இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.
இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.
இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.
நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.
வைகறை
(ஸ்ரீஅரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு)
நன்றி: வெப்துனியா
கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..
கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..
இப்பேரணியில் இத்தாலியின் பல பாகங்களிலிருந்தும் வந்த 300ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயகத்தில் எம் மக்கள் படும் அவலத்தையும் தாயக இன்றைய நிலையையும் இத்தாலிய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
பேரணி நடைபெற்றபோது எமது மக்கள் அணிவகுப்பை இத்தாலிய மக்கள் வரவேற்று உற்சாகமளித்தனர். அப்போது 2000 ற்கு மேற்பட்ட இத்தாலிய மொழியிலுள்ள துண்டுப் பிரசுரங்கள் அம்மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
அத்துடன் இத்தாலியின் ஊடகங்களும் எமது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக