அதே மாதிரி 'இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக்கற கிராமங்கள் இருக்குடா'ன்னு என் ஃப்ரெண்ட் சொல்லி, 'வர்றியா காமிக்கறேன்'ங்கறான். இருக்காதுன்னு சொல்ல பயமா இருக்கு. ஏன்னா ஒரு சில மாசத்துக்கு முன்னாடிதான் எங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல இந்தப் ப்ரச்னை வெட்டுகுத்து வரைக்கும் போனதா பேப்பர்ல படிச்சேன். கேவலமா இருந்தது.
பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல.
"என்ன கிருஷ்ணா.. கௌரவர்-பாண்டவர்களின் சகோதர அன்பு எப்படிப் போய்ட்டிருக்கு?"ன்னு கேட்டார். கிருஷ்ணர் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், "ஐயா.. நான் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் முடியாம ரெண்டு பேருக்கும் போரே நடந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?"ன்னு கேட்டார்.
உதங்கருக்கு பயங்கர டென்ஷனாய்டுச்சு. "நீ இருந்தும் சமாதானம் பண்ணி வைக்கலியா? நீதான் ஏதாவது கபடவேஷம் போட்டு தூண்டி விட்டிருப்ப. இரு நான் உனக்கு சாபம் தர்றேன்"ன்னு கமண்டலத்தைத் தூக்கப் போனார்.
"கூல்.. கூல்.."ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.
"சரி உதங்கரே.. உங்களுக்கு ஒரு வரம் தர நினைக்கிறேன். கேளும்"ன்னார். 'உன் விசுவரூபத்தைப் பார்த்த்தே போதும்'னு முதல்ல மறுத்த உதங்கர் கிருஷ்ணர் வற்புறுத்தவே ஒரு வரம் கேட்டார்.
"நான் எப்போ எங்க தாகத்துல வேண்டினா தண்ணீர் கிடைக்க வரம் குடுங்க" ன்னு கேட்டார். (திருப்பூர்க்காரரா இருப்பாரு போல!)
"இவ்ளோதானா.. டேக் இட்"ன்னு வரம் குடுத்தார் கிருஷ்ணர்.
கொஞ்ச நாள் கழிச்சு, உதங்கர் காட்டுல அங்க இங்க அலைஞ்சு, தாகத்தோட சுத்திகிட்டிருக்கறப்போ கிருஷ்ணரை நினைச்சார். உடனே அங்க ஒரு மாட்டிடையன் அங்க வந்தார். அழுக்குத் துணியும், கூட அஞ்சாறு வேட்டை நாய்களும், தோள்ல ஒரு பைல குடிதண்ணீரும் வெச்சிருந்தார்.
வந்தவர் நேரா உதங்கரைப் பார்த்து "தாகத்துல தவிக்கறீங்க போல.. இந்தாங்க தண்ணீர்"ன்னு குடுத்தாராம்.
உதங்கர் மாட்டிடையரை அருவருப்பாப் பார்த்து "வேண்டாம்.. வேண்டாம்"ன்னு மறுத்துட்டார்.
அடுத்த நொடி மாட்டிடையன் எஸ்-ஸாய்ட்டாராம்.
"உடனே மறைஞ்சுட்டானே.. இது யாரு?"ன்னு உதங்கர் கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.
கொஞ்ச நேரம் கழிச்சு கிருஷ்ணர் அவர் முன்னால் வந்து "வாட்டீஸ் திஸ்?"ன்னு கேட்டப்போ..
"இடையன்கிட்ட குடுத்தனுப்பறியே கிருஷ்ணா.. நான் எப்படி வாங்கிக் குடிக்க?"ன்னு கேட்டாராம்.
"அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் 'மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா'ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில 'குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்'ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே"ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்.
தன் ஜாதிப்பித்தால் அமிர்த்த்தை இழ்ந்த உதங்கரும் வெட்கித் தலைகுனிந்தாராம்.
கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......
இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.
பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.
இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? .
இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ?
இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.
புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.
அத்துடன் எச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடையப் போவது இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழப் போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் தனது செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற விமானத்தாக்குதலிலும் மாலை நடைபெற்ற கொத்தணிக் குண்டுத்தாக்குதலிலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. நாள் முழுவதுமாக குண்டு மழை பொழிவதால் எவரும் பதுங்கு குழியில் இருந்து வெளிவராத நிலையில் ஆங்காங்கே உடல்கள் சிதறி காணப்படுவதாகவும். இரவுவேளை என்பதால் எத்தனை பேர் கொல்லப்படிருப்பார்கள் என கணக்கிட முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. சேதவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை தமிழீழ காவல் துறையினரும் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களும் தூக்கிச் சென்று முதலுதவி அளித்துவருவதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக