தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும் வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும் மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு நடைபெறவுள்ளது.
அத்துடன் இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.
நாள் : 5 ஜுலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.00 முதல்
இடம் : சாரணியர் மண்டபம் பிரிக்பீல்ட்ஸ். கோலாலம்பூர்.
இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள் உணர்வாளர்கள் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். "இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் [...]
சிறிலங்காவில் பெரும் போர் நடைபெற்று முடிந்து 43 நாட்களின் பின்னர் கடந்த புதன்கிழமை யாழ் குடாநாட்டின் நான்கு அரச அதிகாரிகளும், முதன்முறையாக தமது பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேத நாயகன், முல்லைதீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், மன்னார் மாவட்ட உயர் அதிகாரிகள், வவுனியா மாவட்ட உயர் அதிகாரிகளே இவ்வாறு தத்தமது பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக