திங்கள், 4 மே, 2009

2009-05-04

இலங்கையில் வடகிழக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அப் பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் சீரான முறையில் இல்லையென்றும், இதன் காரணமாக அங்கு மக்கள் பட்டினியால் அவதியுறுவதாகவும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை அரசு அங்கு உணவுப் பொருட்கள் செல்வதை தடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு அவ்வாறான தடை எதையும் விதிக்கவில்லை என்று அதன் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான துணை இயக்குநர் அசேப் அஸ்ரத் அம்மையார், கடந்த பிப்ரவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் மாத இறுது வரை மூவாயிரம் மெட்ரிக் டண்களுக்கும் மேலான உணவுப் பொருட்கள் மோதலற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அந்தப் பகுதிக்கு உணவு எடுத்துச் செல்வதில் தாங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். அங்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சேமித்து வைப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது சிறிய கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் நடுக்கடலில் சிறிய மீன்பிடி படகுகளில் மாற்றப்பட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவுகூட 30 மெட்ரிக் டண்கள் அளவுக்கு உணவுப் பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறும் அசேப் அஸ்ரத், தமது களஞ்சியத்தில் வடபகுதியிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

BBC Tamil

இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 இளைஞர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களில் 22 பேரை, வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும், 9 பேரை, பல்வேறு இடங்களிலும் உள்ள அவர்களது உறவினர்களிடம் கையளிக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரை அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு நியைத்திற்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலும் இவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட 58 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


More than a Blog Aggregator

by Varadharajan
இன்றிரவு ப்லொக்கெரில்
எழுதிபோட்ட
இரங்கல் கவிதையில் -
காலையில் பார்த்த
சாலையோர
அநாதை பிணத்தின்
ஆன்மா சாந்தியடைந்தது.....


More than a Blog Aggregator

by Jaffer
டந்த வாரத்தில் இரண்டு தினங்கள் நமது சந்தைகளின் விடுமுறையால் உலக சந்தைகளின் உற்சாகத்தில் பங்குபெற முடியாமல் போய்விட்டதே என நேற்றுத்தான் வருத்தப்பட்டு பதிவில் எழுதி இருந்தேன். ஆனால் அந்த உற்சாக தினமாக நேற்று அமைந்துவிட்டது.

அனைத்து சந்தைகளும் 200 Days Moving Averageஐ கடந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. நம் சந்தைகளும் மிக நீண்ட நாட்களுக்குப்பின்னர் அதிக அளவில் புள்ளிகளை உயர்ந்து (Sensex 731.50 மற்றும் Nifty 180.05) உயர்வை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நம் சந்தைகளின் உயர்வுகளுக்கு நேற்றைய ஆசிய சந்தைகளின் பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்தது எனலாம்.

ஆசியாவில் Swine Flue என்னும் பன்றிக் காய்ச்சலால் சந்தைகளின் உயர்வுகள் தடைபடும் என்ற பீதியை கடந்து அனைத்து ஆசிய சந்தைகளும் உயர்விலேயே முடிவடைந்துள்ளது.

கரடிகளின் சந்தைகளையே பார்த்து பழகிவிட்ட நமக்கு இப்போது காளைகளின் சந்தைகளை மிக கவனமாக கணிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் சொன்னபடிதான், சந்தை ஆரோக்கிய பாதையை நோக்கித் திரும்பவே முயன்று வருகிறது. அவ்வப்போது சிறிய Correctionஐ சந்திக்கும்போது, சிறிய அளவில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

சந்தைகள் மேலெழும்ப ஆரம்பித்தாலும் அது நிலைக் கொள்ளும்போதுதான் டெக்னிக்கலாக கணிக்க இயலும். இப்போதுள்ள சந்தை அடுத்த Resistence Levelஆக 3800ஐ கடக்கும்போது 3500 ஒரு வலுவான Support Levelஆக இருக்கும் (முந்தைய 3300ஐபோல) என்பது என் எதிர்பார்ப்பு, பார்ப்போம்.

துவங்கும் ஆசிய சந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். அவைகள் Overbought zoneல் இருப்பதால் அதில் ஏற்படும் Profit Booking நமது சந்தைகளிலும் சிறிய அளவில் Correctionஐ ஏற்படுத்தும். அவ்வாறில்லாமல் அவைகள் ஏற்றம் பெறும்பட்சத்தில் நமது சந்தைகளும் அவற்றையே பின்பற்றும்.

இன்றைய தேசிய சந்தையின் டெக்னிக்கள் நிலைகள்,

3227 - 3413 - 3534 - 3599 - 3719 - 3785 - 3971

.

ஒரு மரம் என்ன செய்ய முடியும்
நம்புங்கள் மரத்தை போலவே
நின்றுகொண்டிருக்கிறேன்
கடந்து செல்லும் சில பறவைகளை பார்த்தபடி
உடன் வந்தமர்கின்றன
விருப்பமின்றி தலைமேல்
இன்னும் சில பறவைகள்
யாரையும் அழைத்ததில்லை
பறவைகளால் அதிகம் காயப்பட்டவன்
அநேகரில் அநேகன்
அவற்றின் கீச்சொலிகள் நற் தருணங்களில்
கிளைகளை உற்சாகத்தில் தானாக
அசைக்க செய்யும்.
ஒரு மரம் நடனமாடுவதை அப்போது பார்க்க்லாம
நீர் பெருகும் கண¢ப்பொழுதில்
கிளைகளில் எச்சமிட்டபடி
வேறுவேறு மரங்களுக்கு
செல்லும் அவ்ற்றை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
உயர்ந்த ஆணின் நறுவிசான புன்னகையுடன்
மேற்கிலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன
இன்றும் சில பறவைகள்
மேகங்கள் அவ்ற்றை வழிமறித்து
என் பக்கமாக திசை திருப்புவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன் வேடிக்கையாக
மதியிழந்த முடனே
என் கடவுளே !!!!
யார் தந்தார்கள்
உனக்கு உரிமை
என் விதியை எழுதிட.....
எழுதிய விதி
வீதியில் சேறுக்கு சமமாய் ;
அவமனபடுத்தினால் நரகம்
உன் சட்டம் ;
நீ வா என்னோடு ......
ஏனென்றால் அதில் நீ தான் முதல்வன்
விதி என்ற பெயரில்
செய்து கொண்டு இருப்பதால் ;
போதும் உன் விதியின் விளையாட்டு ;
யார் தந்தார்கள் உரிமை உனக்கு
விதி என்ற பெயரில்
என்னை அவமான படுத்த ???
நஞ்சு தேய்ந்த மறுபக்கத்தில் இருந்து
என்னை நான் காப்பற்றி
என்னக்கு நானே எழுதி கொள்கிறேன்
என் விதியை.......

கருத்துகள் இல்லை: