சனி, 2 மே, 2009

2009-05-02

வன்னியின் சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்கள்மீது சிங்கள இனவாதப்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலினால் கடந்த 6 மணித்தியால இடைவெளியில் 7500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டிருப்பதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள்மீது பிரயோகிக்கப்பட்ட நச்சுவாயுக் குண்டுகளை இராணுவத்தினர் மக்கள்மீதும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என வன்னியிலிருந்து பேசிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே,

வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர
வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது
ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே.

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

நகரும் எழுத்துகளும் அதனை பிளாக்கில் அமைக்க பயன்படும் கோடுகளும் உங்களுக்காக....

சமீபத்தில் திரு பைசாகாதர் என்பவரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல், அதில் தனது பிளாக்கின் முகவரியை எப்படி நகர செய்வது மேலும் அதனை கிளிக் செய்தால் என்னுடைய பிளாக்குக்கு வருவதற்கான கோடுகளை தாருங்கள் என்று. உங்களுக்கா இந்த இடுகை.இதில் குறிப்பிடதக்க விஸயம் என்னவென்றால் இந்த மாதிரி அவுட்புட்டில் உங்களுடைய மவுஸ் கர்சரை கொண்டுசென்றால் சிறீது நேரம் அந்த லிங் நிற்குமாற் செட் செய்துள்ளேன்

இந்த கோடுகள் மற்ற பிளாக்கர்களுக்காகவும்தான்,இதனை பின்வருமாறு பின்பற்றுக நீங்கள் செய்ய வேண்டியது

1)பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுழைக

2)"லேயவுட்டை"கிளிக் செய்க

3)"addgadget--->HTML/JAVASCRIPT"

4)பின்வரும் கோடுகளை காப்பி&பேஸ்ட் செய்து சேமிக்கவும்

இதனில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் லிங்குகளையும் ஆட் செய்யலாம். இதோ இதற்கான கோடுகள் மற்றும் உதாரண அவுட்புட்.

இதில்

1) "title/டைட்டில்" என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு அல்லது முக்கிய பதிவுகளின் தலைப்பு

2)"http://your url link" என்பதில் உங்கள் வெப் முகவரி அல்லது முக்கிய பதிவுகளின் முகவரி

3)இதில் " bgcolor="" " உங்களுக்கு பிடித்த வண்ணத்தின் கோடை இடுக( வண்ணத்தை தேர்ந்தெடுங்கள்

நீலம்:#00CCFF,பச்சை:#7EBE95,மஞ்சள்:#E2D587,கருப்பு:#000000,வெள்ளை:#FFFFFF)

<marquee direction=up height=200 scrollAmount=2.8 scrollDelay=70 onmousedown="this.stop()" onmouseover="this.stop()" onmousemove="this.stop()" onmouseout="this.start()">

Title

Title

Title

Title

Title

</marquee>

FOR EXAMPLE:

<marquee direction=up height=100 scrollAmount=2.8 scrollDelay=70 onmousedown="this.stop()" onmouseover="this.stop()" onmousemove="this.stop()" onmouseout="this.start()">

Tamilbloggersunit

Tamilweb

ANNA EDUSAT Programme

</marquee>

OUTPUT:

Tamilbloggersunit

Tamilweb

ANNA EDUSAT Programme

நகரும் எழுத்துகளும் அதனை பிளாக்கில் அமைக்க பயன்படும் கோடுகளும் உங்களுக்காக....

சமீபத்தில் திரு பைசாகாதர் என்பவரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல், அதில் தனது பிளாக்கின் முகவரியை எப்படி நகர செய்வது மேலும் அதனை கிளிக் செய்தால் என்னுடைய பிளாக்குக்கு வருவதற்கான கோடுகளை தாருங்கள் என்று. உங்களுக்கா இந்த இடுகை.இதில் குறிப்பிடதக்க விஸயம் என்னவென்றால் இந்த மாதிரி அவுட்புட்டில் உங்களுடைய மவுஸ் கர்சரை கொண்டுசென்றால் சிறீது நேரம் அந்த லிங் நிற்குமாற் செட் செய்துள்ளேன்

இந்த கோடுகள் மற்ற பிளாக்கர்களுக்காகவும்தான்,இதனை பின்வருமாறு பின்பற்றுக நீங்கள் செய்ய வேண்டியது

1)பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுழைக

2)"லேயவுட்டை"கிளிக் செய்க

3)"addgadget--->HTML/JAVASCRIPT"

4)பின்வரும் கோடுகளை காப்பி&பேஸ்ட் செய்து சேமிக்கவும்

இதனில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் லிங்குகளையும் ஆட் செய்யலாம். இதோ இதற்கான கோடுகள் மற்றும் உதாரண அவுட்புட்.

இதில்

1) "title/டைட்டில்" என்பது உங்கள் பிளாக்கின் தலைப்பு அல்லது முக்கிய பதிவுகளின் தலைப்பு

2)"http://your url link" என்பதில் உங்கள் வெப் முகவரி அல்லது முக்கிய பதிவுகளின் முகவரி

3)இதில் " bgcolor="" " உங்களுக்கு பிடித்த வண்ணத்தின் கோடை இடுக( வண்ணத்தை தேர்ந்தெடுங்கள்

நீலம்:#00CCFF,பச்சை:#7EBE95,மஞ்சள்:#E2D587,கருப்பு:#000000,வெள்ளை:#FFFFFF)

<marquee direction=up height=200 scrollAmount=2.8 scrollDelay=70 onmousedown="this.stop()" onmouseover="this.stop()" onmousemove="this.stop()" onmouseout="this.start()">

Title

Title

Title

Title

Title

</marquee>

FOR EXAMPLE:

<marquee direction=up height=100 scrollAmount=2.8 scrollDelay=70 onmousedown="this.stop()" onmouseover="this.stop()" onmousemove="this.stop()" onmouseout="this.start()">

Tamilbloggersunit

Tamilweb

ANNA EDUSAT Programme

</marquee>

OUTPUT:

Tamilbloggersunit

Tamilweb

ANNA EDUSAT Programme

More than a Blog Aggregator

by சுவாதி சுவாமி.
ஏப்பிரல் மாதம்!

ஏப்பிரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அளவில் இனக்கொலை , மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள மாதமாக பிரகடனப்படுத்தப்பட்ட மாதமாகும்!

இனப்படுகொலை என்ற வன் கொடுமைக்கான வரைவிலக்கணத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பின்வருமாறு வரையறுத்திருக்கிறது "ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்".

உலகின் வரலாற்றில் இதுவரை ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் கறுப்பு பக்கங்களாக என்றைக்குமே அழிக்க முடியாமல் பொறிக்கப்பட்டுள்ளன . அவற்றுடன் இந்த வருடத்திலிருந்து ஈழத்தமிழின கொலைகளும் வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் வகைப்படுத்தப்படும் தகுதியை பெற்றுவிட்டது என்றால் மிகையாகாது.

ஐக்கிய நாடுகள் சபையால் எந்த மாதம் இனக்கொலைகளுக்கெதிரான மாதமாக பிரகடனப்படுத்தப் பட்டதோ , எந்த மாதம் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமையை எதிர்க்கும் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ அந்த ஏப்பிரல் மாதத்திலேயே ஈழத்தில் மிகப் பாரிய அளவில் தமிழினக் கொலைகள் நடத்தப்படுவதையும், ஈழக் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபையும் , சர்வதேசமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது??

இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா அரசின் இராணுவம் இதுவரை கொன்று குவித்திருக்கும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு எவர் பதில் சொல்லப் போகிறார்கள்??

இத்தனை கொலைகளாலும் அழிக்கப்பட்டவை வெறும் மானுட உடல்கள் மாத்திரம் தானா? ஒரு இனத்தின் வருங்கால சமுதாயமும், வாழ வேண்டிய மனிதர்களும் தமது மரணங்களோடு தொலைத்தவை அவர்களது கனவுகளும், ஆசைகளும், வாழ வேண்டிய உரிமைகளையும் அல்லவா? ஒரு இனத்தின் எதிர்காலம் இன்று சர்வதேசத்தின் முன் எவ்வித கவனிப்புமின்றி ஒரு அந்நிய தேசத்தின் தலையீட்டின் மேற்பார்வையில் இன்னொரு அரசின் காட்டுமிராண்டித் தனமான கொலை நடவடிக்கையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தட்டிக் கேட்க நாதியில்லை.
இவற்றை விட என்ன ஆதாரங்கள் வேண்டும் இன்னும் இந்த உலகத்துக்கு எம்மினத்தின் இழி நிலையை நிரூபிக்க..??

இத்தனை இழப்புகளுக்கும் இந்த இன ஒழிப்பில் பங்கேற்ற அத்தனை பேரும் நிச்சயம் பதில் சொல்லித் தானாக வேண்டும்!

More than a Blog Aggregator

by நவநீதன்
என்ன வண்டி ஓட்டறானுங்க இவனுங்க? டுபாக்கூரு வண்டி வெச்சுகிட்டு நம்மகிட்டயே பந்தா காட்டுறானுங்களா?. நான் ஸ்கூல் படிக்கும்போதே RX 100 ஓட்டினவன். மனதிற்குள் ஒரு மேடை போட்டு அவனை அவனே வாழ்த்திக் கொண்டிருந்தான்.

மச்சான்,பொல்லாதவன் தனுஷைவிட சூப்பரா ஓட்றடா என்று சொன்னால் நம்பிவிடுவான். கல்லூரியில் நண்பர்களும் இதை டீ, பப்ஸின் மறுவடிவமாகவே நினைத்ததால், பசிக்கும் போதெல்லாம் தனுஷை திட்டினர். டிகிரி வாங்காவிடினும் கோர்ஸ் முடிந்திருந்தது. வேலை தேடிக் கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரி, நண்பனுடன் திருவல்லிக்கேனியில் அடைக்கலம் என்ற சராசரி முகவரி கிடைத்தது.

"அம்மா, சென்னை ஜாப் சர்ச் பண்ண போறேன். எனக்கு பைக்கு வேனும்."
ஏண்டி? அரியர் கிளியர் பண்ண துப்பில்ல, இதுல வேல தேட போறாரு.அதுல பைக் ஒரு கேடு. இருக்கற பைக்குக்கே பெட்ரோல் போட வக்கில்ல, இதுல பல்சரு வேனுமா பல்சரு. போ, கலெக்டர் வேலை காலியா இருக்காம், போய் சேர்ந்துக்க."
என்னதான் அவன் அப்பா கொதித்தெளிந்தாலும் அம்மாவிடம் அடம்பிடித்து பைக்கை வாங்கிவிட்டான். பையன் சென்னைக்கு புதுசு. பஜாஜ் பல்சர் 180 சிசி பளபளத்தது. கொஞ்சம் அதிகமாகவே விளம்பரபடுத்திக் கொண்டான்.

முதல் நாள் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்.
"வாவ்..பொமனேரியன்" என ஜொள்ளினான். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு ஒரு போட்டி உருவானது.
ஸ்லீவ்லெஸ், முட்டிக்கு சற்று மேல் வரை ஷார்ட்ஸ், ஐபாடில் நிச்சியம் ரிக்கி மார்டினாகத்தான் இருக்க வேண்டும், அவள் உட்கார்திருக்கிறாளா இல்லையா என்ற குழ்ப்பத்திலேயே ஸ்கூட்டி பெப் மெதுவாக போய் கொண்டிருந்தது.

கொஞ்சம் சேட்டையை ஆரம்பித்தான், வேகமாய் போய் ப்ரேக் அடித்தான். வீலிங் பண்ணினான். இடிப்பது போல் போய் கட் அடித்தான். அவள் அசரவே இல்லை. ஆனால் அவனோ, இது போதும் பொண்னு ரொம்ப மெரன்டுரும் என சாதித்த திருப்தியுடன் பைக்கை விரட்டினான். பஸ்ஸிற்கு முன்னால், வேனிற்கு முன்னால் என பறந்தான். காரை தான்டினான், டூவீலரை சைடு எடுத்தான், டாடா சுமோவிற்கு டாட்டா காட்டி போனான். பின்னால் திருப்பி பார்த்தான் அவள் எந்த சலனமும் இல்லாமல் முன்பு போலவே வந்து கொண்டிருந்தாள். இவ இப்படியே ஊர்ந்துகிட்டு போனா நாளைக்குதான் வீட்டுக்கு போவான்னு நெனைக்கிறேன். அவளுக்காக பரிதாபப்பட்டபோது ரெட் சிக்னல் விழுந்திருந்தது.

எல்லாரும் வண்டியை ஆப் பண்ணியிருக்க, பத்து செக்ண்டுல என்னத்த பெட்ரோல் மிச்சமாயிரும்னு இவனுங்க வண்டிய ஆப் பன்றானுங்க என நினைத்தான்.

சிக்னல் லைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா இது? ஒரு நிமிஷம் ஆச்சு இன்னும் கீரின் போட மாட்டேங்குறான்.
ஒரு வேளை கரண்டு போயிடுச்சா?

2....3....4...5 என் நிமிடங்கள் கரைந்தது.

அடச்சே.. என்ன கொடுமைடா இது. அஞ்சு நிமிஷம் ஆச்சு இன்னும் போடமாட்டேங்குறான்.கடுப்பில் நின்று கொண்டிருந்தான்.

எத்தேச்சையாக திரும்பினான், அப்போதுதான் கவனித்தான் அவனுக்கு பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள் எந்த சலனமும் இல்லாமல். இவ எப்ப வந்தா? என அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தபோது கிரீன் சிக்னல் விழுந்திருந்தது.

கருத்துகள் இல்லை: