தீவிரவாதிகள். பயங்கரவாதிகள். புரட்சியாளர்கள். கம்யூனிஸ்ட்டுகள். நக்ஸலைட்டுகள். கலகக்காரர்கள். பிரிவினைக்காரர்கள். தேசத்துரோகிகள். அரசாங்கத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள் இவை. அமெரிக்காவில் Patriotic Act என்று ஒரு சட்டப்பிரிவு உண்டு. இதன்படி சந்தேகப்படும் நபர்களை உடனே உள்ளே தள்ளி முட்டிக்கால்களை பெயர்க்கலாம். அவர் வீட்டு தொலைபேசியை ஒட்டுக்கேட்கலாம். வீடு புகுந்து சோதனை போடலாம். பணத்தை முடக்கலாம். சித்திரவதை செய்யலாம். காலவரையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசமும் இதுபோன்ற சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது. நமக்குப் பொடா.
மேலைநாட்டு தத்துவவியலின் தந்தை என்று சாக்ரடீஸ் அறியப்பட்டதற்கு முக்கியக் காரணம் கேள்வி கேள் என்ற அவரது கர்ஜனைதான். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும் இது ஒரு புரட்சிகர சிந்தனை என்பதில் சந்தேகமில்லை.
இதை Dialectic என்று அழைக்கிறார்கள். அதாவது, தொடர்ச்சியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருப்பது. நீ அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த ஒற்றை வார்த்தையை கேள்விகளால் கட்டுடைக்கலாம். அழகு என்றால் என்ன? எது அழகு? ரோஜா அழகு என்று அவர் பதில் அளித்தால் மீண்டும் கேள்வி. எப்படிச் சொல்கிறீர்கள்? எனில், அனைத்து மலர்களும் அழகானவையா? ரோஜா மட்டும் ஏன் பிரதானம்? அழகாக இருப்பதாக நினைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நினைப்பது என்றால் என்ன? இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம்.
அழகு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? சரி என்றால் என்ன? தவறு என்றால் என்ன? அரசாங்கத்துக்குக் கட்டுப்படவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஏன் அப்படி? அரசாங்கம் என்பது நம்மைவிட பெரிய அமைப்பா? அரசாங்கம் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டுமா? புஷ் செய்துகொண்டிருப்பது சரி என்று அமெரிக்கர்கள் தலையாட்டவேண்டுமா? நாளை இரான் மீதோ ஆப்கனிஸ்தான் மீதோ அமெரிக்கா போர் தொடுத்தால் ஆஹா பேஷ் பேஷ் என்று அமெரிக்கர்கள் துள்ளிக் குதிக்கவேண்டுமா?
மன்மோகன் சிங் ஏன் அணுச்சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இத்தனை ஆர்வம் காட்டுகிறார்? இதுதான் இப்போது இந்தியாவுக்குத் தேவை என்று அவர் பதிலளித்ததால் அப்படியா சரி ஐயா என்று நகர்ந்து விடக்கூடாது. அணுசக்தி இல்லாவிட்டால் இந்தியா குடிமூழ்கிப்போய்விடும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? தேசத்தின் வளர்ச்சிக்காக போடப்படும் ஒப்பந்தம் பற்றிய முழு விவரங்களையும் ஏன் அளிக்க மறுக்கிறீர்கள்? இன்னின்ன காரணங்களால் இந்த ஒப்பந்தம் தேவை என்று ஒரு பட்டியலை ஏன் உங்களால் அளிக்கமுடியவில்லை? தேவையில்லாமல் நாங்கள் பயப்படுகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்கள் பயத்தை போக்குவது உங்கள் கடமை அல்லவா?
இதுதான் Dialectic முறை. கேள்வி. எதிர்க் கேள்வி. தர்க்கம். ஒவ்வொரு பிரச்னையையும் இப்படித்தான் அணுகவேண்டும் என்றார் சாக்ரடீஸ். இதை Socratic Method என்று அழைக்கிறார்கள். தத்துவவியலில் மட்டுமல்ல அரசியலிலும் இது பிரதானமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் உலகம் இந்த முறையை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
(தொடரும்)

காலனித்துவ காலத்தை ''அடிமை'' காலமாக வர்ணிப்பது மலிவான அரசியல்வாதியின் திருகு தாளம் ---
வாழ்கையில் நன்மையும் தின்மையும் சகலத்திலும் உண்டு ---
'' நன்மையை தவிர்த்தெடுத்து தின்மையை வக்கிரபுத்திகாரருக்கு விட்டுவிடு ''
என்ற அறிவுரைக்கு இணங்க நாம் இன்று பிரிட்டிஷ் நீராவி காரை பார்போம் ---
சென்ற புதன்கிழமை இங்கிலாந்து டெஸ்ட் கிரௌண்டில் 80 மைல் வேகத்தை தாண்டி ஓடிய கார் இது ---
ஓட்ட முடிவில் காருடைய வேகத்தை குறைக்கவென பரசூட் விரிக்கப்படுகின்றது ---
இது எனக்கு பிரயோஜனம் இல்லையே ! நீங்கள் நினைப்பது வாஸ்தவம் !!
அமெரிக்கா வினது 1906 ல் ஏற்படுத்திய நீராவி காரினது 170 மைல் ரெகார்டை முறியடிக்கவே இக் காரை பிரிட்டிஷ்
டீம் தயாரின்கின்றது ---
இந்த நீராவி யந்திர கார் superheated steam பாவிகின்றது ---
இருபத்தைந்து அடி நீளமும் மூன்று தொன் நிறையும் கொண்டது ---
இந்த டைக்ரம் ல் உங்களுக்கு இதனது 12 போயலேர்கல்களும் ரெண்டு மைல் நீளமான பைப் களும் தென்படுகின்றதா ?
நிமிடத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் என்ஜின் குளிர் பாடுக்கு பம்ப் பண்ண படுகின்றது ---
இதனது நீராவி 400 செல்சியஸ் சூட்டில் பெறப்பட்டு அதிவேக இந்ஜெச்டர்களினால் டர்பைன் எஞ்சின்குள் புகுத்தப்படுகின்றது ---
இந்த நீராவி மூன்று தொன் கார் எமக்கு
சரிபட்டுவராது ---
ஒரு எலெக்ட்ரிக் கார் எப்படி என்று அடுத்த முறை பார்போம் ---
நன்றி வணக்கம் !

2. இன்டெல் அறிமுகப்படுத்திய கடைக்குட்டி "ATOM Processor" மார்கெட்டுக்கு வந்து, இன்று ஒரு வருடம் ஆகிறது
3. Web Browser மார்க்கெட் ஷேர், மார்ச் 2009 :
ஃபயர்ஃபாக்ஸ் 22%,
ஆப்பிள் சஃபாரி 8%
கூகிள் க்ரோம் 1%
ஓபரா 0.7%
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 67%
4. இன்டர்நெட்டில் தற்போது சுமார் 23 கோடி வலைத் தளங்கள்
இருப்பதாக, நெட்கிராஃப்ட் நிறுவனம் தன் ஏப்ரல் 2009 வெப் சர்வர் survey-யில் அறிவித்துள்ளது.
5. அடுத்து வரப் போகும் ஓபன் ஆபீஸ் 3.1 சுமார் 100 மொழிகளை
support செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஃபயர்ஃபாக்ஸின் மார்க்கெட் ஷேர்
35 சதவீதத்தைத் தொட்டது.
7. 2008 CPU மார்க்கெட் ஷேர்: இன்டெல் 82 %, AMD 12 %.
8. நெட்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இன்டெலின் ATOM
வகை CPU-வின் புதிய மாடலின் வேகம் 2.0 Ghz-ஐ எட்டியுள்ளது.
9. குட்டிக் கம்பெனிகளுக்கு குட்டி சர்வர் - வெறும் 15 user லைசன்ஸோடும், குறைக்கப்பட்ட் வசதிகளோடும், "Windows Server Foundation" என்று பெயரிடப்பட்ட
ஒரு மலிவு விலை விண்டோஸ் சர்வரை, மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்து உள்ளது.
10. Send கொடுத்த ஈமெயிலை திரும்பி வா என்றால் வருமா? வரும் என்கிறது ஜீமெயில் லேப்ஸ்!
ஜீமெயிலில் Settings போய் Labs கிளிக் செய்து undo send எனேபில் செய்ய வேண்டும். Send கொடுத்ததிலிருந்து 5 வினாடிக்குள், மேலிருக்கும் படத்தில் வரும் மாதிரி undo கிளிக் செய்தால் மெயில் போகாது.
11. உங்கள் வெப் ஈமெயிலில் POP3 support இருந்தால், மெயிலை Thunderbird போன்ற ஈமெயில் client மூலம் டவுன்லோடு செய்துவிட்டு நெட் கனக்ஷனை கட் செய்து கொள்ளலாம். அப்புறம் அந்த மெயிலை கனக்ஷன் இல்லாமலேயே படித்துக் கொள்ளலாம். Dial up கனக்ஷன் இருப்பவர்களுக்கு இந்த feature உதவும்.Windows Live Hotmail பயன்படுத்தும் அனைவருக்கும், இந்த வசதியை மைக்ரோசாஃப்ட் இப்போது வழங்கியுள்ளது.
நான் மணிக்கணக்காய் browse செய்து சேர்த்த விஷயங்களை ஒரே நிமிடத்தில் படித்து விட்டீர்கள். அறிவாளி அண்ணே நீங்க !
Related posts: குட்டி குட்டி ஐ.டி செய்திகள் 10!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக