சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

புதுவை பல்கலைக்கழக ஜெயராமன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் மனு அனுப்பி உள்ளார்.
புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில், புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மதிப்பெண் மோசடி குறித்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சாதகமாக உத்தரவிட வேண்டுமென்று நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாட்டினை உறுதி செய்யவும், நீதித் துறையின் மாண்பினை காக்கவும் இச்சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தபட்ட மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், புதுவை பல்கலைக்கழக மதிப்பெண் மோசடியை அம்பலப்படுத்திய ஊழியர் ஜெயராமன் கொலை செய்யப்பட்ட வழக்கினையும் சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டுமென்று மனுவில் சுகுமாரன் வலியுறுத்தி உள்ளார்.

ஓரின சேர்க்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பினை மாற்றியமைக்க உச்சநீதிமன்றமும், பாராளுமன்றமும் தலையிட வேண்டுமென்று முஸ்லிம் முன்னேற்ற முன்னணியின் தலைவர் முகமது அன்னாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இறைவனுக்கும் இயற்கைக்கும், இஸ்லாத்திற்கும் மனித இனத்திற்கும், இந்திய பண்பாட்டிற்கும் எதிரான ஓரின சேர்க்கையினால் உயிர்கொல்லி நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் ஏற்படுமென்றும், ஓரின சேர்க்கை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பினை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம், பாராளுமன்றமும் தலையிட வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.
இப்பிரச்னையில் சமய சான்றோர்கள், சமூக அக்கறை கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட முஸ்லிம் முன்னேற்ற முன்னணி தயாராக இருப்பதாகவும் முகமது அன்னாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அ‌திப‌ர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த சிறிலங்கா அ‌திப‌ர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றும்போது, இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான போர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வெற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல என்றும் இது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வெற்றி என்றும் கூறியிருந்தார்.ஆனால் அதன் பிறகு, முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வரையில் அ‌‌திப‌ர் ராஜபக்ச இதுவரையில் எதுவும் செய்யவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைத் தொடர்ந்து நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களில், தமிழ் மன்னனைத் தோற்கடித்த சிங்கள மன்னன் துட்டகைமுனுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதைக் கேட்டு அ‌திப‌ர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்து வருவதாகவே தோன்றுகிறது.விடுதலைப் புலிகளை வெற்றி கண்டு ஆறு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டன.

போர்ப் படையினரால் நடத்தப்படும் அகதிகள் முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைத் தடையின்றி சந்தித்துப் பேசி உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பணியாளர்களையோ, பிற அனைத்துலக நாட்டு அமைப்புக்களின் உதவிப் பணியாளர்களையோ அனுமதிப்பதற்கு சிறிலங்கா அரசு இன்னும் மறுத்து வருகிறது.அரசைக் குறை கூறுபவர்கள் தொடர்ந்து மிரட்டலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.

எதிர்வரும் செப்டம்பரில் ராஜபக்ச ஆட்சியை இழப்பார் என்று ஜோ‌திடம் சொன்ன புகழ்பெற்ற ஜோ‌திடக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதே இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாகும்.படையில் மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சிறிலங்காப் படையில் 3.5 லட்சம் பேர் உள்ளனர் என்பதும், அவர்கள் எல்லோருமே சிங்களவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வரும் ஆகஸ்ட் 8 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்காமலும், அரசை விமர்சிப்பவர்களைத் துன்புறுத்திக்கொண்டும், மறுசீரமைப்புக்குச் செலவிடுவதற்கு மாறாக அரசு பணத்தைப் படையினருக்கு செலவிட்டுக்கொண்டும் சிறிலங்கா அரசு இருக்குமானால் இந்தத் தேர்தல்களுக்கு அர்த்தமே இல்லை என்றுதான் நிதான உள்ளம் படைத்தவர்கள் சொல்வார்கள்.
வராது வந்த மாமணியாக 17 ஆண்டுகள் கழித்து பாபர் மஸ்ஜித் சம்மந்தமான விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை நாம் அறிவோம். அறிக்கை பிரதமரிடம் தாக்கல் செய்யப்பட்டபின் அதிலுள்ள விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மும்பை கலவரம் தொடர்பாக நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா அவர்கள் அளித்த அறிக்கையும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பான மிஸ்ரா கமிஷன் அறிக்கையும் இன்றுவரை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. லிபரான் அறிக்கைக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகிறது.

இதற்கிடையில், லிபரான் அறிக்கை தொடர்பாக பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வாய்திறக்கவில்லை. வட இந்திய தலைவர்களில் லாலு மற்றும் முலாயம் ஆகிய இருவர் மட்டுமே இது பற்றி பாராளூமன்றத்தில் பேசியுள்ளனர். வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் எழுந்து லிபரான் கமிஷன் அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த ஆனந்த்குமார் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவருடன் கோபிநாத் முண்டேயும் ஆக்ரமாகக் கத்தினார்.ஆனால் லாலு பிரசாத்துக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது கட்சியினர் குரலெழுப்பினர்.

தமிழக அரசியல் தலைவர்களில் தி.க.தலைவர் வீரமணி, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் இந்தத் தொடரிலேயே வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்திருந்தாலும், இப்பொழுது இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தவர்களும், 'சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள்' என்று சுய தம்பட்டம் அடிப்பவர்களும் லிபரான் அறிக்கை பற்றி வாயே திறக்கவில்லை. அவர்களை சொல்லி குற்ற்மில்லை. என்னதான் அவர்கள் முதுகில் குத்தினாலும்,முகாரி பாட ஒரு கூட்டம் சமுதாய அமைப்பு/கழகம்/இயககம்/ஜமாஅத் என்ற பெயரில் தயாராக இருக்கிறதே!

கருத்துகள் இல்லை: