ஒன்பது மணிக்கெல்லாம் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். இடைப்பட்ட இந்த நேரத்தில், ஒரு மணித்துளியில் சிந்தனை வயப்பட்டு, அரங்கில் நான் வாசித்ததை உங்கள் பார்வைக்கு இடுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
"இங்கே சகோதரி ஒரு நிமிட நேரத்தில் கவிதை எழுதி வாசிப்பவர்கள் இருந்தால், உடனே மேடைக்கு வந்து கவியரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். பெற்ற அன்னைக்குப் பணிவிடை செய்ய, கால அவகாசம் வாய்த்திடல் வேண்டுமா? இல்லவே இல்லை. அதனால்தான், எம் தமிழன்னைக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு நான் உங்கள் முன்னே நிற்கிறேன்!
அன்னைக்குப் பணிவிடை செய்திட
காலஅவகாசம் வேண்டுதல் வேண்டுமோ?
அன்னைக்குப் பணிவிடை செய்திட
காலஅவகாசம் வேண்டுதல் வேண்டுமோ?
மூத்தகுடி வாய்த்த
மனிதம் செழிக்கச் செய்த
மாமழையாய்க் கனிவு சொரியும்
இம்மாமழைத் தமிழுக்குப் பாதகம்
செய்திடல் ஆகுமோ? அது
இப்புவிக்குப் பெருமையாமோ? அது
இப்புவிக்குப் பெருமையாமோ??
இனம் வாழ, பண்பாடு தளைய
மொழி சுவாசித்திடல் வேண்டும்! தாய்
மொழி சுவாசித்திடல் வேண்டும்!!
தமிழ் என்றால் இனிமை; நம்
தமிழ் என்றால் இனிமை! இனிமைக்கு
ஏதடா உவர்ப்பு? இனிமைக்கு
ஏதடா உவர்ப்பு??
கவிகாளமேகம் சிந்தனை பொழிந்த
தமிழுக்கு இந்தப் பேரன்மார் கூட்டம்
இருக்கும் வரையிலும் இடரேது?இந்தப்
பேரன்மார் கூட்டம் இருக்கும்
வரையிலும் இடரேது??
தன்மகன் அம்பிகாபதிக்கு இடரென்பதால்
கம்பன் கவி நின்றுவிடுமா?
தன்மகன் அம்பிகாபதிக்கு இடரென்பதால்
கம்பன் கவி நின்றுவிடுமா?
ஊடகங்கள் ஊட்டும் ஊட்டுக்கு
ஊடகங்கள் ஊட்டும் ஊட்டுக்கு
எம்மொழி பட்டுவிடுமா?
சவால்கள் தகர்க்கப்படும்!
சிறப்புகள் பல செய்யப்படும்!!
சவால்கள் தகர்க்கப்படும்!
சிறப்புகள் பல செய்யப்படும்!!
வேதநாயகம் மாதவையா
வழிநின்று நாவல்கள்பல
படைத்திடுவோம்! தமிழன்னைக்குப்
படையல்பல படைத்திடுவோம்!!
புதுமைப்பித்தன் சொ.வி
வழியில் சிந்தனைச் சிறுகதைகள்
செதுக்கிடுவோம்; சிந்தனைச் சிறுகதைகள்
பல செதுக்கிடுவோம்!படைத்திடுவோம்!
தமிழன்னைக்குப் படையல்பல படைத்திடுவோம்!!
மணிப்பிரவாளம் தகர்த்தெறிவோம்! திமிங்கிலமாம்
தமிங்கலம் வென்றொழித்திடுவோம்! செம்மொழி
செழிப்புறல் செய்திடுவோம்! செம்மொழி
செழிப்புறல் செய்திடுவோம்!!
Hello என்றல்ல
அகோ எனச் சொல்லிடுவோம்!
மம்மி, டாடி என்றல்ல
அம்மா அப்பா என வணங்கிடுவோம்!!
அம்மா அப்பா என வணங்கிடுவோம்!!
busy என்பது முசுவாகட்டும்!
time இல்லை என்பது அவகாசம்
இல்லை என்றாகட்டும்!! தமிழன்
தமிழனாகட்டும்! ஆம்,
வென்றாக வேண்டும் தமிழ்! தமிழா
வென்றாக வேண்டும் தமிழ்!!
இந்த நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன், வணக்கம்!! "
ஒரு மணித்துளியில் சொற்கள் மட்டுமே குறிக்கப்பட்டு, வாசித்ததாகையால் பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது, இருப்பின் பொறுத்தருள்க!
வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): July 04, காலை ஆறுமணி
மனிதனுக்கு ஏற்படும் பல பரம்பரை நோய்களுக்கு முக்கிய காரணம் என்னவென்று நமக்குத்தெரியும்.
"எல்லாம் கடவுள் எழுதிய படிதான் நடக்கும்.. இந்த வியாதி வரணும்னு அன்றைக்கே ஆண்டவன் எழுதிவைத்துவிட்டான் என்ன செய்வது?" என்று நாம் அலுத்துக்கொள்கிறோம்.
ஆம் உண்மையில் எழுதிவைக்கப்பட்டதுதான். எங்கே தலையிலா? ... இருக்கலாம்.. அங்கிங்கென்னாதபடி எங்கும் எல்லா செல்களிலும் இருக்கும் ஜீன்களில்தான் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
செல்களின் மையத்தில் இருப்பது கரு(Nucleus). அந்தக்கருவில்தான் நம் உடல் வளர்ச்சி,நோய் முதல் எல்லாக் கட்டளைகளும் எழுதப்பட்டுள்ளன!!
இந்தக் கட்டளைகளை அடிக்கடி பிரதி எடுத்து ஆர்.என்.ஏ மூலம் செல் அனுப்பும்.
பரம்பரை நோய்களுக்கான ஜீன்களை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட வியாதி இந்த நேரத்தில் வரவேண்டும் என்ற செய்தியை கொண்டுசெல்லும் ஆர்.என்.ஏ யை இன்னொரு ஆர்.என்.ஏ மூலம் தடுத்து விடலாம். தடுத்து விட்டால் நோய் வராது.
இந்த எதிர் ஆர்.என்.ஏ ஐ செய்து மனித உடலுக்குள் செலுத்திவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கனவு.
இந்தக்கனவு மெய்ப்பட்டால்
1.பார்க்கின்சன் என்னும் நடுக்கு வாதம்
2.புற்றுநோய்
3.உடல் பருமன்
4.வைரஸ் நோய்கள்
5.கல்லீரல் நோய்கள்
6.சர்க்கரை நோய் பார்வை இழப்பு
மற்றும் ஏனைய நரம்பு மண்டல நோய்களைத் தடுத்து விடலாம்..
ஜீன்களை மவுனப் படுத்த முடியுமா? பார்ப்போம்!!
இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..
தமிழ்த்துளி தேவா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக