இது தொடர்பாக தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்கட்கு வணக்கம் பல,
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமே தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனமாகும். இதன் ஆரம்ப காலத் தலைவர் கேம்பிறிஜ் பல்கலைகழகத்தில் தன் பெயரைப் பதித்த புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் மாமனிதர் எலியேசர் ஆவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்று இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். அதனால் அவைபற்றி எதுவுமே நாம் கூறத்தேவையில்லை.
அண்மையில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் அவலநிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.
இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது.
இதற்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்திய மத்திய அரசின் கொள்கைதான் இன்று சிங்கள இனவெறி அரசிற்கு தமிழின அழிப்பிற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.
பாரம்பரிய கலாசாரத்தையும் உன்னதமான வரலாற்றையும் கொண்ட பாரதத்தின் இன்றைய அரசாங்கம் அன்னிய சக்திகளின் அடிவருடியாக சோரம் போவதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா என எண்ண வைக்கிறது.
இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீழமே.
இதனை வலியுறுத்த தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகின்றோம்.
இவை சம்பந்தமாக தமிழக சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள்.
சிற்றம்பலம் இராகவன்
Dr S Ragavan (Raga)
தலைவர் - தென்துருவ தமிழ்ச் சங்க சம்மேளனம்.
படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.
இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டு கடல்வழி தரையிறக்க முயற்சியும் முறியடிக்கப்பட்டதுடன் -
தரைவழியாக முன்நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சமர் - கட்டளைப்பீடத்தை மேற்கோள் காட்டி புதினத்தின் வன்னிச் செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இந்த தரையிறக்க முயற்சியை படையினர் மேற்கொண்டனர்.
106 மில்லி மீற்றர் ரக பீரங்கிகளால் மக்கள் மீது செறிவான தாக்குதலை நடத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர்.
இதில் டோறா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் தரையிறக்க முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன்கிழமை அதிகாலையும் 15 டோறா பீரங்கிப் படகுகள், 25 வரையான அரோ படகுகள் மற்றும் கூகர் படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டபோது அதனையும் விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர்.
இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்று முற்றாக தாக்கி மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று அரோ படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு ஆதரவாக நேற்று முன்நாள் தொடக்கம் இரட்டைவாய்க்கால் வடக்கு பகுதியில் இருந்து 58 ஆவது படையணியும் தரைவழி மூலமான வலிந்த தாக்குதல்களை கனரக ஆயுதங்களின் பயன்பாட்டுடன் மேற்கொண்டிருந்தது.
ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, டாங்கி மற்றும் கனரக போர்க்கலங்களுடன் இந்த வலிந்த தாக்குதலை 58 ஆவது படையணியினர் மேற்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் சாளம்பன் பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளே இந்த தாக்குதலுக்கு இலக்காகின.
இதில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் இந்த தரைவழி முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 352 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 722 பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும் சிறிலங்கா படையினர் இன்று இந்த செய்தி பதிவேற்றப்படும் வரை தொடர்ச்சியாக தரைவழியாக கடுமையான வலிந்த தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையாக பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
படையினரின் தாக்குதல்களின்போது மக்கள் வாழ்வ்விடங்களை நோக்கி படையினரின் எம்.ஐ.-24 ரக உலங்குவானூர்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்கட்கு வணக்கம் பல,
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமே தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனமாகும். இதன் ஆரம்ப காலத் தலைவர் கேம்பிறிஜ் பல்கலைகழகத்தில் தன் பெயரைப் பதித்த புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் மாமனிதர் எலியேசர் ஆவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்று இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். அதனால் அவைபற்றி எதுவுமே நாம் கூறத்தேவையில்லை.
அண்மையில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் அவலநிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.
இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது.
இதற்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்திய மத்திய அரசின் கொள்கைதான் இன்று சிங்கள இனவெறி அரசிற்கு தமிழின அழிப்பிற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.
பாரம்பரிய கலாசாரத்தையும் உன்னதமான வரலாற்றையும் கொண்ட பாரதத்தின் இன்றைய அரசாங்கம் அன்னிய சக்திகளின் அடிவருடியாக சோரம் போவதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா என எண்ண வைக்கிறது.
இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீழமே.
இதனை வலியுறுத்த தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகின்றோம்.
இவை சம்பந்தமாக தமிழக சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள்.
சிற்றம்பலம் இராகவன்
Dr S Ragavan (Raga)
தலைவர் - தென்துருவ தமிழ்ச் சங்க சம்மேளனம்.
மதிப்பிற்கும் பேரன்புக்குமுரிய அ.இ.அ.தி..மு.க பொதுச் செயலாளர் அன்னை ஜெயலலிதா அவர்கட்கு. இத்தாலி வாழ் தமிழீழ மக்களின் பணிவான அன்பு வணக்கங்கள்.
தங்களுக்கு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல்:-
சாவின் விளிம்பில் நின்று இனவாத இலங்கை அரசின் கொடிய குண்டு மழையில் குளித்தும்இ எறிகணையில் எரிந்தும், கொத்தணிக் குண்டிலும் நச்சு வாயுவிலும் கொல்லப்படும் ஈழத்தமிழ் மக்களின் அவலநிலைகளையும் அவர்களின் அவலக்குரல்களையும் கேட்டு தொப்புள் கொடி உறவுகளும் உலகத் தமிழினமும் பொங்கி எழுந்து மக்களின் கண்ணீர் துடைக்க வீதியில் இறங்கி, உண்ணாநிலை இருந்து, தீக்குளித்து உரிமைக்குரல் கொடுத்து சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் வேளையில் ஈழத்தமிழர்களின் துயர் கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது.
தாய்த் தமிழகத்திலும், ஈழத்திலும் உள்ள எட்டுக் கோடி தமிழர்களோடு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் உங்கள் உறுதியான பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என்ற உங்களின் நம்பிக்கை எம்மக்கள் மீதுள்ள தமிழ்ப்பற்றையும் பாசத்தையும் காட்டி நிற்கின்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதை சொல்லும் புரட்சித்தலைவரின் வழிவந்த புரட்சித்தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள்.
அன்று காலத்தின் கோலத்தோடு சில காட்டமான வார்த்தைகளைப் பகிர்ந்தாலும் இன்றைய ஈழத்தமிழர்களின் கோலத்தையும் அவலத்தையும் கண்டு உங்கள் உள்ளம் இரங்கி ஒரு புதிய ஒளிக்கீற்றை உருவக்கியிருக்கின்றது.
ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் நாடகம் ஆடும் அரசியல் கலைஞர்களும் வாழும் தமிழ்நாட்டில் சொல்லிலும் செயலிலும் நேர்மையை நிலை நிறுத்தியவர் நீங்கள்.
தலைமுறை தலைமுறையாக எம்மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பங்களுக்கும் உறவுகளை இழந்து வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தாங்கள் தந்த வாக்கு விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது.
வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி தமிழர்களின் தலைவியாக வலம் வந்து ஈழத்தமிழ்மக்களின் கனவுகளை நனவாக்கி உலகத்தால் காக்க முடியாத இலட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காப்பற்றிய தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் தாங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்.
காலத்தால் செய்தற்கரிய பேருதவியை செய்யும் தங்களை தமிழ் உலகம் உள்ளவரை என்றென்றும் நன்றி கூறி தங்கள் கரம் பற்றி நிற்கும்
உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் தளராத உறுதிக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பலர்மோ, இத்தாலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக