புதன், 1 ஜூலை, 2009

2009-07-01

யுத்த சூனியப் பிரதேசமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவின் புதுமாத்தளன் வைத்தியசாலையின் அருகான பகுதியெங்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வீசப்படும் செல் வீழ்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதாகவும் அத்துடன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்படுவதாக வைத்திய அதிகாரி வரதராஜா தெரிவித்தார்.

2009.04.09 ஆம் திகதியான இன்று மாலை 4 மணி வரை வைத்தியசாலை பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்ட தகவலின்படி 272 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் காயப்பட்டவர்கள் மக்களால் அழைத்து வரப்படுவதாகவும், 35 பேரின் இறந்த உடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பத்துக்கும் அதிகமான சிறுவர்களின் உடலங்கள் அடங்குவதாகவும், பிற்பகல் 4 மணியளவில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் வரதராஜாவின் அலுவலக கூரை மீதும் செல் வீழ்ந்து வெடித்ததாகவும் அறிய முடிகின்றது.

செல்வீச்சும், துப்பாக்கி வேட்டும் தொடர்ந்து மக்களைத் தாக்கிக் கொண்டே வருவதனால், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், மக்கள் நிலப் பதுங்குகுழிக்குள்ளே பதுங்கியுள்ளதாகவும், செல் வீச்சில் சிக்குண்டு இறக்கும் மக்களின் உடலங்கள் தெருக்களில் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது, இறந்தவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக இருக்கலாமென டாக்டர் வரதராஜா தெரிவித்தார்.
தமிழின சுத்திகரிப்பில் ஆர்வம் காட்டுவதாக கூறிக் கொள்ளும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதன் கோரத் தன்மையினை வன்னி யுத்தத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. இராஜபக்ஷ தலைமையிலான இராணுவக் கட்டமைப்பு தமிழினத்தை பூண்டோடு அழிக்க எடுத்த முயற்சியின் ஓரங்கம் தான் வன்னி மண்ணைச் சுடுகாடாக்கியது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்று முழுதாக நிர்மூலமாக்கப்பட்டதாக பலதரப்பட்ட செய்திகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. அவ் வியக்கத்தின் மூலக் கருவாக இயங்கிய தலைவர் வே.பிரபாகரன் வீரமரணம் அடைந்த செய்தி அவரை நேசித்த அனைவரையும் மூர்ச்சிக்க வைத்துள்ளது.

போர் யுத்த விதிகளுக்கு மாறாக யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களைக் சிதைப்பதும், போராளிகளைச் சுட்டுக் கொல்வதும் ஸ்ரீலங்கா படையினருக்கு கைவந்த கலை, இதனைத் "தமிழ் அரங்கம்" உலகுக்கு உரத்துக் கூறியுள்ளது, கட்டுரையாளர் பி.இரயாகரன் பேரினவாத பாசிட்டுக்கள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றுள்ளனர் எனக் கோரமான தலைப்புடன் படங்களையும் ஆதாரப்படுத்தி பதிவு செய்துள்ளார்.

தமிழ் அரங்கம்: "பேரினவாத பாசிட்டுக்கள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றுள்ளனர்" - பி.இரயாகரன் (அழுத்தவும்)

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஐவர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.

1. ருபீன் முபீஸ் - 412, அலியார் மரிக்கார் வீதி அக்கரைப்பற்று.06
2. சேகு ஆதம்பாவா மீராலெப்பை - 219/1, பதுரிய்யா வீதி, நிந்தவூர்.
3. மொஹம்மட் ஆமிர் ஹப்ஸான் - 64 B, M.B.C.S. வீதி, அட்டாளைச்சேனை.
4. சுலைமான் லெப்பை அப்துல் கபூர் - 357, இரண்டாம் குறுக்கு, சம்மாந்துறை.
5. சிங்களவரான விதானகமகே மென்டிஸ் அப்புஹாமி.

சவூதி அரேபிய நிறுவனம் ஒன்றில் பணி புரியும் வெளிநாட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்து ரியாத் - தமாம் வீதியில் கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பேரூந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இப் பேரூந்து விபத்தில் ஐந்து இலங்கையர்கள், நான்கு சவூதி அரேபியர்கள், மூன்று இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர், ஒரு எகிப்தியர், ஒரு பங்களாதேஷி மற்றும் இரு சூடானிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்னைக்கு காலைலே.... ஒரு 11 மணியிருக்கும்...

நம்ம வடிவேலு கணக்கா தேமேனு வேலையப்பார்த்துக் கிட்டிருந்தேன். ஒரு போனு வந்துதேனு நாம்பாட்டுக்கு பேசிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் டிப் டாப்பான ஒரு ஆளு வந்து கண்ணாடி கதவ தட்டி "எக்ஸ்கியூஸ் மீ சார்" னான். நானும் டிப் டாப்பா இருக்கானே, நல்லவனாத்தான் இருப்பானோன்னு நம்பி "உள்ள வா" னு தலைய ஆட்டிட்டேன். சடக்குனு உள்ள வந்தவன், படக்குனு என் கைய புடிச்சு குலுக்கிப்புட்டு, "குட்மார்னிங் சார்" னான். அவன் படக்குனு கைய புடிச்சதுல டபுக்குனு எஞ்செல்போனு கீழ உளுந்துடுச்சு....

நாமதான் கோவப்படக் கூடாதுனு பதிவு போட்டிருக்கமேனு.... பல்லு, நாக்கு எல்லாத்தையும் கடிச்சிக்கிட்டு...

"என்ன" என்றேன்...

திரும்பவும்.... "எக்ஸ்கியூஸ் மீ சார்..... என்று ஆரம்பித்தான்...

அடங்கொய்யால... திரும்பவும் ஆரம்பிக்கிறானேனு நினைச்சுக்கிட்டே..

"ம்... என்ன சொல்லு" னேன்

"நாங்க‌ பென்டகன் கம்பெனியிலிருந்து வர்றோம்... ஒரு ஸ்பெசல் ஆஃப்பருக்கு உங்கள சூஸ் பண்ணியிருக்கோம், பார்த்தீங்கனா சார்... இந்த புக்க 70 சத ரேட்ட குறைச்சு உங்களுக்கு 2300 ரூபாக்கு தர்றோம், அதுவும் நீங்க ஏற்கனவே ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி (ஏற்கனவே ஏமாந்து போயி வாங்கி அலமாரியில வச்சிருந்தத பயபுள்ள அதுக்குள்ள எப்படி பார்த்தானோ?) வச்சிருக்கிறதனாலே உங்களுக்கு இன்னொரு 37 ரூபாய் 40 காசு தள்ளுபடி கெடைக்கும் சார்" னு தெளிவா தான் கத்து கிட்ட மேட்டரை எங்கிட்ட விவசாயம் பண்ணிப் பார்க்க‌ ஆரம்பித்தான்....

"கைப்புள்ள... கன்ட்ரோலா இரு, ஏமாந்திராத" னு நானும் ஆன வரைக்கும் சமாளிச்சு.... போராடி கடைசியா அந்த புக்க வாங்காமலேயே திருப்பியனுப்பிச்சிட்டு... அப்பாடானு நிம்மதியா உட்கார்ந்தா

போன் அடிச்சது, எடுத்துப்பார்த்தா தங்கமணி. எடுத்து என்னனு கேட்டா... "எப்போ சாப்பிட வருவீங்கனு" ரொம்ப அக்கரையா கேட்டுது அம்மணி... என்ன‌டா என்னைக்குமில்லாமா இன்னைக்கு புதுசானு நினைச்சிகிட்டே ப‌தில் சொல்லும் போதே...

அந்த பக்கம் "ஏங்க‌... நான் ஒன்னு வாங்கியிருக்கேனே"னு ரொம்ப சந்தோசமா சொல்லுச்சு. லேசான‌ ப‌ய‌த்தோட‌ "என்ன‌" னு கேட்டேன்.

"ஒன்னுமில்லீங்க‌... நம்ம ஏரியால ஒரு பொண்ணு புக்ஸ் எல்லாம் சேல்ஸ்க்காக கொண்டு வந்திருந்துச்சு, பக்கத்தில எல்லாரும் வாங்கினாங்க.... நானும், நீங்க துணியெடுக்க‌ குடுத்த‌ ப‌ண‌த்தில‌... ரொம்ப‌ யூஸ்புல்லா இருக்குமேனு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி ஒன்னு வாங்கியிருக்கனுங்க"

கருத்துகள் இல்லை: