புதன், 1 ஜூலை, 2009

2009-07-01

கேள்வி ; தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தா த தன்மையினால் தமிழின் வளர்ச்சி எத்தன்மையில் உள்ளதென கருதுகிறீர்கள்?

பதில்: மண்ணில் முளைவிடா விதைபோல் உள்ளது.

கேள்வி : செம்மொழி எனும் தகுதியினை பெற்றிருப்பது -நண்ணில அரசு இசைவாணை வழங்கி யிருப்பது மண்ணில் முளைவிடா விதை என்று கருதுகிறீர்களா?

பதில் : பெயர் அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் செய ல் அளவில் பயன் - பலன் எதுவுமில்லை என்பதை ஆராயின் உண்மை புலப்படும்.

கேள்வி: செம்மொழி மையத்துக்கு அமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஐம்பெருங்குழு - எண்பேராயத்தின் பேராளர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில் : சரக்கு சிறப்பாக இருக்க வேண்டும்; பயன் உண்டு. சரக்கு சிறப்பாக இல்லாது சரக்கு வழங்குவோர் மட்டும் எடுப்பாக இருந்து பயன் இல்லை.

கேள்வி : இந்திய நாட்டின் ஆட்சி மொழி தகுதி எம்மொழிக்கு இருக்கிறது?

பதில் : விருப்பு -வெறுப்புக்கு இடன் இல்லாது மொழிநூல் வல்லார்களின் கருத்தை ஆராயின் தமிழ் மொழி மட்டுமே அத்தகுதிக்கு உரியதாகும்.

கேள்வி : பிற மொழிகள் பேசுவோர் தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக ஒப்புதல் அளிப்பார்களா?

பதில் : பலமொழி பேசும் மக்களிடையே ஒரு மொழியினை ஆட்சி மொழி ஆக்குதற்கு ஒரு வரம்பு இருப்பின் ஆட்சி மொழி தகுதியினை தமிழ் தட்டிப் பறிக்கும்; மேலும் உலக ஆட்சி மொழியாக இலங்க த் தக்க தகுதியும் தமிழுக்கு உண்டு; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குவதுபோல் பிறமொழிச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றில் வழங்கும் நிலையினைக் காணமுடியாது. மேலும் தாங்கள் கேட்ட கேள்வி க்கு பதிலை அளித்தேனே தவிர தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி தகுதியினை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த வில்லை என்பதை தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழைத் தேடிவரும் காலம் ஒரு நாள் மலரும். அந்நாள் எந்நாள் என்பதை காலம் அளிக்க வேண்டிய பதில்.

கேள்வி : நமக்கு ஓர் ஆண்டு என்பது பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : 360 பாகைகளை கொண்ட வான வெளியினை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.25 நாட்கள்; சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 நாட்கள்; செவ்வாய் மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 மாதங்கள் ; புதன் மற்றும் சுக்கிர மண்டலங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். வியாழன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 12 ஆண்டுகள்; சனி மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 ஆண்டுகள்; இராகு, கேது துருவக் கோள்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் , புவி மண்டலம் எடூத்துக் கொள்ளும் கால அளவு 60 நாழிகை-ஒரு நாள்; இதனையே பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை வாழ்ந்து வருகிறது .

கேள்வி.: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என வழங்கும் பழமொழி யின் உட்பொருள் என்ன?

பதில்: பழந்தமிழர் கிழமை (வாரம்) ஒன்றுக்கு அறுநாட்களையே தெரிவு செய்து வழங்கி வந்தனர். அந்நெறிமுறையின்படி மாதம் ஒன்றுக்கு ஐந்து கிழமை
கள் இடம் பெறும் ; ஐந்து கிழமைகளை நிரல் படுத்துங்காலை மூன்றாம் கிழமையில் உள்ள புதன் நிறையுவா வரும் நாளில் மட்டுமே வரும். அந்நிறையுவா நாளில் புதனைத் தவிர்த்து பிற கோள்களின் பெயர்கள் வந்திடா அதன் காரணமாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என விளம்பும் வழக்கம் இருந்து வருகிறது .

கேள்வி : கிழமைக்கு அறு நாட்களை கொள்வதற்கு - கொண்டதற்கு ஆதாரம் என்ன?
பதில்: பன்னிரு இராசி மண்டலங்களில் சூரியர்- சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஏனைய ஐந்து கோள்களுக்கு இரண்டு , இரண்டு மண்டலமாக பகுக்கப் பட்டுள்ள தன்மையே உரிய சான்றாகும்.

More than a Blog Aggregator

by maac

கேள்வி : கிழமைக்கு அறுநாளென கொண்டதற்கு ஆதாரம் என்ன?

பதில் : சூரியர் -சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் மற்ற கோள்களுக்கு இரு மண்டலங்களும் உள்ளதே உரிய சான்றாகும்.

கேள்வி : எழு நாட்களை அறு நாட்களாக கொள்ளின் நீக்கப் படும் கிழமை -மண்டலம் எது?

பதில் : எம்மண்டலத்தையும் நீக்க வேண்டிய தில்லை ; முன் வரும் முப்பது நாழிகை சூரியனுக்கும் பின் வரும் முப்பது நாழிகை சந்திரனுக்கும் என இருவருக்கும் ஒரு நாளை அரை, அரை நாளாக கொண்டுவிடின்.

கேள்வி : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச்சொல்லாக தெரிய வில்லை இது குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில் : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச் சொல்லின் திரிபுகளாகும்; தேஎம்> தேயெம்>தேயம்> தேசம் என்பது வே இதன் வரலாறு ஆகும். வாயில்>வாயல்> வாசல் என வழங்கும் மற்றொரு வழக்கும் என் கூற்றை உறுதிப்படுத்தும் தன்மையில் உள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. தேசியம் என்னும் சொல் தேசம் என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்.

கேள்வி : திராவிடம் என்னும் பெயர்ச் சொல் வழங்கும் தன்மையினைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : திரிபுர என்னும் சொல் லே திராவிடம் என திரிந்து வழங்குகிறது. திரிபுரம் >திரிவிடம்> திரவிடம் என்பது இதன் வரலாறு ஆகும். திரிபுரம்-திரிவிடம்- திரவிடம் -திராவிடம் -மூவிடம்- மூவரண்- மூவெயில்- மூவுலகு என்பன யாவும் ஒருபொருள் குறித்த பல சொற்கள்ஆகும் ..

கேள்வி; பழந் தமிழர்களின் கணியக் கோட்பாட்டில் முதல் இராசி மண்டலம் எது?

பதில்: சிம்மம் ஆகும்.

கேள்வி: முப்பத்து முக்கோடி தேவர்கள் என புராணங்கள் உரைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முப்பது முக்குறை கோடி என்னும் தொடரே முப்பத்து முக்கோடி என இடைக்குறை கண்டு வழக்கில் நிலைபெற்றுள்ளது. முப்பதில் மூன்று குறைந்த இருபத்தேழு என்பது மேல் இடம் பெற்றுள்ள தொடரின் பொருளாகும். இருபத்தேழு என்னும் எண்ணுத் தொகை கணிய நூலில் இடம்பெறும் விண்மீன்களின் தொகுதிப் பெயராகும்.

கேள்வி : நாற்பத்தெட்டாயிரம் இருடிகள் என்றால் யாரைக் குறிக்கும்?

பதில் : நான்கு- எட்டு என்னும் எண்ணுப் பெயர்களை பிரித்துப் படிக்காது நாற்பத்தெட்டு என தொகுத்துப் படித்த காரணத்தால் ஏற்பட்ட வழு வழக்கு வழக்கில் நிலைபெற்றுவிட்டது. நான்கும் +எட்டும் = பன்னிரண்டுஎன்னும் கூட்டுத்தொகை வான மண்டலத்தின் பகுப்பாகும் என்பதை நான் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன்.

கேள்வி: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினில் நாளும் நானிலத்தை வலம் வருகிறான் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : பகலவன் எழுநிற கதிர்கள் புடை சூழ நாளும் வலம் வருவதனையே ஏழு குதிரையென உருவகப் படுத்தி உரைத்தனர். இதனை உண்மையென நம்பி வாழ்ந்த காலமும் உண்டு . இன்று அந்நிலை மாறி வருகின்றன.

" எழுநிறப் பரிகளை தேரினிற் பூட்டி
எழுந்திடும் பரிதியின் திருமுக முன்னே
பச்சரிசி தன்னை பானையி லிட்டு
எச்ச மின்றி இன்சுவை கலந்து
மனைதோறும் பொங்கலோ பொங்க லென்று
மனைதனில் மங்கையர் பொங்கிடும் முறையில்
காரிருள் போக்கும் கதிரோ னெழுமுன்
கருக்கலி லெழுந்து கழனியை வுழுது
காற்றிலும் மழையிலும் கண்ணயர் வின்றி
சேற்றினி லுழைத்து செந்நெல் விளைத்து
உலகோர் பசியினை அயராது தணிக்கும்
உலகியப் பொங்கல் திருநாள் வாழிய"

எனும் பா ஒன்றினை 1972-ல் புரட்சிக் குரல் என்னும் எழுச்சி இதழில் படைத்தமை கொண்டு தாங்கள் நான் உரைத்த கருத்து நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என்பதை உணரலாம்.

இந்த மென் பொருள் மூலம் உங்களது புகைப்படங்களுக்கு பிரேம் போட்டு அழகுபடுத்தலாம். மிக இலகுவான மென்பொருள். SERIAL KEY உள்ளே இணைக்கப்பட்டுள்ளது.பாவிச்சு பார்த்து உங்கட கருத்தையும் எழுதுங்க .

>================================<

நாம் முத்துக்களை கடைகளில் பார்த்து இருக்கிறோம்.ஆனால் அது எங்கு இருந்து எப்படி கடைகளுக்கு வருகிறது என்று பார்போம்.பதிவுகள் தொடரும்...

கருத்துகள் இல்லை: