ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட வேண்டும் : பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் : இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இக்கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் பாதுகாப்பு வலயமென்று பெயர் சூட்டப்பட்டுள்ள பிரதேசம் உண்மையில் பாதுகாப்பற்றது. பாதுகாப்பு வலயத்தில்தான் மோதல்கள் நடைபெறுகின்றன என்று மிலிபாண்ட் மேலும் கூறினார். பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு உறுப்பினரான நீங்களும் இலங்கை அரசாங்கத்தினால் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுல் செய்வதற்கு மேற்கொண்டுவரும் முயற்சியில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மிலிபாண்ட்,
தமிழில் அறிவியல் புத்தகங்கள் வருவது மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.
இவ்வகையில், தமிழில் 'கலைக்கதிர்' என்ற புத்தகம் நான் தொடர்ந்து படித்து வருவது. கல்லூரியில் அறிமுகமாகி என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. விண்வெளி பற்றி இதில் வெளியான பல கட்டுரைகள் என்னை 'இயற்பியல்' ரசிகனாக்கிவிட்டன.
மருத்துவக் கண்டுபிடிப்புகள்
விண்வெளி
நோபல் பரிசு
வேதியியல்
விலங்குகள்
மனித உடல்
என்று பலவிதமான தலைப்புகளில் கட்டுரைகள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பள்ளியில் பயில்பவர்களுக்கு பரிசளிக்க மிகவும் சரியான அறிவியல் புத்தகம் இது.
கலைக்கதிர் 2004:
கடந்த ஆண்டிலிருந்து சற்றே பெரிய அளவில் 10 ரூபாய் விலையில் வெளிவந்துகொண்டிருக்கிறது.
வருடச் சந்தா 120ரூபாய் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி புத்தகத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம்.
தொகையை காசாணை (Money Order) அல்லது வரைவாணை (DD) மூலமோ ''ஆசிரியர், கலைக்கதிர், கலைக்கதிர் கட்டிடம், 963 அவனாசி சாலை, கோவை - 37'' என்ற முகவரிக்கு அனுப்புக. காசாணையின் அடிக்கட்டையில் புதிய சந்தா என்றோ புதுப்பிக்கும் சந்தா(சந்தா எண்) என்றோ, குறித்து இதழ் அனுப்ப வேண்டிய முகவரி (பின்கோடு எண் மற்றும் மாவட்டம் உட்பட) அனுப்பியுள்ள தொகை மற்றும் எந்த மாதம் முதல் இதழ் வேண்டும், என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக