வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02

எட்டு லட்சத்தை மொத்தமாக பார்த்தாலே அல்லு சில்லாகி, சில்லு செதிலாகி போய்விடும் அந்த நடிகைக்கு! மெல்ல மெல்ல 40 லட்சம் வரை வளர்ந்திருக்கிறார். அவரிடம் போய் எழுபத்தைந்து லட்சம் தர்றோம். கால்ஷீட் கொடுங்கன்னு கேட்டால், முடியாதுன்னா சொல்வார்? அவசரப்பட்டு கையை நீட்டி அட்வான்சும் வாங்கிவிட்டாராம். ஆனால் இந்த படத்தில் இவர் சோலோ ஹீரோயின் இல்லை. மூவரில் ஒருவர்.

அட்வான்ஸ் வாங்கிய அடுத்த நொடியே இன்னொரு ஹீரோவுக்கு விஷயம் தெரிய, கடும் கோபம் அவருக்கு. வேட்டைக்காரனுக்கு கோபம் வந்தால், முயல்னு தெரியுமா? மானுன்னு புரியுமா? தனது ஐம்பதாவது படத்திலிருந்து அவரை உடனே தூக்குங்கள் என்று கூறிவிட்டாராம். பதறியடித்த நடிகை, நேரடியாக அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஏரியாவுக்கே போய் விட்டாராம். கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல்.
அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு அப்புறம் சொல்லுங்க என்றாராம் ஹீரோ. எனக்கு இவருதான் முக்கியம். பிடிங்க ஒங்க அட்வான்சைன்னு திருப்பி கொடுத்திட்டு வந்திட்டாராம் நடிகை. தமன் ஆடாவிட்டாலும், வுமன் ஆடும்ங்கிற மாதிரி, கையை பிசைந்து கொண்டே கவலைப்படுகிறாராம் தாய்குலம். எழுபத்தைந்து லட்சம் போச்சே என்ற வருத்தம்தான்!

சேரனின் பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்தான். அப்படியிருக்க, தனியாகவே பொக்கிஷம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சேரன். மாயக்கண்ணாடி தோல்விக்கு பிறகு ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் இவர், ஒவ்வொரு காட்சியையும் மிக உன்னிப்பாக உருவாக்கி வருகிறாராம். நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்திவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பொக்கிஷத்தை முதல் காப்பி அடிப்படையில் உருவாக்கி வரும் சேரன், சின்ன சின்ன காட்சிகளுக்காக கூட நாள் கணக்கில் செலவிடுகிறாராம். பட்ஜெட்டை மீறினால் தனது கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பது தெரிந்தும் செலவு செய்வது அவரது நேர்த்திக்கு அடையாளம்! பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயத்தில் அடம் பிடிப்பதைதான் பொறுக்க முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.
கதை கனமாக இருந்தாலும் வடிவேலு மாதிரி யாராவது இருந்தால்தானே ரசிக்க முடியும்? இது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் ஆசை. வைகை புயல் உள்ளே வந்து வேகமாக வீசினால் கதையே சேதாரம் ஆகிவிடும் என்பது சேரனின் சமாதானம். இந்த இழுபறியில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களில் வடிவேலுவையும் வைத்துக் கொண்டு கதையையும் நேர்த்தியாக சொன்னாரே? அதுபோல இப்போதும் சொல்ல முடியாதா என்ன? ஞாயமாதான் இருக்கு!

More than a Blog Aggregator

by மயாதி
காதல்
ஒருவழிப்
பாதை...
போகமட்டுமே
முடியும்
திரும்ப முடியாது

காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...

ஓரின சேர்க்கை குற்றம் அல்ல தீர்ப்பால் அரவாணிகள் குஷி

ரின சேர்க்கையில் ஈடுபட்டு வரும் ஆண்கள், பெண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது எங்கள் உரிமை. இதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது என்று, ஓரின சேர்க்கையாளர்களுக்கான அமைப்பு கள் தொடர்ந்த வழக்கில், ‘ஓரின சேர்க்கை தவறானது அல்ல. அது சட்ட விரோதமும் அல்ல’ என்று டெலலி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ஓரின சேர்க்கையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து சவுத் இண்டியா பாசிட்டில் நெட்வொர்க் அமைப்பின் தலைவர் அரவாணி நூரி கருத்து தெரிவிக்கையில்,

”மனித வாழ்க்கையில் செக்ஸ் மிகவும் அவசியமானது. இதனை தங்களது விருப்பப்படி அமைத்துக்கொள்ள உரிமை வேண்டும். வெளிநாடுகளில் ஓரின சேர்க்கையை அங்கீகரித்துள்ளனர். பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது, ஆணும், ஆணும் ஒன்றாக வாழ்வது எல்லாம் அங்கு சகஜம். இங்கு அதே போன்ற நிலை ஏற்பட வேண்டும். 377 - ஐ.பி.சி. சட்டப்பிரிவால் அரவாணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சட்டப் பிரிவையே நீக்க வேண்டும். ராஜாக்கள் காலத்து கல்வெட்டுகளில் கூட பெண்ணும், பெண்ணும் கட்டிப்பிடித்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இதில் ஒன்றும் தவறு இல்லை.

சென்னையில் அரவாணிகள் தங்குவதற்கு வாடகை வீடு கூட கிடைப்பதில்லை. எனவே சமத்துவபுரம் போன்ற குடியிருப்புகளில் அரசு எங்களுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும்” என்று கூறினார்.

மைக்கேல் ஜாக்சன் எழுதிய உயில்

டந்த வாரம் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உயில் ஒன்று எழுதி வைத்துள்ளார். 2002-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதியிட்டு இந்த உயில் எழுதப்பட்டு உள்ளது. அதில் கலிபோர்னியாவில் உள்ள தனது பண்ணை வீட்டை தனது தாயார் பெயரில் எழுதி வைத்து உள்ளார். இந்த சொத்து மதிப்பு ரூ.2,500 கோடி ஆகும்.

மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தைகளையும் தனது தாயார் காதரீன் ஜாக்சன் கவனித்து கொள்ள வேண்டும் என்று உயிலில் எழுதப்பட்டு உள்ளது.

குழந்தைகளை தாயார் கவனிக்காதபட்சத்தில் தனது நீண்ட கால நண்பரும், பாடகருமான டயானா ரோல் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

5 பக்கங்களில் எழுதப்பட்டு உள்ள உயிலில் மைக்கேல் ஜாக்சன், 2-வது மனைவி டெயரா ரோவை புறக்கணிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உயில் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம் இன்னும் நடைபெறாத நிலையில் அவர் எழுதி வைத்துள்ள உயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: