ஷூ வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.
உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள்.
ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.
ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.
ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை.
அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து, "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது, உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.
திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....
"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"
" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"
" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"
ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.
கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான்.
"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......
டெல்லி: எதிர்ப்பைக் காட்ட தலைவர்கள் முகத்தை நோக்கி செருப்பை வீசுவது இப்போது வழக்கமாக விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின் மூத்த சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் இன்று ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.
அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.
ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, 'போதும்…போதும் நிறுத்துங்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்' என்றார் சிதம்பரம்.
ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.
இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், 'யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம்' என்றார் வழக்கமான தனது புன்னகையுடன்.
மேலும் 'ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர்தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். அதை இத்தோடு விடலாம்' என்றார்.
ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம், 'ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்… இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம்' என்றார்.
ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.
ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், 'நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அனுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்' என்றார்.
ஜர்னைல் சிங் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை எழுதும் நிருபராகவும் பணியாற்றியவர்.
நன்றி : என்வழி தளம் http://www.envazhi.com/?p=6179டெல்லி: எதிர்ப்பைக் காட்ட தலைவர்கள் முகத்தை நோக்கி செருப்பை வீசுவது இப்போது வழக்கமாக விட்டது.

நன்றி : என்வழி தளம் http://www.envazhi.com/?p=6179தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,
அதே போல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பின்னர் இப்போது சிதம்பரத்துக்கு செருப்பு வீச்சு நடந்துள்ளது.
தமிழின விரோதிகளுக்கெல்லாம் இந்த செருப்படி விரைவில் விழும் என்று எதிர்பார்க்கலாம்.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் பார்க்க காட்சிப்பட இணைப்பு:
செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!
சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு
நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?
ஈழவிடுதலைப்போரில் தமிழகம் உள்ளிட்ட பகுதியுடன் மொத்தமாக இதுவரை 16 பேர் தீக்குளித்து உயிர் துறந்து இருக்கிறார்கள். உலகநாடுகள் ஈழப்போரின் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்தபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தனது ஓயாத போராட்டத்தின் விளைவாக ஈழப்படுகொலையை உலகின் பாரவைக்கு அல்லது உலகம் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள்.
அவர்களின் அயராத உழைப்பின் பின் தான் உலக நாடுகள் கொஞ்சம் திருப்பி பார்த்தது.
ஆனால் கருணாநிதியை பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக