வியாழன், 28 மே, 2009

2009-05-28



More than a Blog Aggregator

by விஜயபாபு பூபதி
என்னை பற்றி : பெயர் : விஜயபாபு பூபதி.
வயது : 27.
ஊர்: அசகளத்தூர்.
தொழில்: கணிப்பொறி வல்லுனர்.

எனக்கு நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்பது அவா. உனக்கு என்னடா அதற்க்கு தகுதி என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. எல்லாம் 7 வயதில் இருந்து மாலைமதியும் , ராணிமுத்துவும் படிக்க ஆரம்பித்து , 9 வது வயதில் பாலகுமாரன் , ராஜேஷ்குமார் , பட்டுகோட்டை பிரபாகர் மற்றும் சுபாவும், பின்னர் ஜயகாந்தனையும், சுஜாதாவையும் தேடி தேடி படித்த அனுபவம் தான். இந்த அனுபவம் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை தான் நான் எழுத தூண்டியது.

இவ்வளவு நாட்களாக, எழுதாமல் இருந்ததற்கு காரணம், என்ன எழுதவது என்று தெரியாதது தான். கடந்த இரு வருடங்களாக, ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரம்(வேலையே இது தான்), வலையில் எழுதுபவர்களின் எழுத்தை படிக்கும் போதெல்லாம், நாமும் ஏன் எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றி மறையும். இரண்டு வருடம் துபையிலும், இரண்டு வருடம் ஆப்கானிலும் ஜல்லி அடித்து இருந்தாலும், "இந்த தமிழன், இந்தி பேச மாட்டான்" என்று சொல்லி வந்த நாம், ஏன் எழுத கூடாது? என்று என் மனதை தேத்தி கொண்டு , எழுதுகிறேன். ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நான் கிறுக்க போவதில் ஒன்றும் உபயோகமாய் இல்லை என்றாலும் , கண்டிப்பாக எழுத்து பிழை இருக்காது (முயற்சி செய்வேன்).

தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசையினால் தொடங்கப்பட்ட பதிவே இது.
வெயில் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் வரும் பாண்டியம்மா (ஷ்ரேயா ரெட்டி) சந்தேக புத்தி உடைய தன் கணவனைப் பற்றி தன் பால்ய நண்பன் முருகேசனிடம் (பசுபதி) புலம்பி விட்டு சொல்லுவாள்,

"பொறந்ததிலருந்தே இந்த தீப்பெட்டிக்குத்தான் வாழ்க்கைப் பட்டிருக்கேனோ என்னமோ!!!".

படம் பார்த்த பிறகு ராஜ் எழுதிய ஒரு கவிதை

தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!
-த.ராஜசேகர்


More than a Blog Aggregator

by பிரசாத்
சில நாட்களுக்கு முன்னால் மருத்துவத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் "Autopsy of Human Body"என்ற தலைப்பில் ஒரு Google Video'வின் Link'ஐ அனுப்பி இருந்தார்.

சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய video அது. ஒரு மேசையின் மீது ஒரு உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர் ஒருவர் அந்த உடலை ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து அந்த பாகத்தை பற்றி விவரிக்கிறார். ஒவ்வொரு பாகத்தின் பெயரையும் சொல்லி அதுஎப்படி இருக்கிறது எப்படி இருந்திருக்க வேண்டும் என விவரிக்கிறார்.

மருத்துவர் என்னவோ ஒழுங்காகத்தான் விளக்குகிறார் ஆனால் எனக்குத்தான் ஒவ்வொரு பாகத்தையும் வெட்ட வெட்ட ஏதோ கசாப்புக்கடையில் இருப்பது போன்ற உணர்வு. ஒருவேளை மருத்துவம் படித்தவர்களுக்கு அந்த மாதிரி தோணாதோ என்னவோ!!!

சற்று கடுமையாகத் தோன்றியதால் அந்த video'வை embed செய்யாமல் link'ஐ மட்டும் கீழே கொடுத்துள்ளேன். சின்ன sample'ஆக ஒரு காட்சியின் Thumbnail picture கீழே இருக்கிறது. (படத்தை என்னால் முடிந்த அளவு சிறியதாக கொடுத்திருக்கிறேன், பெரிதாக பார்க்க படத்தின் மீது click செய்யுங்கள்). இந்த video'வை பார்ப்பதா வேண்டாமா என அந்த படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.


எச்சரிக்கை: தைரியசாலிகள் போல் நடிக்கத் தெரியாதவர்கள் இந்த video'வை தவிர்ப்பது நல்லது


More than a Blog Aggregator

by பிரசாத்
விவசாயிகளின் SEZ எதிர்ப்பு போராட்டத்தை கையாள மேற்கு வங்க அரசும் JSW Steel நிறுவனமும் சேர்ந்து ஒரு புது மாதிரியான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி SEZ'க்காக நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த நிலத்திற்கான பணத்தை தருவதுடன் அவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். மேலும் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த தொழிற்சாலையின் பங்குகளும் அளிக்கப்படும்

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று நிலத்தை இழந்தாலும் அங்கே கட்டப்படும் நிறுவனத்தில் வேறு வேலை கிடைப்பதால், இதுவரை விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த மக்களுக்கு ஒரு புது வாழ்க்கை கிடைக்க வழி பிறந்திருக்கிறது.

இரண்டாவது அந்த தொழிற்சாலையின் பங்குகள் அளிக்கப்படுவதால் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவரும் அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் பங்குதாரர்களாகின்றனர். இதனால் நிலம் கையை விட்டு போனாலும் அதற்கு சமமாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் அவர்களிடம் வந்து சேருகிறது.

இதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்த மக்களுக்கு அந்த தொழிற்சாலையில் என்ன மாதிரி வேலை கிடைக்கும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த திட்டம் குறைந்தபட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காவது வழி வகுக்கும். இந்த யோசனை சற்று காலதாமதமானதுதான் என்றாலும் "Better Late than Never" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். சந்தோஷம்!!
ஆனால் விவசாயம்? அதை எப்போது காப்பாற்றப்போகிறோம்??
டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் " என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?முல்லா , " இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! "நண்பர் " என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? "என்றார்,முல்லா " நான் ஒரு ஆண்மகன்தான் ! "நண்பர் " அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? "முல்லா " நான் நிச்சயமாக

கருத்துகள் இல்லை: