வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

இப்போதைக்கு பெங்களூரு வாசம்.

எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்றாலும், இருக்கும் வரைக்கும் "நம்ம ஊரு" என்ற நெனப்போடு சுற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் மழை, கொஞ்சம் வெயில், வெட்டப்படாமல் தப்பித்து இன்றோ நாளையோ என்று ஐ.டி ஊழியரை போல பயந்து கொண்டிருக்கும் அகன்ற மரங்கள் என்று எல்லாமே எனக்கு ஹைதராபாத்தை விட வித்தியாசமாக இருக்கின்றன.

அமச்சி ஊரிலிருந்து வந்திருக்கிறார். நைலான் பெல்ட் கட்டில் ஒன்று வாங்க வேண்டும். தொள்ளாயிரம் ரூபாய் என்றார்கள். குறைத்துக் கேட்கலாம் என்று எழுநூற்றைம்பது என்றேன். எடுத்துக் கொடுத்து விட்டார்கள். பெருமையாக அப்பாவிடம் சொன்னேன். நானூறுதானே நம் ஊரில் என்றார். எந்த விதத்திலும் நான் புத்திசாலி என்று நினைத்து விடாமல இருக்குமாறு இந்த உலகம் பார்த்துக் கொள்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பாக எதற்காக எழுத வேண்டும் என்ற நண்பரிடம், "ஆத்ம திருப்தி" க்கு என்று பொய் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டேன். என் பெயரை கொஞ்சம் பேருக்கு தெரியும் என்பதில் வரும் கர்வமும், என‌க்கும் எழுத வரும் என்ற பெருமையும்தான் எழுதுவ‌த‌ற்கான‌ அடிப்ப‌டையாக‌ இருந்த‌து.

பின்ன‌ர் அந்த‌ நோக்க‌ம் ப‌ல்வேறு திசைக‌ளில் சுற்றி வ‌ந்து கொண்டிருக்க‌, இந்த‌ சுற்ற‌லின் போக்கிலேயே எழுதுப‌வ‌னின் வேக‌ம் இருக்கிற‌து.

என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் க‌விதை என்ப‌து கையெழுத்துப் ப‌ழ‌க்க‌ம் போன்ற‌து. தொட‌ர்ந்து எழுத‌ வேண்டும். இல்லையென்றால் இதுவ‌ரையிலும் வ‌டித்த‌ அமைப்பு சிதைந்து வேறொரு வ‌டிவ‌த்துக்கு வ‌ந்துவிட‌லாம். புதுவ‌டிவ‌ம் வெற்றிய‌டைய‌லாம் அல்ல‌து தோல்விய‌டைய‌லாம்.

ஸ்ரீநேச‌ன் என்ன‌வெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேயிருங்க‌ள் அது க‌விதையாக‌ இல்லாவிடினும் ப‌ர‌வாயில்லை என்றார். அதுவெல்லாம் "எச‌வாக‌வில்லை".

ஆறு மாதங்களாக எதுவுமே எழுதவில்லை.நான் எழுதாததால் ஒன்றுமே மாறிவிடப்போவதில்லை. யாராவது எங்காவது எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்கள். எவராவது அதைப் படித்து எழுதியவரின் பெயரை உச்சரிப்பார்கள்.

எழுதுவ‌து என்ப‌து தொட‌ர்ச்சியான‌ உழைப்பு. வாசிப்பும், எழுத்தும் தொட‌ர்ந்து இருந்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ப‌திவிட்ட‌வை எல்லாம் ஏற்க‌ன‌வே எழுதிய‌ ப‌ழைய‌ க‌விதைக‌ள். நேற்று முன் தின‌ம் ஒரு க‌விதை எழுத‌ முடிந்த‌து. இது புதுசு!



உயிர் க‌சியும் ம‌ர‌ம்

மரம் ஒன்றை
வெட்டியெறிகிறார்கள்.

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுக்கிறார்கள் என்றேன்
கிழ‌வியை கோடாரியால் பிள‌க்கிறார்க‌ள் என்றாய்

குழ‌ந்தையின் க‌ழுத்தை பிளேடால் அறுப்ப‌தும்
கிழ‌வியை கோடாரியால் பிள‌ப்ப‌தும்
உனக்கும் எனக்கும் புதிதாக‌ தோன்றாத‌தால்
வேறொன்றை யோசிக்க வேண்டிய நிர்பந்தம்
நமக்கு.

அவசரமாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வெட்ட‌ப்படும் மரமொன்று
நாம் த‌னித்திருக்கும் மாலையை
ஆக்கிர‌மிக்க‌ விரும்பாத
இருவ‌ருமே
பேச்சை மாற்ற முயல்கிறோம்.

முத்த‌ம் ப‌ற்றி நான் ஆர‌ம்பிக்கிறேன்
ஸ்ப‌ரிச‌ம் ப‌ற்றி நீ.

வெளிச்ச‌ம்
வ‌டிய
இழந்த குஞ்சுகளையும்
கூடுகளையும்
தேடும்
ப‌ற‌வைக‌ளின்
ப‌த‌ட்ட‌ம்
ந‌ம் த‌னிமையை க‌லைக்கிற‌து.

இன்று
இந்த‌ மாலையை
இந்த‌ இட‌த்தை
விரைந்து கட‌க்க‌ பிரார்த்திக்கிறோம்.

நேர‌மாவதாக சொல்கிறாய்
நானும் ஆய‌த்த‌மாகிறேன்.

முத்த‌ம் இல்லாத‌
இந்த‌ மாலையில்
இற‌ந்து கொண்டிருக்கும்
இந்த‌ மர‌த்தை
பார்த்துவிட்டு ந‌க‌ர்கிறோம்.

ந‌ம் முத்த‌ங்க‌ளின்
சாட்சி
உயிர்
க‌சிந்து கொண்டிருக்கிற‌து.
உலகத் திரைப்படங்கள், உலகத் திரைப்படங்கள் என்று அடிக்கடி பலர் உரையாடுகிறார்களே... அதென்ன உலகத் திரைப்படம்? அதில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது? அதை ஏன் நாம் பார்க்க வேண்டும்? ரசிக்க வேண்டும்? சரி, பார்க்கும் ஆவல் இருந்தாலும் உலகத் திரைப்படங்களை எங்கு சென்று பார்ப்பது? அந்தப் படங்களின் டிவிடி எங்கு கிடைக்கும்?

இப்படியான பல கேள்விகள் கொசுவர்த்திச் சுருளைப்போல பதிவர்களாகிய நம் மனதில் வட்டமிடுகிறது அல்லவா? இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சிதான் 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்'பின் சார்பாக நமக்கு நாமே ஆரம்பித்துள்ள திரைப்பட இயக்கம்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒரு உலகத் திரைப்படம் திரையிடப்படும். படம் முடிந்ததும், அந்தப்படம் குறித்த உரையாடல் நிகழும்.

பதிவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். ஆனால், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.

இது முற்றிலும் பதிவர்களாகிய நம் விருப்பத்துக்காக, நாம் ரசிப்பதற்காக, நமது போதாமையை களைவதற்காக நமக்கு நாமே எடுக்கும் சிறு முயற்சி. எனவே நுழைவு - உறுப்பினர் - ஆயுள் - என்றெல்லாம் எந்தக் கட்டணங்களும் திரைப்படங்களைப் பார்க்கக் கிடையாது.

ஓரளவு பெரிய திரையில் படங்கள் திரையிடப்படும்.

புரொஜக்ஷன் மற்றும் திரையரங்க ஹாலுக்கான கட்டணத்தை கிழக்கு பதிப்பகம் பத்ரி ஏற்கிறார்.

பதிவுலகை சாராத, பதிவுகளை மட்டும் வாசிக்கும் நண்பர்களுக்கு அனுமதியில்லை. திரைப்படம் பார்க்க ஆர்வம் இருந்தால் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்துவிட்டு வாருங்கள்.

முதல் படியாக, ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு படம் திரையிடப்படுகிறது.

படத்தின் பெயர்: ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்
நாடு : கொரியா
இயக்குநர் : கிம் கி டுக்
நாள் : ஜூன் 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 4 மணி
இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை

(கிழக்கு பதிப்பகத்துக்கு நேர் எதிரில், ஆழ்வார்பேட்டை சிக்னலில் இருந்து பக்கம்)

நமது நண்பரும், சக பயணியுமான அக்னிப்பார்வை கிம் கி டுக் குறித்த ஒரு அறிமுகத்தைத் தன் வலைத்தளத்தில் எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவரைப் போல் கிம் கி டுக் குறித்து அறிந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைத்தளத்தில் எழுதினால், பயனுள்ளதாக இருக்கும். முன்பே கிம் கி டுக் குறித்து பதிவு எழுதியிருப்பவர்கள் பதிவின் லிங்கைப் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

இந்த திரைப்பட இயக்கத்தை செழுமைப்படுத்த உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இது நம் வீட்டு விழா. எனவே நம்மை நாமே 'வருக, வருக' என வரவேற்றுக் கொள்வோம் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்
அமைப்பு சாரா தொழிலாளியின் அவல நிலை!
- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

*****
யாரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்? ஏனெனிந்த நிலைமை? அவர்கள் எந்தெந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற கான்டிராக்ட் கலாச்சாரம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது. கான்டிராக்ட் முறை என்றால் என்ன? வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் பொழுது, கங்காணிமுறை என்றிருந்தது. பர்மா, இலங்கை, பினாங்க்கு தோட்ட தொழிலில், காடுகளில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் ஆட்களை கொண்டு சென்றார்கள். அந்த முறைக்கு பெயர் தான் கங்காணி முறை.

சுதந்திரத்திற்கு பிறகு சிறுக சிறுக ஒப்பந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசு துறைகளிலும், மற்றும் பெல், லிக்னெட் கார்ப்பரேசன், உர நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களில் நியமிக்க தொடங்கினார்கள். அரசு என்பது ஒரு முன்மாதிரி வேலைதருபவராக (Model Employer) நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், அரசே இங்கு ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி ரூ. 3000. நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி ரு. 12,000. நான்கில் ஒரு பங்கு தான் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி.

ஒப்பந்த தொழிலாளியின் முதலாளி யார்?

ஒப்பந்த தொழிலாளி வேலை செய்யும் இடம் பொதுத்துறை நிறுவனம். தொழிலாளியிடம் வேலை வாங்குபவன் பொதுத்துறையை சேர்ந்த மேனேஜர்ஸ், ஆபிஸர்ஸ். அந்த தொழிலாளி அந்த துறையில் உற்பத்தி பிரிவில்.. வெல்டராக (Welder) வேலை செய்வான்.

அவனருகிலேயே அதே வேலை, வேலையின் அளவு செய்யும் நிரந்தர தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 12,000. ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 3000 மட்டும்.

நிரந்தர தொழிலாளிக்கு

போக்குவரத்து படி உண்டு
கேன்டின் வசதி உண்டு
வீட்டு வசதி உண்டு
பிள்ளைகளுக்கு கல்வி வசதி உண்டு
சங்கம், சங்க அலுவலகம் அனுமதி உண்டு
ஸ்டாண்டிங் ஆர்டர் உண்டு.

இதில் எந்த சலுகையும் ஒப்பந்த தொழிலாளிக்கு கிடையாது.
ஒப்பந்த தொழிலாளியை எப்பொழுது வேண்டுமென்றால் பணியில் அமர்த்தலாம். வேண்டாம் என்றால் தூக்கியெறியலாம்.

சமூக பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும், வாழ்வதற்கு போதிய ஊதியமும் இல்லாமல் வாழ்பவன் ஒப்பந்த தொழிலாளி.

ஒப்பந்த தொழிலாளி தொழிலாளிக்கான உரிமையை கூட கேட்க முடியாது. சங்கமாக சேரக்கூடாது. அப்படியே சங்கமாக சேர்ந்தாலும் நிர்வாகம் அச்சங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

ஒப்பந்த தொழிலாளி கூலி உயர்வு கேட்டால்... நிர்வாகம் "நீ என்னுடைய தொழிலாளி அல்ல" என்பான். கான்டிராக்டரிடம் போய் கேட்டால், நிர்வாகம் என்ன குடுக்கிறானோ அதை தான் உன்னிடம் கொடுக்கிறேன். கூடுதலாய் வேண்டுமென்றால், நிர்வாகத்தைப் போய்க்கேள் என்பான். இங்கே கேட்டால் அங்கே கேள்! அங்கு கேட்டால் இங்கே கேள்! என்கிறான்.

கான்டிராக்ட் முறை என்பதே அரசு தெரிந்தே செய்யும் மோசடி. யாரை மோசடி செய்கிறது இந்த அரசு? பாகிஸ்தானியனையோ, இலங்கைகாரனையோ அல்ல! இந்த நாட்டின் குடிமகன்களை மோசடி செய்கிறான். இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லக்கூடிய அரசு வஞ்சிக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்படும் கூலி எவ்வளவு? அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

****

மேலும் சில குறிப்புகள்

வழக்கறிஞர் பாலன் சொல்வது பல பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களைப் பற்றி சொல்கிறார். ஆனால், தனியார் துறை நிறுவனங்களில் தான் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பாலன் அவர்கள் சொல்வதை விட அவலங்களும் நிரம்பியது. அவருடைய உரையின் பின்பாதியில் அதை பற்றியும் விவரிக்கிறார். தொடந்து படித்து வாருங்கள். நன்றி.
மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை ம..........
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

கருத்துகள் இல்லை: