வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே
என்னிடம் வாருங்கள்
இம்முறை
என் பாரத்தினை
உங்களிடமிருந்து இறக்கிக் கொள்வேன்
என்னிடம் வாருங்கள்
இம்முறை
என் பாரத்தினை
உங்களிடமிருந்து இறக்கிக் கொள்வேன்
ஒரேயொரு சொல்
குதித்தோடும் ஒரேயொரு
சொல்லிலிருந்தே உருவானாய்
சப்தங்களாய்ச் சேகரமானாய்
நினைவிடுக்குகளில் மணல்துகளாய்
உறுத்திக்கொண்டிருந்த நீ
உன் தொடையில் பூனை குதித்தோடிய
ஒரு நள்ளிரவில்
என் கரங்களிலிருந்து
புகையாய் மாறிக் கரைந்து போகிறாய்
நினைவுகள் பெருக்கும் சொற்களை
ஒளித்துவைக்க இடமில்லாமல்
சொற்களைத் தாவித்தின்னும்
பூதமாகிறேன்
நினைவின் மெல்லிய சரடுகளில்
கோர்த்து வைத்திருக்கும் குரல்களை
நெடுங்கூந்தலுக்காக சேர்த்து வைத்திருக்கும்
பன்னீர்ப்பூக்களை
சிரிப்பொலிகள் தீண்டும் மௌனத்தை
என்ன செய்வேன்?
அதையெல்லாம் விடு
நிசப்தம் ஊறித்திழைக்கும்
இந்த நள்ளிரவை
என்ன செய்ய?
Image Courtesy:
http://www.noracamps.com/show-image/33462/Nora-Camps/Midnight.jpg
ஒரேயொரு சொல்
குதித்தோடும் ஒரேயொரு
சொல்லிலிருந்தே உருவானாய்
சப்தங்களாய்ச் சேகரமானாய்
நினைவிடுக்குகளில் மணல்துகளாய்
உறுத்திக்கொண்டிருந்த நீ
உன் தொடையில் பூனை குதித்தோடிய
ஒரு நள்ளிரவில்
என் கரங்களிலிருந்து
புகையாய் மாறிக் கரைந்து போகிறாய்
நினைவுகள் பெருக்கும் சொற்களை
ஒளித்துவைக்க இடமில்லாமல்
சொற்களைத் தாவித்தின்னும்
பூதமாகிறேன்
நினைவின் மெல்லிய சரடுகளில்
கோர்த்து வைத்திருக்கும் குரல்களை
நெடுங்கூந்தலுக்காக சேர்த்து வைத்திருக்கும்
பன்னீர்ப்பூக்களை
சிரிப்பொலிகள் தீண்டும் மௌனத்தை
என்ன செய்வேன்?
அதையெல்லாம் விடு
நிசப்தம் ஊறித்திழைக்கும்
இந்த நள்ளிரவை
என்ன செய்ய?
Image Courtesy:
http://www.noracamps.com/show-image/33462/Nora-Camps/Midnight.jpg
அனைவருக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்!!
இன்று சனிக்கிழ்மை. ஆனி 30.
என் மனதில் அவ்வப்போது எழும் சில கேள்விகள்,
நான் எதற்காகப் படைக்கப்பட்டேன்.
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்.
நான் செய்யவந்த கடமை என்ன.
ஏன் பிறப்பு. ஏன் இறப்பு.
ஏன் நினைக்கிறோம். ஏன் மறக்கிறோம்.
ஏன் சிரிக்கிறோம். ஏன் அழுகிறோம்.
கடைசியில் யார் வெல்கிறார்கள். அனைவரும் கடைசியில் வென்றால், தோற்றது யார்.
ஏன் ரகசியம்.
ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக