சென்ற வாரம் திருமணவைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்காசி சென்றிருந்தேன்.சங்கரன்கோவில் தரிசனமும் கிட்டியது.
உங்களுக்குத்தான் தெரியுமே பிளாகரும் கேமராவும் போல் என்ற ரீதியில் என் கேமராவும் கையோடு பயணித்தது.
எப்பொழுதும் என் புகைப் படங்கள் என் திருப்திக்கு ஏற்றார் போல் ,அமைவது அன்று அமையவில்லை.
அங்கே தும்பிக்கை ஆட்டிக் கொண்டு வாழைப்பழம் பெற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்துக் கொண்டிருந்த யானையை வழக்கம் போல் படம் எடுத்தேன் .கொஞ்சம் அவசரம் ,கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் அதிகப்படி ஆர்வம், எல்லாம் கலந்ததாலோ என்னவோ யானை எதுவும் கேமராவுக்குள் சேமிக்கப் படாமல் போய் விட்டது .
ஏதோ வயல் வெளி,சாலைகள்,அல்லது கட்டிடங்கள் என்றிருந்தால் போகட்டும் என்று விட்டிருப்பேன்.ஆனால் அது யானை அல்லவா?அதுவும் கோவில் யானை.மனம் சஞ்சலப்பட்டது.
இது எதற்கு அறிகுறி ?
சரி இதையெல்லாம் பெரிதாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மறந்தவளாக இல்லம் திரும்பினேன்.
பக்கத்து வீட்டு சிறுமி வந்து பேசிக் கொண்டிருந்தாள்,அவளிடம் ,வழக்கமான கேள்விகள் முடித்து,"ஆச்சி எப்படி இருக்காங்க? நான் வரேன்னு சொல்லு "என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.
அடுத்தவரை சந்தோஷப் படுத்தவேண்டும் என்று ரீதியில் என்னை வழிநடத்திவந்த ஏஞ்சல் ,அதுவரை என் மனதில் குடியிருந்த ஏஞ்சல் ,என்னை விட்டு ஒருசில மணிகள் விலகி விட்டிருந்ததோ என்னவோ ,நல்ல மனதுடன் நான் சொன்ன வார்த்தையை ஏனோ காப்பாற்றாமலேயே ஊர் திரும்பி விட்டேன்.
சென்னை வந்து சேர்ந்த நாலைந்து மணி நேரத்துக்குள் நான் கேட்ட செய்தி என்னை உரைய வைத்து விட்டது .நான் பார்க்க வருகிறேன் என்று சொல்லி சந்திக்காமல் வந்த அந்த ஆச்சி மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்று அறிந்தபோது என்னுள் ஊசியாய் குற்ற உணர்ச்சி,ஆழமாய் இறங்கியது. என்று மறையும் இந்த வேதனை?.நேற்றிருந்தான் இன்றில்லை எனும் பெருமை பெற்றது இந்த உலகு என்பது தெரிந்திருந்தும் நான் ஏன் அந்த அம்மையாரைப் போய் பார்க்க வில்லை?யார் தடுத்தார்?எது குறுக்கே நின்றது.நல்ல விஷயங்களை அவைகள், தோன்றிய கணமே செய்து விடுங்கள் என்று எல்லோருக்கும் சொல்லிவந்த நான் எப்படி இடறினேன்.
யானை எனக்கு ஒரு க்ளூ கொடுத்ததோ?நான்தான் புரிந்து கொள்ளவில்லையோ.
காயம் ஆறலாம் வடு மறையாது.
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மெனக்கிடும் எனக்கு அது ஒரு பெரிய கரும்புள்ளி.
அந்த ஆச்சியின் ஆன்மா சாந்தி அடைய ,பிரார்த்திப்பதைத் தவிர நான் எதையும் செய்ய இயலாதவளாக கலங்கி நிற்கிறேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 மணிவரை எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக வன்னித்தகவல்கள் தெரிவிகின்றன இதற்கிடையே இந்த எறிகணை தாக்குதலை தாம் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ள [...]
தினமும் காலையில் பத்திரிக்கையை திறப்பதற்கும், கணிணியில் செய்தி வெப்சைட்டுகளை பார்ப்பதற்க்கும் பயமாகத்தான் இருக்கிறது. யாரைப்பார்த்து சிரிப்பது, யாரைப்பார்த்து சிந்திப்பது? இதெல்லாம் எனக்கு மட்டும் தானா இல்ல.. எல்லாருக்குமா?
ஒருநாள் காலையில் ஹிண்டு பத்திரிக்கையை பார்த்தால் குருஜி ரவிசங்கர் சொல்லி இருக்கிறார். வன்னியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமானது காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இந்தியாவினால் உருவாக்கப்பட்ட அகதிகள் முகாமைவிட நன்றாக உள்ளது என. மாலை வலையை மேய்ந்தால், குருஜி சொல்வதைக் கேட்டு கண்ணீர் மல்க அகதிகள் முகாமை DVD யில் பார்த்து செல்வி ஜெயலலிதா அம்மையார் தனிஈழம் தான் இதற்கு ஒரே தீர்வுஎன முழங்குகிறார். அப்பொழுதே நான் சுதாரித்து இருக்கவேண்டும் மறுநாள் காலை எது நடந்தாலும் தாங்கிகொள்ள தயாராகி இருக்க வேண்டும். ஏனோ அந்த திடீர்திருப்பத்தை திரைப்பட திருப்பமாக எண்ணி முடிவு சுபமாக இருந்தால் சரி என விட்டுவிட்டேன்.
மறுநாள் காலை செய்தியறிய தினமலர் வெப்சைட்டை திறந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் சாகும் வரை முதல்வர் உண்ணாவிரதம்; கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. you tube -ல் முதல்வரது செவ்வியை பார்த்தபோது கொஞ்சம் திணறித்தான் போனேன். சரி நாம் என்ன செய்வது மதிய உணவுக்கு செல்வதா வேண்டாமா என யோசித்துகொண்டே வலையை திரும்ப திறந்தால் இலங்கையில் போர் நிறுத்தம் முதல்வர் உண்ணாவிரதம் வாபஸ். கொஞ்சம் சந்தோசத்துடன் சப்பிட்டுவிட்டு வந்தால் மீண்டும் இலங்கை இராணுவம் வான் வழித்தாக்குதல். கனரக ஆயுத பிரயோகம் மட்டும் இல்லை இலங்கை பாதுகாப்பு அமைச்சர் செவ்வி. மறுநாள், "இலங்கையில் போர் நிறுத்தம் இல்லை" ரஜபக்க்ஷே செவ்வி. "மழை நின்றும் தூவானம் நிற்க்கவில்லை" உண்ணாவிரத புகழ் தமிழக முதல்வர் செவ்வி. இந்த செய்திகளுக்கு இடையில் நான் எத்தனை முறை, எத்தனை இந்திய மற்றும் இலங்கை செய்தியூடக வலைப்பக்கங்களை பார்த்திருப்பேன் என்பது கணக்கிலடங்காது.
இந்த திடுக்கிடும் திருப்பங்களில் இருந்து மீள்வதற்குள் செல்வி ஜெயலலிதா அம்மையார் இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். அதோடு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஈழதமிழர்களுக்கு மானியமளிப்பதாகவும் செய்தி. எதிர் தரப்பு சும்மா இருக்குமா? பேருந்து கட்டணக்குறைப்பு; மாநிலத்தில் இயங்கிவந்த கருப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் என அனைத்து வண்ண போர்டு போட்ட பேருந்துகளுக்கும் தகர டப்பா, தவிட்டு மூட்டை, தாழ்தள, சொகுசு பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம். 'விதிமுறை மீறிய செயல்' - தேர்தல் ஆணயர் கருத்து. "நாங்கள் பேருந்து கட்டணத்தை கூட்டவும் இல்லை. குறைக்கவும் இல்லை" போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை. இதற்கிடையில் சோனியா தமிழகத்தில் பிரச்சாரம், 8நாட்கள் தொடர் போராட்டம் - திரைப்பட இயக்குனர்கள் சம்மேளனம் அறிவிப்பு.
தினம்தினம் திடுக்கிடும் செய்தி இல்லாமல் இபொழுதெல்லாம் விடிவதேயில்லை, யாரை குறை சொல்வது, யாரை நம்புவது என்பதே தெரியவில்லை. பேப்பர் படிக்கவும், செய்தியூடக வலைபக்கங்களை பார்க்கவும் பயமாக இருக்கிறது, படிக்காமல் இருந்தால் கை, கால்களில் நடுக்கம் வேறு. என்ன செய்யுறதுனே தெரியல. பேசாம கொஞ்ச நாள் எங்கயாவது தேர்தல் நடக்காத ஊருக்கு ஓடி போயிறலாமனு இருக்கு. இதெல்லாம் எத்தனை நாளைக்கு? மே - 13னோட முடிஞ்சுருமா?.. இல்ல... தேர்தல் முடிவுகள் இழுபறியா வந்து அதுக்கப்புறம் எதாவது திடுக்கிடும் திருப்பங்கள் தொடருமா?.. எனக்கு ஏதோ சொல்லணும் போல இருக்கு ஆனா சொல்ல பயமா இருக்கு.
ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்களேன் பாஸ்.. எனக்கு நியூஸோஃபோபியா ஏதும் வந்துறலயே.....

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்
ஜெ நல்லது நினைத்தாலும் கெட்டது நினைத்தாலும் எவ்வளவு தடை வந்தாலும் அதை நிறைவேற்ற பலம் கொண்ட வரை முயற்சிப்பார். பதவிக்காகவோ குடும்பத்துக்காகவோ அவர் பின் வாங்கியதாக வரலாறே கிடையாது .
கருணாநிதி நல்லதை மட்டுமே நினைக்கும் உத்தமன் போல பேசுவார் தன் ஆட்சிக்கோ குடும்பத்துக்கோ அதனால் பாதிப்பு என்றால் அடுத்த அடி எடுத்துவைக்கமாட்டார் ஆனால் செயல்படுவதுபோல பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக