வியாழன், 28 மே, 2009

2009-05-28



More than a Blog Aggregator

by சின்ன அம்மிணி
நாங்கள் வசிக்கும் இரண்டு வீடுகள் தள்ளி ஒரு இந்தியக்குடும்பம் வசிக்கிறது. பெல்காமைச்சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். வீட்டின் பின்னால் ஒரு ஷெட் இருக்கிறது. அங்கே ஒரு மைனா கூடு கட்டி குஞ்சு பொறித்திருக்கிறது. அவர்கள் பெண் குழந்தைகள் இரண்டு பேருக்கும் இதை கவனித்துக்கொள்வதுதான் வேலையாம் தினமும். வீட்டின் பின் பெரிய தோட்டம். பியர்ஸ் , சிட்ரஸ் என்று நிறைய மரங்கள். அதிலும் ஒரு மரத்தில் குருவிக்கூடு. முட்டை பொறித்து குஞ்சுகள் பறக்கத்தயாராய் இருக்கிறது.



இவர்கள் இருப்பது வாடகைக்கு, இன்னும் ஆறு மாதங்கள் இவர்களுக்கு காண்ட்ராக்ட். இவர்கள் காலி செய்தபின் வீட்டை இடித்து 3 Unit Houses கட்டப்போகிறாராம் வீட்டு சொந்தக்காரர்.





நாங்கள் இருக்கும் Unit வீடும் இப்படி பெரிய வீடும் தோட்டமுமாய்த்தான் இருந்ததாம். ஒரு கம்போடியாக்காரர் வாங்கி 2 படுக்கை அறைகொண்ட 4 வீடுகளாய் மாற்றி விட்டார். தோட்டமெல்லாம் கிடையாது :(


------- ******* --------




மெல்பர்னில் சாலையில் நடக்கும்போது பார்த்தால் ஆங்கிலமல்லாத மொழிகள்தான் அதிகம் பேசப்படுகின்றன. இங்கே எல்லா நாட்டைச்சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். ஆங்கிலமல்லாத மொழிகள் பேசும் ஐரோப்பியர்கள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள், ஈராக்கியர்கள், நிறைய இந்திய மாணவர்கள், இலங்கைத்தமிழர்கள், சோமாலியர்கள், மற்ற ஆப்பிரிக்க தேசத்தவர்கள் என்று அனைவரையும் பார்க்க முடிகிறது. அதே போல் மெல்பண், மெல்பேண் போன்று Melbourne வித்தியாசமாக அழைக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி - ட்ரிப்ளிகேன் ஆன மாதிரி மெல்பர்னும் வேறு பேரில் மருவும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.




------------ ******** __________




மெல்பர்னில் ஒரு சிவா விஷ்ணு கோயில் இருக்கிறது. எல்லா விசேடங்களுக்கும் பூஜை நடக்கிறது. ஆங்கிலப்புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் , பின் அன்ன தானம் இருந்தது. நீர்மோர், பழரசம் இலவசமாக விநியோகித்துக்கொண்டிருந்தனர். மெல்பர்ன் வாழ் இந்தியர்கள் அனைவரும் அன்று அங்கு தான் இருந்தனர். (நாங்கள் அன்னதானத்துக்கு இருக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் மதியம் உணவுக்கு வருவதாக இருந்தது)



------- ************* -----------




நான் வேலைக்குசேர்ந்த இரண்டு நாள் கழித்து ஒரு சீனப்பெண்மணியும் புதிதாக வேலைக்குச்சேர்ந்தார். உன்னிப்பாக கவனித்தால்தான் கொஞ்சமாவது புரிகிறது அவர் பேசுவது. "கேன் யூ மேக் முலுக்கு" என்றார். " டூ யூ மீன் முறுக்கு" என்றேன். யா யா, ஐ லவ் தோசை என்றார். மலேசியாவைச்சேர்ந்த சீனராம். அதனால் தென்னிந்திய உணவுவகைகள் பற்றித்தெரியும் என்றார்.





மூன்று வருடங்களாக ஆஸியில் இருக்கின்றனராம். கணவர் சிவில் இன்சினியர். ஆனால் அந்தத்துறையில் வேலை கிடைக்காமல் வேறு எங்கோ வேலை செய்கிறாராம்.





------- ********** _____





மெல்பர்னில் Water Restriction அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு 155 லிட்டர் தண்ணீர்தான் செலவிட அனுமதி. மீட்டர் உள்ளது எல்லா வீடுகளுக்கும். செடிகளுக்கு வாரம் இரண்டு முறை காலை 6.30 - 8.30 க்குள் மட்டுமே தண்ணீர் விடவேண்டும். மெல்பர்னின் வளரும் மக்கள் தொகைக்கு ஈடு குடுக்க முடியாமல் இயற்கை திணறுகிறது. (முதல் பத்தியை திரும்பவும் படிங்க)







-------- *********** -------





எனக்கு பட்டாம்பூச்சி விருது குடுத்த பப்புவுக்கும் சந்தனமுல்லைக்கும் நன்றி.





கிசுகிசு: கானா பிரபா அதிகாரபூர்வமாக பாவ்னா ரசிகர் ஆகிவிட்டார் என்று மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.



Face Book ல ரஜினிக்கு ஐயாயிரத்து சொச்சம் ரசிகர்கள். மாதவனுக்கு இரண்டாயிரத்து சொச்ச ரசிகர்கள். மிஸ்டர் பீனுக்கு 1661971 சொச்ச ரசிகர்கள். நானும் மிஸ்டர் பீனுக்கு முதல்ல ரசிகை அப்பறம் தான் மத்தவங்களுக்கு. :)


இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான [ கைகலாசவாகனம் , சப்பரம் ] புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்


இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்
இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்



இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்
இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான [ கைகலாசவாகனம் , சப்பரம் ] புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்


இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்


More than a Blog Aggregator

by சின்ன அம்மிணி
மெல்பர்னில் தொடர்ந்து மூன்று நாட்களாக 43 டிகிரிக்கும் மேலாக வெய்யில். கடும் வெய்யில் காரணமாக ரயில்கள் ரத்து. தண்டவாளங்களில் விரிசல். தீயால் 10 வீடுகள் எரிந்து போயின. பலரும் ஏர் கண்டிஷன் போட்டதால் லோட் தாங்காமல் ட்ரான்ஸ்பார்மர் பழுதானதில் பலருக்கு மின்சாரம் போனது. ஒரே நாளில் சரி செய்யப்பட்டாலும் இதில் கஷ்டப்பட்டவர்கள் வயதானவர்கள்தான்.

வெள்ளி மதியம் 45.1 டிகிரி வெப்பம் இருந்தது. வெய்யில் தாங்க முடியாமல்
குறைந்தது ஆறு பேர் இறந்து போனார்கள்.


Melbourne again endured a top temperature above 43 degrees, marking the first time since records began in 1855 that the city notched up three consecutive days so hot.

-----

வெய்யில் தாங்கமுடியவில்லை எனும் போது தான் முத்துக்குமரன் தீக்குளித்த செய்தியும் படிக்க நேர்ந்தது. தீக்குளித்த முத்துக்குமரன் எவ்வளவு வெம்மை தாங்கியிருக்கிறார். தற்கொலை சரியல்லதான் என்றாலும் அரசியல்வாதிகள் இதன்மூலமாவது ஏதாவது செய்யமாட்டார்களா என்ற எண்ணமே அவருக்கு மிஞ்சியிருந்திருக்க வேண்டும். தற்கொலையை விடுத்து நீங்கள் வேறு ஏதாவது செய்திருக்கலாமே முத்துக்குமரன் :(

ஈழமக்கள் படும் வெம்மை எப்போது தணியும்?

முத்துக்குமரன் எழுதியிருக்கும் கடைசிக்கடிதம் இங்கே படியுங்கள்

கருத்துகள் இல்லை: