ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05

தீர்க்க தரிசிகளை

தீயிட்டு கொழுத்தியவர்கள்

திக்குத் தெரியாத

திசைக்கு திசைமாறி போனதைஅறிவீரோ தம்பி

தீமைகளை சுமந்த மனம்

தீபோல் எரிந்து கருகிப்போனதை பார்த்தீரோ தம்பி

திறமைகளை தெரிந்தெடுத்து

திராவகத்தில் நனைத்து தீர்ப்பு வழங்கிய

தீவிரவாதி எங்கள் தீவுக்குள்ளே பாத்தீரோ தம்பி

திண்ணைபேச்சாளர்களின் வீண்பேச்சுக்கள

தீச்சட்டிக்குள் கருகிபோனதை அறிவீரோ தம்பி

வெள்ளை சேட்டு அணிந்து வீடுவீடாய்

வெளிநாடுகளில் தமிழரின் கதவினை தட்டிய

வேதாரிகளை அறிவீரோ தம்பி

வேப்பம்பழத்தில் இனிப்பைத் தேடி

வேகத்தை அதிகரித்து வீத பணத்திற்கு

வெட்க்கமில்லாமல் மக்களிடம்

வேட்கை ஏதும் நெஞ்சில் இல்லாமல் வசூல்

வேட்டைக்கு புறப்பட்ட கண்டால் சொல்வீரோ தம்பி

தமிழீழம் வாங்கித் தருவோம் என்று

தவித்து உழைத்திடும் மக்களிடம்

தரங்கெட்ட வார்த்தைகளை

தாரைவார்த்து சுரண்டிப்பிழைத்தவரை

தரைமீது துயிலுபவரை கண்டீரோ தம்பி

கள்ள கையெழுத்து போட்டு

கணணி மூலமாக கடன் பெற்று

களவாணிகள் காசோலைகளாக மாற்றி

காதலியின் பெயரில் கணக்கிட்டதை

காதோரம் சொல்வீரோ தம்பி

கொள்கை தவறிபோனதால்

கோயினில் பக்தர்களின் பணத்தை

கோடிகோடியாய் கொள்ளையடித்து

கொழும்பில் மாளிகை வாங்கியதை

கொலுதனில் ஏறிநின்று உரைப்பீரோ தம்பி

தமிழரின் தாகம் தமிழீழம்மென்று

தவித்திடும் மக்களிடம் முட்டை கண்ணீர் விட்டு

தரணியில் நீச்சல் தொட்டியில் நிச்சல் போட்ட

தன்னலச் சுயநலவாதிகளை நீச்சல்

தடாகத்தினில் கண்டீரோ தம்பி


என்றென்றும் அன்புடன்
வவீதரன்

மஹாவலி.கொம் தம்பி



கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் புலிகளின் முக்கிய தளபதிகளான ராம் மற்றும் நகுலன் உள்ளிட்ட குழுவினரைக் கைதுசெய்ய விசேட படைப்பிரிவொன்றும் பொலீஸ் புலனாய்வுப் பிரிவொன்றும் ஈடுபட்டுள்ளதாக மொனறாகலை மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மொனறாகலை காட்டுப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள ராம் தலைமையிலான குழுவினர், படையினரிடம் சரணடையும் நோக்குடன் கிழக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மொனறாகலை, புத்தளை பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களில் நிலவிய புலிகளின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யால பிரதேசத்திற்கு உட்பட்ட 104கிலோமீற்றர் பரப்பிலுள்ள சுமார் 40கிராமங்களைச் சேர்ந்த 40ஆயிரம் பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மொனறாகலை மாவட்டத்திலுள்ள புலிகள் பிரச்சினை 90வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்றுள்ள ராம் குழுவினர் தொப்பிக்கலை காட்டுப்பகுதியில் ஊடுருவியிருக்கலாமென ஒரு தகவலும், சரணடையும் நோக்கில் அக்கரைப்பற்றுக்கு சென்றிருக்கலாமென மற்றொரு தகவலும் தெரியவருகிறது என்று தெரிவித்த சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 12ம் திகதி மாகொடயாய கிராமத்தில் 09பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய புலி உறுப்பினர் அக்கரைப்பற்றில் சரணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் நகரில் உள்ள வல்வெட்டித்துறைச் சமூகத்தைச் சேர்ந்தோரின் பலசரக்கு கடைகளில், இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் என துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது தொடரும் எனவும் இவ்விடயத்தில் புலிகளின் இணையத்தளங்கள் எனக்கூறிக்கொள்பவை தவறான கருக்துக்களை மக்களிடம் திணிக்க முற்படுவதாகவும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


More than a Blog Aggregator

by Nundhaa
1

தூக்கத்தில் கவிதை எழுதும் வியாதி
அவனுக்கு இருக்கிறது
பாலிதீன் பைகள் பூத்த நிலத்தைப் பார்த்து
உலகம் தட்டை என்றான்
கல்லால் அடிக்கலாமா என யோசித்துவிட்டு
மன்னித்தார்கள்

2

ஒன்பதாவது வரியில் இந்தக் கவிதை தொடங்கும் என்பதால்
பூமி தவழும் பாதையில் நட்சத்திர தூசு
என்ற உருவகமும்
தூக்கம் வராதவன் புரண்டு புரண்டு படுப்பதைப் போல கடல்
என்ற உவமையும்
ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதா என யோசிக்கையில்
முதல் வரியில் இந்தக் கவிதை முடியும்

3

மணிப்பூக்கள் மலர்ந்து தொங்குகின்றன
உன் முகங்களாக
அவன் கை படுத்தபடி சிந்தித்துக் கொண்டிருக்கிறது
நடுராத்திரியின் மண்டையைப் பிளந்தபடி
ஒரு நட்சத்திரம் உதயமானது
அப்போது அவன் கை எழுந்து
டார்ச் வெளிச்சத்தில்
ஒரு கவிதை எழுதிவிட்டு
உறங்கப் போனது

4

புற்களில் தேங்கியிருந்தன மழையின் அணுக்கள்
சாலையெங்கும் வைரங்களைப் பெய்திருந்தது வானம்
பாறைக்குள் பறந்து கொண்டிருந்த என்னை
ஒரு புல்லாங்குழல் கண்டுபிடித்தது
அவள் புன்னகையைப் பிழிந்தால்
கண்ணீர் சொட்டுகிறது

5

தன்னைக் கவர்ந்து சென்று
காதலித்த புணர்ந்த அந்தப் பூச்சியின்
விஞ்ஞானப் பெயர் அறியவில்லை அவள்
ஆனால் அவளுக்குத் தெரியும்
அவள் கனவில் அவன் இருந்தான் என்று

6

அடுக்குத் தொடர்களும் இரட்டைக் கிளவிகளும்
என்ற புனைவை
அவன் இன்னும் எழுதவில்லை
ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


6. படபடத்தப் புறாக்கள்

சிவராமனும், மாலுவும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தாங்கள் விளையாடித் திரிந்த அழகை அவர்கள் பார்க்க வேண்டித்தான் அங்கு வந்து அவர்களை எழுப்பி காணச்செய்து அவர்கள் பார்த்துக் களித்ததும் தங்கள் வேலை முடிந்த மாதிரி அந்த ஜோடிப்புறாக்கள் இவ்ர்கள் கண்முன்னாலேயே பறந்து பறந்து காணாமல் போயின.

தாங்க முடியாத சோகத்தில் தொய்ந்து போன மாலுவைக் காணப் பரிதாபமாக இருந்தது, சிவராமனுக்கு.

"இத்தனை நேரமும் இங்கே விளையாடித் திரிந்து நான் பார்த்ததும் பறந்து போயிடுத்தேன்னா.." என்று வேதனையில் விக்கித்து நின்றாள் மாலு.

"என்ன மாலு, நீ என்ன குழந்தையா? பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்... அவை குஷியாகப் பறப்பது கண்டு நாம் சந்தோஷிக்க வேண்டாமா?.." என்று அவளைத் தேற்றினார் சிவராமன்.

தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் மாலு. அந்த அரையிருட்டிலும் அவள் விழிகளிலிருந்து வெளிவந்த நீர் கோடிட்டு கன்னப்பிரதேசத்தில் பளபளத்தது.
"ஆமான்னா.. நீங்க சொல்றது ரொம்ப சரி. பறவைகள் பறந்து திரிவது குழந்தைகள் ஓடி விளையாடற மாதிரிதான். ஆனால் என் மனசில் இவை வெறும் பறவைகளாகப் படலே."

சிவராமன் திடுக்கிட்டார். மாலு எதைச் சொன்னாலும் யோசித்து ஸ்பஷ்டமாகச் சொல்லும் பழக்கம் உள்ளவள். ஆதலால் இவள் உளறலாக எதையும் சொல்ல மாட்டாள் என்கிற உணர்வும் அவருக்கு இருந்தது.

எதுவும் பேசாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்கையில், மாலுவே தொடர்ந்தாள்: "கொள்ளை அழகுன்னா; கிருஷ்ண விக்கிரகம் மாதிரி ரெண்டு குழந்தைகள். தாழ்வாரத்திலேயே தவழ்ந்திண்டு வந்ததுகள், முத்தத்து மறப்பிலே மறைச்சிண்டு என்னைப் பாக்கறதுகள். எந்த முத்தம்ங்கறேள்?.. நம்ம ஜானகியோட அரியலூராத்து முத்தம்"

சிவராமன் சுவாரஸ்யமாக 'உம்' போட்டார்.

"ரெண்டு குழந்தைகளும் கொழுகொழுன்னு என்னமா இருந்ததுங்கறேள்?.. அசல் அந்த பாலகிருஷ்ணனே தான்! முத்தத்து மறப்பிலே, மயிலிறகு செருகின கிரீட அலங்காரத்தோட, நம்ப பெங்களூர் ஆத்து ஹால்லே ரவிவர்மாவோட 'ஆர்ட்'டை பிரேம் போட்டு மாட்டியிருப்போமே, அந்த மாதிரின்னா. அச்சு அசலா ஸ்வாமியே ஒண்ணுக்கு ரெண்டா குழந்தைகளா வந்த மாதிரி இருந்ததுன்னா..."

"ஓ----"

"அதுகளைத் தூக்கிக் கொஞ்சணும்ங்கற தவிப்பை என்னாலே அடக்க முடியலே. ரெண்டு அடிதான் வைச்சிருப்பேன்...'படபட'ன்னு சிறகடிச்சு ரெண்டும் புறாக்களாகி முத்தத்து மற்ப்பிலேந்து பறந்து போச்சு.. எங்கே குழந்தைகளைக் காணோம்ன்னு தேடறேன். எங்கே போச்சுன்னு தவியா தவிச்சு----பட்டுன்னு விழிப்பு வந்திடுத்துன்னா.. எல்லாம் கனவான்னு நம்பமுடியாம் பாத்தா, நீங்க ஜன்னல் பக்கத்லே நின்னுண்டிருக்கேள். என்னன்னு எழுந்து வந்தா, நான் கனவுலே பாத்த அந்தப் புறாங்களேதான்னா..
நிஜத்திலேயும் மாமரக் கிளைலே குலாவிண்டிருக்குகள்.. எது கனவு, எது நிஜம்ன்னு எனக்கு விளங்கலேயேன்னா..."


சிவராமன் மாலுவை ஆசுவாசப்படுத்தினார். "நீ கனவு கண்டதும் நிஜம். கனவில் கண்டதை நிஜத்தில் பார்த்ததும் நிஜம்" என்று சொல்லிவிட்டு, ஸ்விட்ச் தட்டி பெரிய சுவர் கடியாரத்தில் மணிபார்த்தார். "பாரு மணி நாலரை ஆச்சு. அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கச் சொல்லி கிருஷ்ணா சொல்லியிருக்கான். வாக்கிங் போக நீ ரெடியாகு" என்று தலையணையைத் தட்டி அடுக்கி வைத்தார்.

அவர்கள் தயாராவதற்குத் தான் காத்திருந்தது போல அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)
மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

கருத்துகள் இல்லை: