சனி, 2 மே, 2009

2009-05-02

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை, தொலைதூர துப்பாக்கிச் சூட்டு மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 31 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் அடங்குவர்.
  1. இராசமாணிக்கம் ஜோதிகா (8 மாத குழந்தை)
  2. சிவசக்தி தேவதாசன் (வயது 02)
  3. பாஸ்கரன் லோகேஸ்வரன் (வயது 2 வருடம் 6 மாதம்)
  4. சேதுகாவலன் மயூரதன் (வயது 05)
  5. தர்மேந்திரன் (வயது 06)
  6. தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
  7. கந்தசாமி தனுசன் (வயது 08)
  8. லோகநாதன் லோஜிதா (வயது 09)
  9. டினோசிலா (வயது 09)
  10. லோகநாதன் திசா (வயது 09)
  11. முருகானந்தம் தர்மினி (வயது 12)
  12. பாக்கியராஜா மதுசனா (வயது 13)
  13. முத்துலிங்கம் கம்சனா (வயது 14)
  14. தர்மராஜ் கிருத்திகா (வயது 14)
  15. சோதி (வயது 48)
  16. சிவராசா (வயது 35)
  17. பஞ்சலிங்கம் தனஞ்சிநாத் (வயது 28)
  18. ம.சந்திரன் (வயது 69)
  19. சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)
  20. இ.சுபாசினி (வயது 30)
  21. தில்லைநாதன் சுமதி (வயது 38)
  22. லோகநாதன் ஹேமா (வயது 32)
  23. சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் (வயது 34)
  24. செ.சுடரேந்தி (வயது 33)
  25. தர்மலிங்கம் வீரசிங்கம் (வயது 54)
  26. இந்திரராஜா (வயது 42)
  27. கேசவன் புனிதமலர் (வயது 32)
  28. செல்வரட்னம் செல்வமணி (வயது 38)
  29. கந்தையா கருணாகரன் (வயது 29)
  30. சிவபாதராஜா பார்வதி (வயது 42)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் நாள்தோறும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.உணவுப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களே சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர். அம்பலவன்பொக்கணை பகுதியில் நேற்று வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 52 வயதுடைய இரத்தினம் சண்முகலிங்கம் என்பவர் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை தொடக்க சுகாதார நிலையத்தில் இயங்கும் செம்மலை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்த 22 வயதுடைய யோகேஸ்வரன் பரிமளா மற்றும் 18 வயதுடைய அ.ராகுலன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது இவ்வாறிருக்க, சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக சிறுவர்களும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவளத்துணையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறார்கள் மத்தியில் பழக்கங்களில் மாற்றம், முதியவர்கள் மத்தியில் நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அதேவேளையில் சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிறிலங்கா படையினர் அடிக்கடி கப்பல் மீது தாக்குதல் நடத்துவதனனால் உணவுப்பொருட்களை ஏற்றுவதிலும் நோயாளர்களை கப்பலில் ஏற்றுவதிலும் பெரும் இடர்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.

செய்திகள்: புதினம்
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
  1. சிறிலங்காவில் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்.
  3. வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
  4. இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளையே மேற்படி இருவரும் முன்வைத்து தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் இப்போராட்டம் தாய் தேசத் தமிழுறவுகளின் அவலங்களிற்கு பிரித்தானியாவிடமிருந்து நிரந்தர முடிவு கிட்டும் வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' தமிழின விடிவிற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாநிலையில் இருந்து உயிர்விட்ட தியாகி திலீபனின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைவரையும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

செய்திகள்: பதிவு

More than a Blog Aggregator

by அப்பாவி தமிழன்

உங்கள் பெயர் japan மொழியில் என்னவென்று தெரியுமா

இணையத்தில் சுற்றிய போது கிடைத்த link இது உங்கள் பெயரை japan இல் எவ்வாறு அழைப்பார்கள் என்று தெரிய வேண்டுமா? கீழே உள்ள link ஐ சொடுக்கி உங்கள் பெயரை அளிக்கவும் அடுத்த நொடி உங்கள் japan பெயர் ரெடி .

keywords
your real japanese name generator! ever wonder what your japanese name should be? just select male or female from the list, put your name in and submit! names are in traditional japanese order -- family name first, given name last -- for more authenticity! ;D
NOTE: some of these had to be very roughly translated in order to make any sense in english, so please don't use this as a tool to learn japanese words.

வாழ்க்கையில் இன்று அனுபவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது . எந்த ஒரு துறையாக இருந்தாலும் அனுபவம் இருப்பவர்களுக்கெந்ற்று தனி மரியாதை காணப்படுவது இயல்பு . அனுபவம் இருக்க்றவர்களால் மட்டுமே சாதிக்கமுடியும் . அந்த அளவிற்கு அனுபவம் மிகவும் முக்கி௯யமாந ஒன்றாக ஆகிவிட்டது .

சமையலாக இருந்தாலும் சரி , அது அரசியலாக இருந்தாலும் சரி அனுபவம் இருந்தால் பிரகாசிக்கலாம் . அனுபவம் இல்லாதவர்கள் எவ்வளவிற்கு உண்மையாக உழைத்தாலும் பயனற்று போகிறது . பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பயன் படுத்தும் வார்த்தை தான் அனுபவம் . எனக்கு இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் இருக்கிறது . நீ இப்போது தான் இந்த துறைக்கு வந்திருக்கிறாய் . என் நிலைக்கு வரவேண்டுமென்றால் இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்று சொல்வார்கள் .

அது தான் உண்மையா அனுபவத்திற்கு ஆண்டுகள் பல செல்ல வேண்டுமா என்பதை பற்றிய ஆய்வே இந்த கட்டுரையின் நோக்கம் .

இன்றைய சமூகத்தில் பல வயது முதிர்ந்த அனுபவ சாலிகள் பெற்றிடாத பதவிகளை இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள் . ஆண்டுகள் பல சென்ற பின்னரும் ஏன் அவர்களால் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை . மிகவும் குறைந்த அனுபவ சாலிகள் உயர்ந்த பதவியில் எப்படி இருக்கிறார்கள் .

அனுபவம் என்பது இரண்டு வகை நம்மால் நமக்கு ஏற்படும் அனுபவம் . பிரளால் நாம் தெரிந்து கொள்ளும் அனுபவம் . அனுபவம் என்பது பொதுவாகவே தவறுகள் செய்வதன் மூலம் கிடைக்கிறது . அப்படி நாம் பெறும் அனுபவம் தான் நமக்கு மிக முக்கியம் . அதற்காக நாம் தவறு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை . அனுபவம் என்பதே நாம் தவறு செய்யாமல் இருக்க பயன்படுவதே .

ஒருமுறை நாம் ஒரு தவறு செய்தால் அந்த தவறின் மூலம் நாம் புதிதாக ஒற்றை தெரிந்து கொள்கின்றோம் இது ஒருவகையான அனுபவம் .இதைதான் நம்ம ஊரில சொல்வாங்க பட்டா தான் திருந்துவ. அதே தவறை வேறொருவர் செய்யும் போது அது நமக்கு தெரியவரும் போது அதிலிருந்து நாம் ஒன்றை தெரிந்து கொள்கின்றோம் இது ஒருவகையான அனுபவம் .

முதல் வகையான அனுபவம் என்பது ஆண்டுகள் பல தேவைப்படும் .ஆனால் இரண்டாவது வகை ஆண்டுகள் தேவையில்லை மற்றவர்களின் செயல்களை பற்றி தெரிந்து கொண்டால் போதும் . இரண்டாவது வகை அனுபவம் என்பது பல வரலாற்று புத்தகங்கள் , சாதித்த தலைவர்களின் சுயசரிதைகள் , பல்வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கை முறை அடங்கிய புத்தகங்கள் நாம் படிக்கும் போதும் . நம்மைவிட அனுபவமிகுந்தவர்களுடன் பழகும் போதும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்கள் என்பவற்றை கேட்டு தெரிந்து கொள்ளும் போது அதன் மூலம் நமக்கு அனுபவம் ஏற்படுகிறது .

ஒரே தவறை திரும்ப திரும்ப செய்தால் அனுபவம் குறையுமே தவிர கூடாது . தவறு என்பது மனித இயல்பு . தவறை திருத்துகிறவன் தான் அனுபவ சாலி . அடுத்தவன் செய்யும் தவறின் மூலம் அதே தவறை செய்யாமல் இருப்பவன் மிகப்பெரிய அனுபவ சாலி .

கருத்துகள் இல்லை: