சனி, 2 மே, 2009

2009-05-02



More than a Blog Aggregator

by பிரியமுடன்.........வசந்த்
இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....


More than a Blog Aggregator

by தமிழரசி
காதல்வலி
என்னுடைய காதல்வலி என்னும் கவிதை விகடனில் வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..இதை வெளியிட்ட விகடனுக்கு என் முதல் நன்றி...இத்துடன் என் தோழி சக்தி, திரு.முத்துராமலிங்கம் இவர்களின் கவிதையும் வெளியிட்ட விகடனுக்கு நன்றி இவர்களுக்கு வாழ்த்துக்கள்.. என்னை இந்த அளவு எழுத ஊக்குவித்த என் வலை உலக நண்பர்களுக்கும் நன்றி....காதல்வலியை சந்தோஷமாக்கிய விகடனுக்கு மீண்டும் நன்றி....



தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி பற்றி எழுந்தள்ள விமர்சனங்கள் எவ்வளவு தூரம் நியாயமானவை. தமிழினத்தின் தலைவர் என தமிழக ஈழ மக்களால் கௌரவிக்கப்பட்ட கலைஞர் ஏன் இவ்வாறான மெத்தனப் போக்குடன் நடந்து கொளகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. தமிழகத்தின் முத்த அரசியற் தலைவர் என்ற வகையில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஈழமக்களுக்கு விரோதமாக இருப்பினும் யாரும் அவருடைய தமிழின்ப்பற்றில் அறவேனும் சந்தேகம் கொள்ள முடியாது.

இதேவேளை இச்சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி தமிழகத்தின் அரசியற்சாக்கடைக்குள் பெரும் விபரீதம் நிகழ்ந்துள்ளது. என்றுமே தமிழினத்தின் எதிரியாக செயற்பட்டு வந்த ஜெயலலிதா தமிழீழக்கோரிக்கையை தனது அரசியல் சாசனமாக கையில் எடுத்துள்ளார்.

இன்று திமுக வும் கலைஞரும் காங்கிரஸீடன் இருப்பதால் தமிழினத்தின் துரோகியாக்கப்பட்டுள்ளார்.
துமிழினத்தின் காவலன் ஏன் துரோகியாக்கப்பட்டார் ?

துமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் ஆரம்பகாலம் முதலே பற்றும் ஆதரவும் வைத்திருந்த கலைஞர் எதற்காக இப்படிச்செய்தார் என்பது எல்லோருடைய மனங்களிலும் எழுகின்ற கேள்வியாகும்.

இந்தத் தள்ளாத வயதிலும் ஈழத்தமிழர்கழுக்காக அவர் நடத்திய உண்ணாநிலைப்போராட்டம் அவருடைய ஈழப்பற்றை எடுத்தியம்பி நிற்கிறது என்றால் மிகையில்லை.
இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த இனஅழிப்புப் போரில் கலைஞரின் பங்களிப்பு இருக்கிறதா? ஏன்ற மிகப்பெரிய வினா தொடுக்கப்பட்டுள்ளது.

தனது சிறுவயதிலே திராவிட நாட்டை திராவிடர்கள் ஆளுவார்கள் என்றெழுதிய அவர் இன்று ஆரியத்துக்கும் திராவிடத்தக்கும் நடக்கும் போரில் ஆரியத்தின்பால் நிற்பதேன்?;

நடக்கவிருக்கும் இந்தியத்தேர்தலில் ஈழப்பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் தீர்ப்பு எதை நோக்கியதாக இருக்கும்.

தமிழினத்தின் காவலர் செல்லாக்காசாவாரா?

இல்லை ஜெயலலிதா தமிழீழம் அமைப்பாரா?

நண்பர்களே தீர்ப்பு உங்கள் கைகளில்…………….
மோதல்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் இணைந்துகொள்வதற்கான குடிவரவு விண்ணப்பங்களை கனடா அரசாங்கம் துரிதப்படுத்தியிருப்பதாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் கனடா வருவதற்காக, கனடியப் பிரஜைகள் மேற்கொண்டிருக்கும் குடும்ப அனுசரணை விண்ணப்பங்களை தாம் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாகக் கூறிய அவர், கொழும்பிலிருக்கும் தமது தூதரகத்தின் மூலம் அவற்றை துரிதப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பிலிருக்கும் கனடாவின் விசா அலுவலகம் தற்போது இதற்கு அதிக முன்னுரிமையளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அவர் காலமானார். மறைந்த அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.

கருத்துகள் இல்லை: