செரீனா வில்லியம்ஸ் 2009 விம்பிள்டன் சாம்பியன். மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸை 7 -6 , 7 - 3 , 6 -2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வென்றுள்ளார். இவர்கள் 8 முறை இறுதியாட்டத்தில் சந்தித்ததில் 6 முறை செரீனா வென்றுள்ளார். வாழ்த்துக்கள் செரீனா!
5 முறை விம்பிள்டன் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் 7 ஆவது இறுதியாட்டத்தில் விளையாடுகிறார். வென்றால் அதிக Grand Slam பட்டங்களை வென்றவராவார். வாழ்த்துக்கள்.

அப்ப மெட்ராஸில செரியான மழை. சவுட்டி எடுக்குது. அந்தக் கார்க் கமபனியில் இருந்து வாடிக்கையாளர் ஒருத்தருக்கு சப்ளை பண்றதுக்காக சில உதிரி பாகங்களை அண்ணைக்கே அனுப்பியாகணும். கம்பனிக்குள்ளயே வேர் ஹவுஸிலிருந்து டெஸ்பாட்ச் பண்ற இடத்துக்குப் போற வழியில தோள் அளவுக்கு வெள்ளம் ஓடிகிட்டு இருக்குது. ராத்திரி மணி எட்டரை. இருட்டுக் கட்டிகிட்டு இருக்குது. சுமாரா 10 கிலோ எடை இருக்குற அந்தப் பார்சல வேர் ஹவுஸில் இருந்து அனுப்புற எடத்துக்கு ஒர்க்கருங்க ஆரும் கொண்டு போகமுடியாதுனு சொல்லிப்போட்டாங்க. கம்பனி வெளிநாட்டுக் கம்பனி. டயத்துக்குப் பொருளை அனுப்பறத ஒரு கவுரமா நெனைக்கிற கம்பனி.
அந்தச் சமயத்துல அங்க அந்த வருசம்தான் மெரிட்ல ப்ளேஸ்மென்ட் ஆயிருந்த இளம் மெக்கானிக்கல் இஞ்சினீயர் ஒரு எளந்தாரி இருந்தான். காருண்யா யூனிவெர்சிடியில மொதோ ரேங்க் வாங்குனவன் அவன். இன்ஃபோஸிஸ் மாதிரியான கம்பனிகளிலேயும் ப்ளேஸ்மெண்ட் கெடைச்சும் இந்த வேலைய விரும்பித் தேர்ந்தெடுத்தவன் அவன்.
அந்த இஞ்சினீயர் பையன் என்ன பண்ணுனான்னா அந்தப் பார்சலை மழை நனையாம உண்ணம் நல்லாப் பேக் பண்ணிட்டுத் தன்னோட தலைல வெச்சுகிட்டு விறுவிறுனு தோள் அளவுக்குப் பாயுற வெள்ளத்தில, கொட்டுற மழையில, வேர் ஹவுஸிலிருந்து டெஸ்பாட்ச் செக்ஷனுக்கு சுமாரா 1 கிமீ கொண்டுபோய்ச் சேர்த்துட்டான்.
அண்ணைக்கே அது போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போயிருச்சு. இதொண்ணும் தெரியாம கார்க் கம்பெனியிலிருந்து, "பொருளை அனுப்ப ரண்டு நாளாகும்"னு மெயில் அனுப்பியிருக்காங்க. "இல்லையே! பொருள் டயத்துக்கு வந்திருச்சே"னு பதில் மக்கா நாளு வந்திருச்சு. கம்பனிக் காரவிங்களுக்கு நெம்ப ஆச்சரியமாப் போச்சு. அப்பறம் நடந்தது என்னனு வெசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டாங்க.
உண்ணொரு சம்பவம். கம்பனி ஸ்டாஃப் அல்லாத்தையும் கூட்டிட்டு வந்து திலும்பக் கொண்டு போயி உடறதுக்கு ஒரு பஸ் இருக்குது. ஒரு நாளு சாயங்காலம் அந்த பஸ் வந்துகிட்டு இருக்கறப்போ ட்ரைவருக்கு திடீல்னு நெஞ்சு வலி வந்து மயங்கிட்டாரு.
அல்லாரும் பதறிப்போட்டாங்க. ஒரு சீனியர் மேனேஜரு சீக்கிரம் ஆம்புலன்ஸ வரவெக்கப் போன் பண்ணப் போனாரு. அப்ப அதே இஞ்சினீயர் பையனும் அந்த பஸ்ல இருந்திருக்கான். அமைதியா எந்திருச்சு வந்து, "எங்கிட்ட ஹெவி வெஹிக்கிள் லைஸென்ஸுங்கூடி இருக்குது! பாருங்க! நானே பஸ்ஸ ஆஸ்பத்திரிக்கு ஓட்டிட்டிடுப் போறன்" அப்படினு சொல்லிப்போட்டு மவுண்ட் ரோடு சாயங்கால ட்ராபிக்ல அனாயசிமாப் பஸ்ஸ ஓட்டி ஆஸ்பத்திரியில ட்ரைவரைச் சேத்திப்போட்டு பஸ்ல வந்த முச்சூட்டுப் பேரையும் - கடைசி நெலை ஒர்க்கர் வரைக்கும் - அவிங்கவிங்க ஊடுகள்ல உட்டுப்போட்டு, பஸ்ஸையும் கம்பனியில ஒப்படைச்சிட்டு அதுக்கப்பறம் தன்ர ரூம்புக்குப் போகப் பஸ்ஸோ ஆட்டோவோ கெடைக்காததால ஆப்பீஸிலயே ஒரு பெஞ்சியில படுத்துத் தூங்கிப்போட்டு பொழுது விடிஞ்சதும் அடுத்த நாளு வேலைகளைக் கவனிக்க ஆரமிச்சிட்டான்.
இதையெல்லாம் அந்த இஞ்சினீயர் பையன் கூட வேலை செய்யற உண்ணொருத்தர் மூலமாத் தெரிஞ்சுகிட்டேன். நெம்ப சந்தோஷமா இருந்துச்சு.
'சண்டைனு வந்தாப் பல்லை ஒடைக்கவும் தெரியுது. வேலைனு வந்தா செஞ்சு முடிக்கவும் தெரியுது'னு எனக்கு நெம்ப நிதாயிருச்சு.
கிரிதரோட இந்த ரண்டு மேட்டரையும் அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமி அய்யா கிட்டச் சொன்னேன்.
அவரு சொல்றாரு.
"உண்மைதான்!
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்"
திருக்குறள் சொன்னால் என்ன – அதைத் தெருக்குரல் திரும்பச் சொன்னால் என்ன? - உண்மை உண்மைதான்!"

*********************************************************************************
ஏற்கெனவே துக்ளக்கில் தொடராக வந்த 'எங்கே பிராமணன்' புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது(மொத்தம் 11 பதிப்பு). கிடத்தட்ட 5 மாதங்களாக வந்த 'எங்கே பிராமணன்' தொடர் ஜெயா டிவியில் போன வாரம் நிறைவடைந்தது.
சீரியலில் வெறும் கதை மட்டுமே சொல்லிக்கொண்டு போகாமல், இடையிடையில் சோவிடமே கேள்விகள் கேட்டு ஹிந்துயிஸம், மதங்கள், கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்கள், சடங்குகள், அதன் அர்த்தங்கள், மநுஸ்மிருதி மற்றும் பல்வேறு விஷயங்களை இந்த தொடர் தொட்டு சென்றது. சோ அளித்த விளக்கங்கள், எதார்த்தமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது தமிழ் சீரியலுக்கு புதுசு. புதிய டிரெண்ட் செட்டர்.
இந்த தொடர் ஆரம்பிக்கும் முன் சென்னை நகரில் "எங்கே பிராமணன் ? எங்கே பிராமணன் ?" என்று ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டி தேடியதை பார்த்த தி.கவினர் "என்னடா இது இவர்கள் பிராமணனை கண்டு பிடித்து விடுவார்களோ" என்று கவலைப்பட்டனர்.
என்றும் சோ அய்யர்வாள் என்று எழுதி தங்கள் டென்ஷனை குறைத்துக்கொண்டார்கள். ( அவர்கள் பிஸினஸ் அவர்களுக்கு )
"எங்கே பிராமணன்" தொடர் வெற்றிகரமாக போனதற்கு "எதற்காக பிராமணன்?" ( எதற்காக பார்ப்பான் என்று வைத்திருக்க வேண்டும், மறந்துவிட்டார்கள்) என்று பகுத்தறிவாளர் கழகம், தி.கவினரும் சேர்ந்து மதுரையில் தொண்டை கிழிய இரண்டு மணி நேரம் பேசினார்கள்.
டோண்டு அவர்கள் எல்லா எபிசோடையும் கவர் செய்து வீடியோ லிங்க் தந்தது என் போன்ற லேட்டாக வீட்டுக்கு போகும் தர்ப்பைப்புல் கூட்டதுக்கு உபயோகமாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
'எங்கே பிராமணன்' நிறைவடைந்ததை அடுத்து 'எங்கே சீரியல்' என்று நாம் தேட ஆரம்பிக்கலாம்.

பிராமணன் வடகலைப்பார்ப்பான்
தென்கலைப்பார்ப்பான்
எப்பார்ப்பான் ஆனாலும்
தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்
என்றும் சோ அய்யர்வாள் என்று எழுதி தங்கள் டென்ஷனை குறைத்துக்கொண்டார்கள். ( அவர்கள் பிஸினஸ் அவர்களுக்கு )
"எங்கே பிராமணன்" தொடர் வெற்றிகரமாக போனதற்கு "எதற்காக பிராமணன்?" ( எதற்காக பார்ப்பான் என்று வைத்திருக்க வேண்டும், மறந்துவிட்டார்கள்) என்று பகுத்தறிவாளர் கழகம், தி.கவினரும் சேர்ந்து மதுரையில் தொண்டை கிழிய இரண்டு மணி நேரம் பேசினார்கள்.
டோண்டு அவர்கள் எல்லா எபிசோடையும் கவர் செய்து வீடியோ லிங்க் தந்தது என் போன்ற லேட்டாக வீட்டுக்கு போகும் தர்ப்பைப்புல் கூட்டதுக்கு உபயோகமாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
'எங்கே பிராமணன்' நிறைவடைந்ததை அடுத்து 'எங்கே சீரியல்' என்று நாம் தேட ஆரம்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக