கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது.
எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமாவில், ஜானி டெப் ஒரு கோமாளி துணை கதாப் பாத்திரமாகவே படைப்பாளிகளால் அறிமுகப் படுத்தப் பட்டாலும், அந்த பாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்குப் பின்னர் அவரே அந்த சினிமாவின் கதாநாயகன் ஆக அறியப் படுகிறார். இது அந்த கதாபாத்திரத்தின் வெற்றி மற்றும் அதை ஏற்று நடித்தவரின் வெற்றியும் ஆகும்.
இப்படி இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்ல முடியும். தமிழ் திரையுலகில் கூட ரஜினி, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், அவர்களின் ஆரம்ப கால திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களாகவும் வில்லன்களாகவும் அறிமுகமானாலும் அந்தந்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட அதிகப் புகழ் பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களின் தனித் திறமையும் கடும் உழைப்புமே காரணம் ஆகும்.
இந்த எதிர்வினைகள் நிழல் வாழ்வுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வுக்கும் பொருந்தும்.
கடவுள் ஒரு மனிதனை எப்படி படைத்திருந்தாலும் சரி, எந்த நோக்கத்திற்காக எங்கு படைத்திருந்தாலும் சரி அல்லது சமூகம் அவனை எங்கே வைத்தாலும் சரி எப்படி சுரண்டினாலும் சரி, அவனால் தனித்து நிற்க முடியும் ஜெயிக்கவும் முடியும்.
ஆப்ரகாம் லிங்கன், எடிசன், அம்பேத்கர், போன்ற மாபெரும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் முதல் நாம் இன்று பார்க்கும் எத்தனையோ வெற்றியாளர்கள் இந்த கருத்தினை உறுதி செய்கிறார்கள்.
உங்கள் பெற்றோர் வசதி வாய்ப்பில்லாதவர்களா? பரவாயில்லை, உங்களுக்கு இளமையில் நல்ல கல்வி மற்றும் இதர வாய்ப்புக்கள் கிடைக்க வில்லையா? பரவாயில்லை, உங்கள் தகுதிக்கு ஏற்ற வாய்ப்புக்களை இந்த சமூகம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறதா? கவலையில்லை. சுற்றமிருப்போர் உங்களை வஞ்சிக்கிறார்ககளா? வருத்தமில்லை.
உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.
நிழல் பாத்திரங்கள் செய்து காட்டியதை, உயிருள்ள நிஜ பாத்திரங்களாகிய நம்மால் செய்ய முடியாதா என்ன?
நன்றி.

Full protection without confusing jargon
You probably know that you need a firewall program to use the Internet safely. In addition to protecting you against attacks from the Internet, a good firewall will also tell you when programs installed on your computer are trying to phone home and enable you to prevent them from doing it.This is something that Windows® own firewall doesn't do, and it's essential for identifying and stopping the activities of many malicious virus and spyware programs. For example, this enables you to prevent your computer from being turned into a "zombie" controlled by spammers or destructive hackers.
Full Information : Click Here
Download Link : Click Here
QtWeb is a lightweight, secure and portable browser having some unique UI and privacy features. QtWeb is an open source project based on Nokia's Qt framework (former Trolltech) and Apple's WebKit rendering engine (the same as being used in Apple Safari and Google Chrome).
What's new in version 2.0 (released Mar 23, 2009):
- Customizable menus, hot keys, keyboard shortcuts, toolbar buttons and search providers
- Web Inspector: inspect HTML elements, loading time and size, profile resources usage, debug JavaScript
- Virtual On-Screen Keyboard: browse internet, fill web forms, perform searches with a mouse only
- Added Print Preview mode to check content pagination before actual printing
- More toolbar buttons can be added to the Navigation Bar, or removed
- Command Line scripting support: dump webpages, including javascripted ones, into a file from command prompt
- Separate Privacy top-level menu groups most of privacy commands, shortcuts being assigned
- Icons can be hidden, or Menu Bar can be hidden itself
Download and Details : http://www.qtweb.net/download.php

ஜெனீவா, மே. 28-
இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.
இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.
தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.
நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.
இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.
இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர் என அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும் தாய்லாந்து, மlலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன்விசாரணைகளை சர்வதேசப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இலங்கை அரசும், இந்திய அரசும் விடுத்த கோரிக்கையையடுத்தே கே.பியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேசப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக