குறிப்பு : இது ரூம் போட்டு யோசிச்சு அடித்த செய்தி
முழுவதுமாக நம்பிய அன்னை சோனியா சென்னை விஜயத்தை ரத்து செய்ததால் தமிழர்களின் தலைவர் மு கருணாநிதி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபாக்சேவின் உதவியை நாடி உள்ளார். ஆகவே வரும் 11 ஆம் தேதி அன்று சென்னை தீவுத் திடலில் கட்சியினர் புடை சூழ தமிழர்களின் ஒரே தலைவர் வரலாற்று நாயகன் முத்து வேல் கருணாநிதி முன்னிலையில் ராஜபாக்சே சகோதரர்கள் (குறிப்பாக கொதபாயா) டி ம் கே உக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கூட்டத்தில் இலங்கை நாட்டில் உள்ள பல புத்த துறவிகளும் பங்கு கொள்ள இசைவு தெரிவித்து உள்ளதாக அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்வு நிலை பற்றி பேச போவதாக தகவல்.
இனி இந்தியாவை நம்பி தன் கட்சியை வளர்க்க போவதில்லை என கருணாநிதி தெரிவித்து உள்ளதாக அந்த கட்சியின் அதிகார ஊடகம் கொலைஞர் டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை வரும் ராஜபாக்சே சகோதரர்கள் கலைஞர் அவர்களின் துணைவியார் வீட்டில் தங்கி வேறு சில நகரங்களுக்கும் சென்று கட்சிக்காக தீவிர ஒட்டு சேகரிக்க உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்து உள்ளது
இந்த சென்னை விஜயம் குறித்து ராஜபாக்சே கருத்து சொல்லும் போது இந்தியா இலங்கைக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு பிரதிபலனாக அவர்கள் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறி உள்ளனர்.
அன்பு நண்பா உனக்கு,
எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்
மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது
கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்
உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !
புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்
மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது
சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்
மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !
கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்
தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது
கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்
இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !
ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,
என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்
துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக