சனி, 2 மே, 2009

2009-05-02

இன்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கோமன் தாயாசிறீ என்பவர் இலங்கை இராணுவ இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் உலக சமூகத்திற்கு நன்றி என்கிறார். மேலும் இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்பொழுது, இந்தியாவின் உதவியை மறக்க முடியாதது என்றும், உலகத்தின் நிலை இலங்கையை பொருத்து மாறும் கட்டத்தில், எங்களுக்கு கை கொடுத்து உதவியவர்கள் இந்தியாவே என்கிறார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து "கேட்டமைன்" என்ற போதைப்பொருள் மலேசியாவுக்கு கடத்தப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மலேசியாவுக்கு அனுப்பப்பட இருந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பொட்டாஷ் வேதிப்பொருள் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் 55 கிலோ கேட்டமைன்' போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய் புலனாய்வுத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் கூறியிருக்கிறார். எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார்.

தமிழ் படத்தயாரிப்பாளர்களில்..அனேகமாக அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதில்..முதலில் இருப்பவர் பாலாஜி..

மிகுந்த முயற்சிக்குப் பின்..ஜெமினிகணேசனின் ஆதரவுடன்..திரைஉலகில் அறிமுகமானவர் பாலாஜி.ஔவையார் படத்தில்..முருகனாக சிறு பாத்திரத்தில் நடித்தார்.பின்னர் படிப்படியாக முன்னேறி..பானை பிடித்தவள் பாக்யசாலி,மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகன் ஆனார்.சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார்.

பின்..தன் மகள் சுஜாதா பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.ஜெமினி நடிக்க அண்ணாவின் ஆசை..இவர் தயாரித்த முதல் படம்.அது ஓரளவு வெற்றி பெற..தன் படத்தயாரிப்பைத் தொடர்ந்தார்.

சிவாஜியை வைத்து..திருடன்,தங்கை,எங்கிருந்தோ வந்தாள்..என் தம்பி..போன்று பல படங்களை எடுத்தார்.

பின்னர் கமலை வைத்து சில படங்கள் வந்தது..(சவால்)

பின் ரஜினியை வைத்து...தீ..பில்லா போன்ற வெற்றி படங்கள் தயாரித்தார்.

தமிழ்த் திரை உலகில் ராசியான தயாரிப்பாளர் ஆனார்., ஆனால் நடிப்பதையும் விட்டு விடவில்லை..கிட்டத்தட்ட அவர் படங்களில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை அவரே செய்வார்.

சமீபத்தில் மீண்டும் தன் மகன் தயாரிப்பில் ஈடுபட...அஜித் நடிக்க பில்லா படமும்...சமீபத்தில் யாவரும் நலம் படமும் இவருடையதே..

எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத இவர் கடைசியாக ஜெயா டிவியில்..திரும்பிப்பார்க்கிறேன்..என்ற நிகழ்ச்சியில் சமீபத்திதான் கலந்துக் கொண்டார்.

மோகன்லால் இவரது மருமகன் ஆவார்

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டவர் இன்று அமரர் ஆனார்.

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

கருத்துகள் இல்லை: