ஈழம் குறித்த சினிமாவை பாரதிராஜா இயக்குகிறார்
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3584:2009-05-31-09-37-02&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56
ஐ.நா. தமிழர்களைத் தோல்வியடைய வைத்துள்ளது – சுரேன் சுரேந்திரன்
சிறிலங்கா இராணுவத்தால் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த அறிக்கைகளின் பின்பும் ஐ.நா.வானது நடவடிக்கை எடுக்கப் பயப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்றவர்களும் உடனடியாகச் செயற்பட வேண்டும் என பிரித்தானியா கார்டியன் பத்திரிகையில் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வானது தனது பலவீனத்தையும், மனதாபிமானத்தைக் காப்பாற்ற முடியாமையையும், மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.
ஐ.நாவின் செயலின்மையால் ர்வான்டா, போஸ்னியா, காசா, மற்றும் டார்வர் போன்ற நாடுகளில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள் இன்னும் பலர் இடம்பெயரப்பட்டார்கள் என சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தும் பாடங்கள் ஐ.நாவால் படிக்கப்படவில்லை. உலகத் தமிழ் மக்கள், அரசியல் ஆராய்வாரள்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் உதவி பணியகங்கள் சேர்ந்து பல எச்சரிக்கைகள் விடுத்திருந்தும் ஐ.நா. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பாதிப்புள்ளாக்கியுள்ளது.
ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டுவரவோ அல்லது பாதுகாப்பு வலயங்களுக்குச் சென்று மக்களின் அவலநிலைகளைப் பார்க்கவோ ஐ.நா ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் கார்டியனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கைகளின் விவரங்களும் மற்றும் மக்களின் மனிதாபிமான அவலத்தின் தகவல்களும் ஐ.நா.வுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளன என்று அண்மையில் வெளிவந்த நம்பக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் உண்மைகளும் இன்னும் ஐ.நாவால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனரக ஆயுதங்களும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் மீது பாவிக்கப்பட்டதற்கு ஆதாரங்களான செய்மதிப் படங்களும் ஐ.நாவிடம் இருந்துள்ளன.
ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகளும், செயலின்மையும், அவரின் கடமையை முழுதாக உதாசீனப்படுத்தியுள்ளதையே தமிழர்களுக்கு காட்டியுள்ளது.
ஒரு முறையான சுயாதீன விசாரணையே சிறிலங்காவின் இன அழிப்புத் தொடர்பான உண்மைகளையும் அதில் ஐ.நாவின் பங்கையும் வெளியே கொண்டுவரும் என்று தமிழர்கள் நம்புகின்றார்கள்.
சட்ட வழிகள் ஊடாக சிறிலங்காவையும் மற்றும் ஐ.நா. அதிகாரிகளையும் விளங்குவதும், மற்றும் இடப்பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை இல்லாமல் செய்வதும், இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, தென்.ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மனிதாபிமான கோட்பாடுகளை நம்பும் நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே உள்ளது, என கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக