே உருண்டு விட்ட நிலையில், வென்றவர்கள் கூட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தலை தப்பியிருக்கிறார்கள் என்ற சூழலிலும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் மிக உறுதியான வெற்றியைப் பெற்றிருக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மானுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!!
நேற்று தொடங்கிய கட்சிகளெல்லாம் தங்களது சொந்தச் சின்னத்தில் தேர்தலை மேற்கொள்ளும்போது பாரம்பரியம் மிக்க கட்சியாக தன்னை முன்னிறுத்தும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தமிழகத்தில் நடைபெறும் அடுத்த தேர்தலிலாவது தனது சொந்தச் சின்னத்தில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக