சனி, 2 மே, 2009

2009-05-02

கேட்க இந்த இணைப்பிற்கு செல்லவும்

http://www.4shared.com/file/100573174/7a286ef7/Pengal_Unna_Nilai.html

நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது மட்டும் தான் வாக்காளர்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் என்று விளம்பரம் செய்தாலும் கூட தேர்தல் அன்று கிடைக்கும் விடுமுறையை வீட்டில் இருந்து அனுபவிக்கத்தான் மனமிருக்குமே தவிர ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட மனம் வராது. இந்தியாவில் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தங்களுக்கு வாக்குரிமை இருக்கும் ஊரில் தேர்தல் நடைபெறும் நாளில் அங்கு சென்று ஓட்டளிக்க எத்தனைபேருக்கு மனம் வரும்?

துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வெறும் இரண்டே நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து செல்ல இருக்கிறார் என்றால் அதை நம்ப சிறிது சிரமமாகக் கூட இருக்கலாம். ஆனால் அபி அப்பா அதை செய்ய இருக்கிறார்.

அவர் எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும், ஓட்டளிக்க வேண்டும், தனது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.
ஓட்டுரிமையை நிலைநாட்ட என்றே தாய்நாட்டிற்கு வருகை தர இருக்கும் அபி அப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.

எல்லாம் சரி நீ எப்டின்னு என்னையப் பார்த்து கட்டாயம் என் மாப்பி சஞ்சய் கேட்பாரு. எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசு வரல மாப்ளன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. சரி உண்மையச் சொல்லிடுறேன், 2004 தேர்தல்ல இருந்தே என் பெயர் வாக்காளர் பட்டியல்ல இல்ல. 2004 தேர்தலப்போ சென்னையில இருந்து ஓட்டுப் போடுறதுக்காக எங்க ஊருக்குப் போயிட்டு ஓட்டுப் போட முடியாம வந்தேன், அதுக்கு அப்றம் நான் இங்க வந்துட்டதுனால என் பெயர் சேர்க்கப்படாமலே போயிருச்சு. அதுனால நான் வந்தாலும் ஓட்டுப் போட முடியாது. ( சஞ்செய்ய வம்பிழுத்தாச்சு.)

ஒழுங்கா பதிவு எழுதப் போறியா இல்லையான்னு என்னைய மிரட்டிய அன்புத் தங்கை தூயாவிற்கு நன்றிகள். நம்ம வலைப்பூவ அருமையா வடிவமைச்சதும் தூயா தான்.

ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும்.

ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்
'தல'மை செயலகம்
ஒஸ்திரேலியா

என் பதிவிலிருக்கும் பிற கல்லூரிகதைகள் போலல்லாமல் இந்த கதையும் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவது அல்ல

மருத்துவக்கல்லூரி முதலாண்டில் கண்ணனும் மாதவனும் அறைத்தோழர்கள். இருவருக்கும் இடையில் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரே விஷயத்தில் மட்டும் வித்தியாசம் உண்டு !!

முதலாண்டில் காலையில் 8:30 மணிக்கு உடற்கூறியல் கூடத்திற்கு செல்ல வேண்டும். தலை வரை படுக்கை விரிப்பை போத்திக்கொண்டு படுத்திருக்கும் இருவரும் எழும்புவதே 8 மணிக்கு தான். இவர்கள் எழும்வதற்குள் இவர்களின் அறைத்தோழர் டேனியல் எழுந்து குளித்து சாப்பிட்டு அன்று நடத்தக்கூடிய பாடங்களை மேய்ந்து கொண்டிருப்பார்

நம் கதாநாயகர்களோ வேகவேகமாக பல்தேய்த்து காலைக்கடனை முடித்து குளிக்காமல் குளியலறைக்கு அருகில் தொங்கும் உடைகளை போட்டு, இட்லியையோ பொங்கலையோ அவசர அவசரமாக விழுங்கி ஒரு 8:20 க்கு கிளம்பி ஓட்டமும் நடையுமாக ஓடி 8:30க்கு வருகைப்பதிவேட்டில் Aல் ஆரம்பிக்கும் பெயரை வாசிக்க துவங்கும் போதகர் 8:32க்கு கண்ணன் என்று வாசிக்கும் முன்னர் உள்ளே சென்று விடுவதில் கெட்டிக்காரர்கள்.

வகுப்பு முடிந்து உடற்கூறியல் செய்முறை வகுப்பில் இருக்கும் பார்மலின் மற்றும் பிற வாசத்துடன் மாலை 3 அல்லது நான்கு மணிக்கு அறைக்கு திரும்பி உடன் குளித்து புத்துணர்ச்சியுடன் நூலகம் செல்வது அன்றைய தினத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.

நூலகம் சென்று உடற்கூறியலோ (அனாடமி), உடலியக்கவியலோ (பிசியாலஜி) அல்லது உயிர்வேதியலோ (பயோகெமிஸ்டிரி) (இவை மூன்றும் தான் முதல் வருட பாடங்கள்) படிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு. கண்ணன் சட்டம் சார் மருத்துவ புத்தகத்தையும் மாதவன் மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்சன் எழுதிய பெரிய புத்தகங்களையும் படிப்பார்கள்.

அதன் பிறகு நூலகம் மூடிய பின்னர் இரவு உணவருந்தி விட்டு, அந்தவாரம் / அடுத்தவாரம் இருக்கும் தேர்விற்கு படிக்க ஆரம்பிப்பார்கள். 9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் படித்து விட்டு, மெதுவாக கிளம்பி சென்று தேநீர் அருந்தி விட்டு (10 முதல் 11 வரை) அப்படியே பொது தொலைபேசியில் வீட்டிற்கு தொலைபேசிவிட்டு (அந்த காலத்தில் செல்லிடப்பேசி எல்லாம் கிடையாதே) மீண்டும் ஒரு மணி நேரம் படித்து விட்டு (11 முதல் 12 வரை) மீண்டும் ஒரு மணி நேரம் தேநீர் குடித்து விட்டு (தேநீர்க்கடை செல்ல 20 நிமிடம், தேநீர் குடிக்க 20 நிமிடம், திரும்பி வர 20 நிமிடம்) அதன் பிறகு தூக்க கலக்கத்தில் படம் வரைவது, "ரிகார்ட்" எழுதுவது போன்ற வேலைகளை பார்த்து விட்டு இரண்டு அல்லது மூன்று மணிக்கு தூங்கினால் அடுத்து காலை 8 மணிக்கு எழும்ப வேண்டியது தான்

அந்த வாரம் எதுவும் தேர்வு இல்லை என்றாலோ அல்லது இருக்கும் தேர்விற்கான பாடங்கள் குறைவு என்றாலோ இரவு படிப்பது / தேநீர்க்கடை செலவதற்கு பதிலாக ஏதாவது திரையரங்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இது போல் பல விஷயங்களிலும் இருவருக்கும் ஒற்றுமை தான். சரத்குமார், பிரபுதேவா படங்களை கூட இருமுறை பார்த்திருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் இரு துருவங்கள்

அந்த விஷயம் : பெண்களிடம் பழகுவது

பெண்களிடம் பேசும் போது மென்மையாக, நளினமாக பேசுவது கண்ணன் வழக்கம். மாதவனோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவன். இதனால் மாதவனிடம் பேசும் பெண்களின் எண்ணிக்கை பம்பரக்காரர்கள் போட்டியிடப்போகும் மக்களவை இடங்களை போலவும், கண்ணனிடம் நன்றாக பேசும் பெண்களின் எண்ணிக்கை கைகாரர்களில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை போலவும் இருப்பது இயல்பு தான்.

கண்ணனோ யாரையாவது ஒரு பெண்ணை நினைத்து "அவள் வருவாளா, அவள் வருவாளா" பாடலை ஓலிநாடா தேயும் வரை திரும்ப திரும்ப ஓட விட்டு கடைசியில் அந்த பெண்ணிடம் எப்படி கூறலாம் என்று நினைக்கும் நேரம் பாழாய்ப்போன ரக்‌ஷா பந்தன் வந்து விட இது தான் சமயம் என்று அந்த பெண் ராக்கி கட்டி விடுவார்

கண்ணன் தாடி வளர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எல்லாம் கிடையாது. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல் அடுத்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்து விடுவார். இந்த முறை "என்ன அழகு எத்தனை அழகு" பாடல் ஓலிநாடா தேயும்வரை ஓடும். (வாயிருந்தால் அந்த ஒலிப்பேழை அழும் என்று நாங்கள் எங்களுக்குள் நக்கலடிப்போம்)

ராக்கி கட்டியவிவளிடமே அடுத்த பெண்ணின் பிறந்த நாள் போன்ற விஷயங்களை விசாரிப்பதால் உஷாராகும் அடுத்த பெண்ணும், அடுத்து தீபாவளியோ, பொங்கலோ, மருத்துவர் தினமோ வரும் சமயத்தில் கண்ணன் இல்லாமல் நிறைய வகுப்பு மாணவர்கள் கூட்டமாக இருக்கும் நேரத்தில் ஒட்டப்படாத ஒரு உறையை "இதை கண்ணனிடம் கொடுத்து விடுங்கள்" என்று கூறி தந்துவிடுவார்.

உறை ஓட்டப்படாமல் இருப்பதாலும், கூட்டத்தில் யாராவது ஒருவர் சட்டென்று உள்ளே என்ன உள்ளது என்ற ஆர்வத்தில் திறந்து விடுவார். திறந்து பார்த்தால் "பார் மை லவ்விங் பிரதர்" (அன்பு சகோதரனுக்காக) என்று ஒரு வாழ்த்து அட்டை இருக்கும். அனைவரும் முன்னால் அளிக்கப்படும் வாழ்த்து அட்டை என்பதால் ஒரே நாளில் விஷயம் வகுப்பு முழுவதும் பரவி விடும். அப்படி பரவ வேண்டும் என்பதற்காகத்தானே அது அனைவர் முன்னாலும் அளிக்கப்படுகிறது !!

கண்ணன் அதன் பிறகு வேறு காதலி தேடுவார். கண்ணன் தற்பொழுது எந்த பெண்ணை சுற்றி வருகிறார் என்பது வகுப்பில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாயிற்று. இந்த விஷயங்கள் பரவலாக அனைவருக்கும் தெரிய வந்ததால், கண்ணனின் நட்பு வட்டாரம் பெரிதாகியது. முக்கியமாக ராக்கி கட்டியவர்கள் மற்றும் "சகோதரிகளின்" எண்ணிக்கை பெருக அவர்களின் தோழிகளும் கண்ணனிடம் நட்பானார்கள்.

மாதவனோ இவ்வளவு கஷ்டப்பட்ட இல்லை. அறையில் ஸ்டெபி கிராப், மணிஷா கொய்ராலா படங்களை ஒட்டி வைத்திருப்பார்.(அது பம்பாய் படம் வந்த சமயம்) அவர்களை போல் பெண்ணை தேடிக்கொண்டிருந்ததால் (அது போல் யாரும் அந்த கல்லூரியில் படிக்காததால்) மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்) கடையில் ஒரு ராக்கி குறைவாக விற்றதை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.

மூன்றாம் ஆண்டு கண்ணனும் மாதவனும் வேறு அறைகளுக்கு சென்று விட்டதால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் பழக்கம் குறைந்தது. அதேப்போல் காலையில் வெவ்வேறு பிரிவுகள் என்பதாலும் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அவ்வப்போது விடுதியிலோ உணவகத்திலோ, தேநீர்கடையிலோ சந்திக்கும் போது நலம் விசாரிப்பது மட்டும் தொடர்ந்தது.

வாழ்க்கை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கண்ணின் அறையிலிருந்து "உனை பார்த்த பின் நான்" பாடல் ஒலிக்கத்தொடங்கியது (அடுத்த ராக்கியோ வாழ்த்து அட்டையோ வந்திருக்க வேண்டும்). மாதவனின் அறை சுவற்றில் ஸ்டெப்பி கிராப்பும், மணிஷா கொய்ராலாவும் மறைந்து ஐஸ்வர்யா ராயும், சிம்ரனும், ஷாலினியும் தோன்றினார்கள்.

கண்ணனின் திறமை பெண்மையாக் பேசுவது என்றால் மாதவனின் தனித்திறன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவது. கல்வி உதவி தொகை வாங்குவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் (ஓட்டுனர் உரிமம் வாங்குவது, வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றம்) உதவுவது என்று மாதவனின் நேரம் செலவழிந்து கொண்டிருந்ததால் மாதவனின் நட்பு வட்டமும் விரியத்தொடங்கியது. முக்கியமாக விடுதியிலிருப்பவர்களுக்கு ஏதாவது தேவையென்றால் மாதவனை உதவிக்கு அழைக்கத்துவங்கினார்கள்.

அழைத்தவர்கள் யாருமே ஐஸ்வர்யா ராய் போலவோ அல்லது ஜோதிகா போலவோ இல்லை என்ற வருத்தம் மாதவனுக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.

சில நாட்களாக கண்ணன் முகத்தில் பதற்றம் தெரிவதையும் கண்ணின் தோழர்கள் அடிக்கடி பெண்கள் விடுதி முன்னர் நிற்பதையும் பார்த்தவர்கள் எதுவும் வித்தியாசமாக (கண்ணனை தொடர்புபடுத்தி) நினைக்கவில்லை. மாணவர் பேரவை / விழா நடத்துவது தொடர்பாக ஏதோ ஒரு பிரச்சனை இருக்கலாம் என்றும் அதற்காக மாணவிகளிடம் அனுமதி / ஆதரவு கேட்கிறார்கள் என்றே நினைத்தார்கள்

அந்த நேரத்தில் மாணவியர் விடுதிக்கு முன்னால் இருக்கும் கல்லூரி நூலகத்தில் நூலகர் "இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது, அவளே சும்மா இருக்கா, இவத்தான் அவளை ஏற்றி விடுகிறாள். விட்டு தொலைய வேண்டியது தானே" என்று ஒரு பெண்ணை யாரிடமோ திட்டிக்கொண்டிருந்தார். ஆர்வம் மேலிடவே பலரும் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப்பார்த்தவர்களின் கும்பலில் மாதவனும் இருந்தார் நானும் இருந்தேன்

தொடர்ந்து வாசிக்க : 

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

கருத்துகள் இல்லை: