சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நிரந்தரமாக்க சிங்கள அரசு ஆலோசனை

http://www.nerudal.com/nerudal.8556.html

பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்

கொழும்பு, ஜூலை. 4-

இலங்கையில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதி களாக்கப்பட்டனர்.  அவர்கள் 35க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஆடு, மாடு போல அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
 
உறவினர்களை பிரிந்து முகாம்களில் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து 6 மாதத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை கூறியது. ஆனால் தற்போது சிங்கள அரசு ஓசை இல்லாமல் வேறு ஒரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளது.
 
தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணி முடிய 3 வருடமாகும் என்று சிங்கள அரசு சொல்கிறது. கண்ணி வெடிகளை அகற்ற இந்த கால அவகாசம் தேவை என்று சொல்கிறார்கள். இந்த பணி முடிய 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் சிங்கள அதிகாரிகள் சொல்லியபடி உள்ளனர்.
 
இந்த நிலையில் உலக நாடுகள் எதிர்ப்பை சமாளிக்க முள்வேலிக்கு பதில் சுவர் கட்ட தொடங்கி உள்ளனர். முகாம்களில் ரகசியமாக சில கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட சிங்கள அரசு சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழர்களை விரட்டி விட்டு, அந்த பகுதிகளை முழுமையான சிங்களர்கள் குடியிருப்புகளாக மாற்றும் சதி திட்டமாக இது கருதப்படுகிறது. எனவே அகதிகள் முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றும் முயற்சிக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

http://www.maalaimalar.com/2009/07/04105629/CNI08040709.html

புலிகளை தடைசெய்த ஐரோப்பிய நாடுகள் போராட்டம் நடத்த அனுமதிக்கையில், இந்தியா மட்டும் முடக்குகிறது: இயக்குனர் சீமான்
[ சனிக்கிழமை, 04 யூலை 2009, 08:34.06 AM GMT +05:30 ]
விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. என திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிட கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டைரக்டர் சீமான் மேற்கண்டவாறு பேசினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-
 
வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் ஒன்றரை இலட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
நாம் ஆறரை கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.  சீக்கியன் அடிப்பட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிப்பட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான். 
 
இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்ச செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டொலருக்கு ராஜபக்ச விலை போய்விட்டார். கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.
 
இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மெளனம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது. 
 
அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன்.

நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.
 
உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் இரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம். தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது. மீண்டும் மீண்டும் உதிக்கும். அதுபோல விடுதலை புலிகள் இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது. 
 
இவ்வாறு அவர் பேசினார்.

[ சனிக்கிழமை, 04 யூலை 2009, 02:53.42 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

"தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் இராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது. 

இதற்கு துணைபுரியும் வகையிலேயே www.ltteir.org  என்ற இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மேலும் - மக்களோடு நெருங்கித் தொடர்பாடும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக - 'பத்மநாதன் பக்கங்கள்' எனும் ஒரு சிறப்புத் தொடர்பாடல் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, வாரம் தோறும்  சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்தாடல்கள் மேற்கொள்வார் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் எதிர்நோக்கும் அபாயம்..

குழந்தைகளை தெய்வதிற்கு சமமாக கருதுவதுண்டு. மனதளவில் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றே சொல்லி வருகின்றோம். அப்படி பட்ட குழந்தைகளுக்கு இந்த சமுகத்தால் இழைக்கப்படும் அபாயம் ஏராளம் ஏராளம்....

குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் சிசு பெண் கொலைகள்,பெண்சிசு வதைகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், பெண் குழந்தைகளிடம் வன்செயல்கள் புரிதல், ஆண் குழந்தைகளிடம் அளவிற்கு அதிகமாக வேலை வாங்குதல்,பெரியவர்களும் பெற்றோர்களும் தங்களின் இயலாமையை குழந்தைகளிடம் காட்டுதல் போன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது.

இவற்றுகெல்லாம் காரணம் குழந்தைகள் பிறந்தவுடன் பெரியோர்களையும் பெற்றோர்களையும் அண்டி வாழவேண்டிய சூழல். இதனால் இவர்களால் இன்னலுக்கு ஆளாகவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் தடுக்க அரசும் சமுகம்சார்ந்த நிர்வணங்களும் நடவடிக்கைகள் எடுத்தாலும், இன்னும் இப்படிபட்ட கொடுமைகள் அதற்கு மேலும் நடக்கதான் செய்கின்றன. இதை தடுக்க போதிய சட்டம் இல்லை என்றே தோன்றுகின்றது.

இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளை கடத்தி ஊனம் செய்து பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை இல்லாதவர்களுக்கு விற்றுவிடுதல் பொன்ற செயல்களும் நடக்கின்றன. இப்படி செய்பவர்களை என்னை பொறுத்தவரை குறைந்தப் பச்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்த வார (01-07-2209) குமுதத்தில் படித்து பதறவைத்த செய்திதான் என்னை இப்படி எழுத தூண்டியது. ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி விற்பதும், பிச்சை எடுகக் செய்வதும், திருட பயன்படுத்துவதுமாக உள்ளது. ஆட்டோ ஓட்டுனர் ஜோசப் என்பவரால் அடையாளம் காணப்பட்ட கும்பலின் விவரம் பின் உள்ள படத்தை சுட்டி பெரிதாக்கி படிக்கவும்.

நம் நாட்டை பொறுத்தவரை நாம் கேள்விப்படுவதை காட்டிலும் பெரிய அளவில் வன் செயல்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்றது. இதை அரசும் சட்டங்களும் தடுத்தாலும் பெற்றோர்களிடம் ஒரு விழிப்புணர்வும் தேவை என்றே தோன்றுகின்றது. குழந்தைகளால் ஒன்றும் செய்ய முடியாது எனவே பெரியவர்களாகிய நாம் இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். வளர்கின்ற இவர்களை வழிநடத்த வேண்டும்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயாமாஸ்ரர் தனது மகனது பிறந்தநாள் நிமிர்த்தம் மனைவி பிள்ளைகள் தங்கியுள்ள செட்டிக்குளம் மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாம் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

புலிகளியக்கத்தின் முன்னாள் ஊடக இணைப்பாளராக செயற்பட்டுவந்த தயாமாஸ்ரர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி படையினரிடம் சரணடைந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் உள்ள தயாமாஸ்ர் தனது மகனது பிறந்த தினம் அன்று அவரை பார்க்க விரும்புவதாக தெரிவித்ததையடுத்த மனிதாபிமான அடிப்படையில் மகன் தங்கியுள்ள பிரதேசத்திற்கு கொண்டு சென்ற போது, அங்கு சூழ்ந்த மக்கள் „ஆயிரக்கணக்கான சிறுவர்களை பலி கொடுத்து விட்டு உனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமோ' என சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். நாம் நிலைமைகள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அவரை காப்பாற்றியதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்துக்கள் நேரலாம் என்ற அச்சத்தில் அவர்களையும் வேறு ஓர் முகாமிற்கு மாற்றியுள்ளோம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இணையதள செய்தி

கருத்துகள் இல்லை: