புதுவை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட நான்கு பேர் போலீசில் பிடியில் சிக்கி உள்ளனர்.
புதுவை அருகே உள்ள தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியைச் சேர்ந்த லாசர் மகன் ஆல்பர்ட் மற்றும் எத்திராஜ் என்பவரின் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் ஆண்டியார்பாளையத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
நேற்று காலை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் அப்பகுதியில் உள்ள காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது முள்புதரில் கிடந்த துணிப்பையை கண்டெடுத்த இருவரும் அதனை தவளக்குப்பம் பகுதியில் உள்ள சகாயமேரி என்பவரின் வீட்டின் முன்பாக போட்டி போட்டுக் கொண்டு வெளியில் எடுக்க முயன்றனர். அந்நேரத்தில் துணிப்பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆல்பர்ட், அந்தோணிராஜ் இருவரும் பலத்த காயங்களுடன் புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் இரு மாணவர்களும் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சீனியர் எஸ்.பி ஸ்ரீகாந்த், எஸ்.பி தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆட்டோ டிரைவர் மற்றும் குண்டு தயாரிக்க உதவிய மூன்று பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கொருக்குமேட்டில் உள்ள பாட்டி வீட்டின் பின்புறமுள்ள தோப்பில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது மாணவன் : தெரியாது சார் ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார். ....................................................................................................................................................................... ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ? மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய
நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக