சனி, 2 மே, 2009

2009-05-02

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி Income Tax department velloreல இருந்து வீட்டுக்கு ஒரு போன் இது மாதிரி இது மாதிரி நீங்க போன வருசம் IT file பண்ணி இருக்கீங்க இல்ல அதுல குத்தம் இருக்குது சீக்கிரமா நேர்ல வந்து அதை நீக்கி உங்க காசை வாங்கிட்டு போங்கண்ணு சொன்னாங்க.. அடடா இம்முட்டு நாளா IT துறையை பத்தி எவ்வுளவு கேவலமா நினைச்சிட்டு இருந்தோம் இவங்க இம்முட்டு நல்லவங்களா இருக்காங்களேன்னு ஒரு நிமிசம் ஒரே பீலிங்கஸாப்போச்சி.... சரிங்க ஆபீசர் நேர்ல வரேனுங்க ஆபீசர் ஆனா நீங்க என்ன குத்தம் கண்டீங்க அப்படின்னு கேட்டா உங்க form 16ஜ காணோமுன்னு சொன்னாங்க...

ஒரு நிமிசம் அப்படியே ஷாக்காயிட்டேன்.. form 16 இல்லாம எப்படிடா tax file பண்ண முடியும்? நம்ம நல்ல ஆடிட்டரை வெச்சி தானே எல்லா வேலையையும் முடிச்சோம், அவரு இது மாதிரி தப்பு செய்ய மாட்டாரேன்னு சந்தேகம் வந்து ஆடிட்டருக்கு போன் பண்ணா சார் அவனுங்க கட்டிங்க எதிர்பாக்குறானுங்க ஒரு 10-15% குடுத்தா கைல செக்கை குடுத்துடுவாங்க அப்படிங்கிறாரு.இப்பவெல்லாம் வங்கி கணக்கு மூலமாக நேரடியா பணத்தை திரும்ப பெறும் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால் இப்பவெல்லாம் இவனுங்க இப்படி செய்றானுங்க அப்படின்னு சொன்னாரு.எப்படியெல்லாம் புதுசு புதுசா யோசிச்சி லஞ்சம் வாங்குறானுங்க பாருங்க இவனுங்க.

எல்லாத்தையும் சரியா குடுத்தாலும் நம்ம காசை நாம் திரும்பி வாங்க இவனுங்களுக்கு தண்டம் அழவேண்டியதா இருக்கு :(. கருமம் புடிச்ச கம்பெனிகாரனுங்க வரியை சரியா புடிச்சி தொலைஞ்சா இந்த நாயிங்களுக்கு தண்டம் அழ வேண்டியது இல்ல. இப்ப தெரியுது ஏன் எவனும் நேர்மையா வரியை கட்ட மாட்டேங்கிறாஙன்னு.. இப்ப என்ன செய்யலாம் உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்?

நீரஜ் பாந்தேவின் 'a wednesday', சந்தோஷ் சிவனின் 'tahaan' அருந்ததீ, அயன் மற்றும் பட்டாளம் படங்கள் கிடைத்தன. குழந்தைகள் தமிழ்ப்ப்டங்களை பார்க்க அடம் பிடித்தததால் பார்க்க வேண்டியதாயிற்று. அருந்ததீ  குப்பை என்றால் அயன் சர்வதேச குப்பை. அருந்ததீ படத்திற்கு பின்னணி இசையே ஒரு மனிதனின் மூச்சிறைப்புதான் போல. சதா நேரமும் புஸ் புஸ்ஸென்று சகிக்கவில்லை. விட்டலாச்சார்யா படங்களில் பேய்கள், மந்திரக் காட்சிகள் எல்லாம் எவ்வளவு சுவராஸ்யமாய் இருக்கும் எனத் தோன்றியது. அயனில் ஒரு காட்சியும் நினைத்துப் பார்க்கவும், சொல்வதற்கும் இல்லை (பாதிப்படத்திற்கு மேல பார்க்கவே முடியவில்லை). கனாக்காலம் தொடரின் விடலைப்பருவ சுவராஸ்யம், பட்டாளமாக உருமாறியிருக்கிறது. இதைவிட,  இதே காலங்கள் தமிழில் அருமையாக படம்பிடிக்கப்பட்டு இருக்கின்றன.

0000

எனக்குப் பிடித்த சினிமாக் காட்சிகள் பலவற்றை கம்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதில் மொழி படத்தில் ஜோதிகாவுக்கு இசையினை புலன்கள் வழியாக உணர்த்தும் அந்தக் காட்சியும் உண்டு. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சியமைப்பு.  பிருத்விராஜின் ஆர்வம் கொப்பளிக்கும் கையசைவுகள், ஜோதிகாவின் விரல்கள், கண்கள், இசை, காமிராவின் சுழற்சி, எடிட்டிங் என அப்படியே பார்வையாளனை தன் வசமிழக்கச் செய்யும் அற்புதமான கணம் அது. அவ்வப்போது அதைப் பார்ப்பேன். அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மகள் (பிளஸ் டூ படிக்கிறாள்) "அப்பா, அப்படியே இந்தக் காட்சியில் திரிஷா நடித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என்று சொன்னாள். யோசிக்கவே முடியவில்லை. மகள் வாயைப் பொத்திக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

0000

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலைக் கட்டுவோம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியை 9 சதவீதத்துக்கும் அதிகமாக்குவோம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைப்போம்"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்"

இப்படி எழுதிவிட்டு, "அண்டாகா கசம் அபுகா குகம்.. திறந்திடு சீசே!" என்று தலைப்பிட்டால் எப்படி பொருந்துகிறது?

0000

கிரமணி ஷர்மாவின் இந்தக் கவிதை தொலைவிலிருக்கும் நம் கிராமத்தை அசைபோட வைக்கிறது.

சாணம் மெழுகிய தரையில்
வட்டமாய் உட்கார வைத்து
உருண்டையாய்ப் போடுவாள்
பழைய சோற்றைப் பாட்டி
பப்பாளி மரத்திலிருந்து
காக்கைகள் கத்திக்கொண்டு இருக்கும்
மிச்ச மீதிக்கு

காலையில்
பெருமாள் சோவில் சுற்றுச்சுவர்
வெய்யில் ஏற ஏற
தோப்புக்குச் சென்று
மரநிழலில் மண்ணில் புதைவது

'தாகமா இருக்காக்கும்'
என்கிற தோப்புக் காவல்
மீசை ஆறுமுகத்தின்
கேள்விக்கு முன்னதாகவே
கண்கள் இளநீர் தேடும்

போதாக்குறைக்கு
மாங்காய் பறித்து
தின்னத் தெரியாமல்
உதட்டோரத்துப் புண்ணும்
சேர்ந்து கொள்ளும்

ஊரணியில் கொட்டமடித்தும்
உப்பளம் பார்த்தும்
இதமாய்க் கழியும் விடுமுறை

திரும்பவும்
அடுக்குச் சுவர்களின்
ஆக்கிரமிப்பில்
காற்றோட்டமிழந்த
நகரப் புழுதியில்
வந்து விழும்போது
களைத்துப் போகும்
மனசு ஏங்கும்
இன்னொரு விடுப்புக்கு

*

ஏனைய பாஷைகளைப் போல ஆங்கிலமும் ஓவ்வோர் திக்கிலும் வெவ்வேறு
உச்சரிப்புடன் தோன்றும் --- ஓவ்வோர் Dialects என்பார்கள் ---

முன்பு ஓர் காலம் Clerk
என்ற சொல் எனக்கு
முக்கியமானதாக இருந்தது ---

நான் Clerical Service ல் இருந்ததால் இதன் உச்சரிப்பு முக்கியம் தானே

இந்த  clerk கை  Oxford  Dictionary  தன்னும்  இரு  உச்சரிப்புகளை  தந்தது  ---

ஒன்று  ஆங்கில  கிளார்க்  என்றும்  அமெரிக்க  கிளெர்க்  என்றும்  தந்தது  

Powered by ScribeFire.

கருத்துகள் இல்லை: