முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் நடத்திய வலிந்த தாக்குதலிலும் ஆட்லெறி மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களிலும் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.
இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டு கடல்வழி தரையிறக்க முயற்சியும் முறியடிக்கப்பட்டதுடன் -
தரைவழியாக முன்நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சமர் - கட்டளைப்பீடத்தை மேற்கோள் காட்டி புதினத்தின் வன்னிச் செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இந்த தரையிறக்க முயற்சியை படையினர் மேற்கொண்டனர்.
106 மில்லி மீற்றர் ரக பீரங்கிகளால் மக்கள் மீது செறிவான தாக்குதலை நடத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.
இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் தரையிறக்க முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன்கிழமை அதிகாலையும் 15 டோறா பீரங்கிப் படகுகள், 25 வரையான அரோ படகுகள் மற்றும் கூகர் படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டபோது அதனையும் விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர்.
இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்று முற்றாக தாக்கி மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று அரோ படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு ஆதரவாக நேற்று முன்நாள் தொடக்கம் இரட்டைவாய்க்கால் வடக்கு பகுதியில் இருந்து 58 ஆவது படையணியும் தரைவழி மூலமான வலிந்த தாக்குதல்களை கனரக ஆயுதங்களின் பயன்பாட்டுடன் மேற்கொண்டிருந்தது.
ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, டாங்கி மற்றும் கனரக போர்க்கலங்களுடன் இந்த வலிந்த தாக்குதலை 58 ஆவது படையணியினர் மேற்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் சாளம்பன் பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளே இந்த தாக்குதலுக்கு இலக்காகின.
இதில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் இந்த தரைவழி முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும் சிறிலங்கா படையினர் இன்று இந்த செய்தி பதிவேற்றப்படும் வரை தொடர்ச்சியாக தரைவழியாக கடுமையான வலிந்த தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையாக பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
படையினரின் தாக்குதல்களின்போது மக்கள் வாழ்வ்விடங்களை நோக்கி படையினரின் எம்.ஐ.-24 ரக உலங்குவானூர்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.
கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.
வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.
புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.
கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.
இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.
உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.
கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.
http://www.tamilreader.com
புத்தரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு சிந்தனையாளர் உலகில் இல்லை.
புத்தரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் உபதேசங்களும் அவர் உயர்த்திப் பிடித்த கொள்கைகளும் கூட இன்று பலவாறாகத் திரிக்கப்பட்டுள்ளன.
உண்மையில் புத்தர் யார்? கடவுளின் அவதாரமா அல்லது கடவுளேதானா? புத்தர் எவற்றை நிராகரித்தார்? எவற்றை ஏற்றுக்கொண்டார்? புத்தர் துறவறம் மேற்கொண்டது ஏன்? அவர் யாருடன் போரிட்டார், எதற்காக? அவரது எதிரிகள் யார்?
புத்தர் வாழ்ந்த காலத்துக்கே உங்களை அழைத்துச் செல்லும் இந்நூல் அவரை மிக வித்தியாசமான கோணத்தில் அறிமுகம் செய்து வைக்கிறது.
Author: மருதன்
தேர்தல் காலம்.
ஒவ்வொரு அணியிலும் ஈழ இரத்தத்தை வாக்குகளாக மாற்றும் முயற்சியில் அரசியல் கட்சிகள்…
ஆனால்…
உணர்வு பூர்வமாக…
செங்கொடி ஏந்தி… மேநாளில்….
ஈழவிடுதலைக்கு ஆதரவாக….
புலிகளை ஆதரித்து…
இந்திய – இலங்கை அரசுகளை கண்டித்து…
காஞ்சிபுரத்தில் மே1-2009 இன்று மே நாள் மற்றும் ஈழவிடுதலை ஆதரவு இயக்கம் நடை பெற்றது.
பல ஆயிரம் பாட்டாளிகளை, இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களை ஒன்று திறட்டி காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பில் மாபெரும் இயக்கம் .. நடைப் பெற்றது…
தோழர்கள் மகேஷ் மற்றும் ஜெரி போன்றோர்களின் உறுதியான வழிக்காட்டுதலில் இவ்வியக்கம் காஞ்சியையே அதிரச் செய்த்து.
புலிகளைப்பற்றி பேசினால் தேசவிரோதமாக்கப்பட்ட தமிழகத்தில்…
மீறியது மக்கள் மன்றம்..
புலிகள் பற்றி பேசினால் கைத்தட்டல்,
பாடினால் ஆட்டம் ஆர்ப்பரிப்பு…
சோனியா இரக்பக்ஷே கபடத்தை வெளிச்சம் போட்டு தோளுரித்து காட்டினார்கள்.. மக்கள் மன்றத்தினர்..
"மக்களெல்லாம் மக்களெல்லாம் பிராபகரன் பக்கம்'' என்று சிறுவன் முழங்கிபோது கூட்ட வளாகமே எழுந்து ஆடியது.. கைத்தட்டியது… முழகங்கள் விண்ணைத் தொட்டது…
இந்நிகழ்வில் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை பாவாணன் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்…
வீர வணக்கங்கள் செலுத்துவோம் மக்கள் மன்றத்தினரை..
போறுவோம் போராட்டத் தோழியர்களை.
பதிவுல பொறை தெரிவது யாரோடு குத்தம் ? சாமிப் பேரைச் சொல்லாதிங்க சாமி கண்ணைக் குத்திடும், இதுக்கு காரணம் தமிழ் மணம் தான் என்றே கருதுகிறேன். தமிழ் மணத்தின் கருவிபட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு, தமிழ்மணம் வேண்டு மென்று இதைச் செய்கிறார்களா ? இல்லை,கவனக்குறைவாக இந்த குறையை சரி செய்யாமல் வைத்திருக்கிறார்கள். வரலாறு என்னன்னா ?...முன்பு சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக்கர் தனது வடிவத்தையும், வர்சனையும் மாற்றியது, அப்போது ஒருங்குறியில் (யூனிக் கோட்) பதிவர் பெயர்கள் வைத்திருந்தவர்களை கண்டு கொள்ளாமல் அந்த மாற்றத்தை கூகுள் புதிய வலைப்பக்க வடிவத்தை அமைத்துவிட்டது. அதனால் பழைய பதிவுகளை திறந்தால் பின்னூட்ட மிட்டவரின் பெயருக்கு பதிலாக வசையாடல் சொற்கள்போல் '@3#fslksd%&' என்பதாக தெரியும், அதை ஜாவா ஸ்கிரிப்ட் வழியாக் சரி செய்ய முடியும் என்று பதிவர் ஜெகத் ஸ்கிரிப்ட் அமைத்துத் தந்தார். அதையும் சேர்த்தெ தமிழ்மணம் கருவிப் பட்டையில் இணைத்திருந்தது தமிழ்மணம். எனவே முன்பு தமிழ்மணம் ஸ்கிரிப்டை தமிழ்மணம் வழியாகவே இணைப்பவர்களுக்கு கூகுள் யூனிக் கோட் பிரச்சனை சரியாகியது. ஆனால் விரைவிலேயே கூகுள் யூனிக் கோட் பிரச்சனையை சரி செய்தது, புதிய ப்ளாக்கரில் அந்த பிரச்சனை தற்பொழுது இல்லை. புதிதாக தமிழ்மணத்தில் இணைபவர்களுக்கும் தமிழ்மணம் பதிவு பட்டை ஸ்கிரிப்டுடன் ஜெகத் தின் ஸ்கிரிப்டும் சேர்ந்து வலைப்பக்க கருவிப்பட்டையில் (Blogger Template) இணைந்து இருப்பதால் தான் அந்த '))' பிறை தெரிகிறது.
மிகவும் எளிதாக அதை அகற்ற முடியும்.
Logon to blogger, Select Layout , Edit HTML , then
Click on 'Expand Widget Templates'
(படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.)
Search for the word 'to_unicode'
Select the lines as marked as green square, in above picture,
Replace with below lines (select, copy and paste over your template)
இந்த பகுதியில் பெட்டியில் இருக்கும் ஸ்கிரிப்டை, உங்கள் பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் மேலே பச்சை வண்ணத்தில் குறித்துள்ள ஸ்கிரிப்டுக்கு பதிலாக மாற்றி அமையுங்கள், பிறகு டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு பதிவை திறந்து பார்த்தால் 'பிறைகள்' காணாமல் போய் இருக்கும், அதற்கு பதிலாக பதிவர்களின் பெயர் தெரியும்.
பின்குறிப்பு : டெம்ப்ளேட்டில் கை வைக்கும் முன் தனியாக சேமித்து வைத்துக் கொள்ளவும், ஒரு வேளை சரியாக திருத்தவில்லை என்றால் சொதப்பல் ஆகிவிடும், சேமித்து வைத்திருந்தால் பழையபடி சேர்த்து மீண்டும் சரி செய்ய முயற்சிக்க முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக