சனி, 2 மே, 2009

2009-05-02

வலை நண்பர்களே!! இதற்கு முன் கொஞ்சம்

தேநீர்-14- நானும் என் நிழலும்

எழுதி இருந்தேன்!! ரசித்தவர் பலர்!!

சிலர் புரியவில்லை என்றனர்!

அந்தக் கவிதை இளமை விகடனில்

வெளியாயிற்று!!

http://youthful.vikatan.com/youth/thevanmayampoem16042009.asp

தற்போது அதே நிழலின் தாக்கத்தில்

ஒரு சிறிய சிந்தனை!!

-------------------------------------------------------------------------------

கொஞ்சம் தேநீர்-15-நிழல்!

கொஞ்சிப் பாலூட்டுகையில்

அன்னையின் மடியில்

மறைந்திருந்தது

என் நிழல்!

கைபிடித்து

கடைவீதி நடக்கையில்

தெரியவில்லை என் நிழல்!

என் அப்பாவின்

நிழலில் மறைந்திருந்து,

கவிதைப் போட்டியில்

பரிசு பெற்ற பாடலின்

வரிகளின் ஊடே

பொதிந்து கிடந்தது

தமிழ் ஐயாவின் நிழல்!

கல்லூரியில்

ஆய்வுக்கட்டுரையின்

அறிவியலின்

விரிவுகளில்

மறைந்து கிடந்தது

என் பேராசிரியரின் நிழல்!

தயங்கியும் மயங்கியும்

தள்ளாடிய

என் வாலிபம்

தஞ்சம் புகுந்தது

என் மனைவியின் நிழலில்!!

இன்னும் காத்திருக்கும்

வாழ்வின் வழிநெடுக

எண்ணிலடங்கா

நிழல்கள்!!

நிழல்கள்

இல்லாமல்

நிங்களோ நானோ

யாருமில்லை!!

-------------------------------------

பிடித்திருந்தால் தமிலிஷிலும்

தமிழ்மணத்திலும் தட்டுங்க!

ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருவதும் தினமும் நூற்றுக்கணக்கில் மடிவதும் நமக்கு சொல்லொனாத் துயரத்தை ஏற்படுத்துகிறது.

ஈழத்தமிழ் பற்றி பேசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈழத்தமிழர் பற்றியும் சண்டை பற்றியும் இன்று பேசாதவர் இல்லை.

தேர்தல் நேரத்தில் இதனை தூக்கி ஓரத்தில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணிய நேரத்தில் முழு போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது!!

நாளை இதற்காக பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது அரசியலோ, இல்லை ஓட்டு வாங்கும் யுக்தியோ எதுவாக இருப்பினும் அனைவரும் அனைத்துக்கட்சியும் கலந்து கொண்டு தங்கள் நிலையை உலகுக்கு மத்திய அரசுக்கு உரைக்கும் நேரமிது!!

அதே நேரம் அமெரிக்க அதிபர் இலங்கையில் ராணுவம் தமிழர்களைக் கொல்லுவதை நிறுத்தக்கோரியுள்ளார்.

வரவேற்கத்தக்கது. புஷ் இருந்தபோது ஒரே நாளில் பாகிஸ்தானில் முஷரஃபை பதவி விலக ஆணையிட்டார்.

அதே அதிகாரத்துடன் ஒபாமா ராஜபக்‌ஷேவுக்கு உத்தரவிடலாம்..

1.கலைஞர் நெருக்கடி கொடுத்தால் அத்துடன் அனைத்துக்கட்சித்தலைவர்களும் நிர்பந்த்தித்தால் இந்திய அரசு மிரட்டினால் உடனே இலங்கை பணியும்!!

2.ஒபாமா உத்தரவிட்டால் உடனே போர் நிறுத்தம் ஏற்படும்! இதற்கு.இந்தியா,நார்வே, இங்கிலாந்து அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

நடக்குமா?

தமிலிஷ்,தமிழ்மணம்!!

இலக்கியப் பாவை போல்
தினமும் என் இதயத்துள்
வலம் வருபவள்; பல
இதமான கனவுகளால் என்
உளத்தை(த்) தினமும்
கலக்கியே திரிபவள்!

கார் வண்ணக் குழலழகி
காந்தள் மலர்(க்) கண்ணழகி
பார் போற்றும் பேரழகி; என்னில்
பாசம் கொண்ட ஓரழகி!

அந்தியிலே நிதம் வந்து
அழகான பல கனவுகளை, என்
சிந்தையிலே உதிக்க வைக்கும்
சின்ன இடைக் கவியழகி!
விந்தை பல புரிபவளாய் என்னுள்
வியாபித்திருக்கும் மேலழகி!
பந்து போல என் மனதை(த்)
துள்ள வைக்கும்
பச்சை நிறக் கண்ணழகி!

வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதைக் கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்!
பாசப் பெரு மகள்; எந்தன் இதய(ப்)
பாரின் தனி மகள்!

அவள்.......

கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!

வல்லினம் போன்ற முத்துப் பற்கள்; உன்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிய சொற்கள்
மெல்லினம் போன்றது உன் பேச்சு; உன்
மேனியில் தான் உள்ளது என் மூச்சு
இடையினம் போல் நெளியும் இடை; என்
இதமான கேள்விக்கு(த்) தருமா அது விடை??

உயிர் மெய் போல் தொடரும் எம் உறவு
உன்னால் இனிமையாய்க் கழிகிறது என் இரவு!
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
அளபெடை போலிருக்கும் மூக்கு; அதன் பின்
ஆய்தக் குறுக்கம் போல் உன் நாக்கு!

குற்றியலுகரம் உன் குறு குறுப் பார்வைகள்; அவை
குறும்பான கதை சொல்லும் நினைவுப் போர்வைகள்
இடைச் சொல்லாய் தொடரும் உன் நினைவுகள்; அவை
இதமான சுகம் தரும் கனவுகள்!

கனவிலும் நனவிலும் கவிதைகள் தருபவள்
காலையும் மாலையும் நினைவினுள் வருபவள்
முல்லை மலர்ச் சிரிப்பழகி; முத்து மலர் உதட்டழகி
சின்ன இடைச் சிவப்பழகி; சிங்காரத் தேனழகி!

மகரக் குறுக்கம் போன்றது உன் மார்பு; அதில் நான்
விழி மூடித் தூங்கினால் இல்லைச் சோர்வு!
பாவையவள் மேனி ஒரு மோனை, உன்
பஞ்சு போன்ற விரல்கள் நான் மீட்டும் வீணை!
எளிமையான குணங்களால் நீ ஓர் எதுகை; எப்போதும்
எனை விட்டுப் பிரியக் கூடாது உன் இருகை!

என் இதயத்துள் நிறைந்தவள்
என் இனிமைக்குள் உறைந்தவள்!
உன் கன்னமதில் இருப்பது ஓர் மச்சம்; அதைக்
கை தொட்டுக் கிள்ளினால் இல்லை எச்சம்!

அன்பே நீ ஓர் இலக்கியப் பயிர்; உனை
அணைக்காமல் பிரியாது எந்தன் உயிர்!
உணர்வுகளைத் தூண்டுவதால் நீ ஓர் உம்மைத் தொகை
உனைப் பிரிந்திருக்கும் தனிமையே என் வாழ்வின் பகை!
நடையழகால் நீ ஒரு தனி வினை; என் வாழ்வில்
எப்போதும் பிரிவேனா இனி உனை???

நீயோ ஒரு இலக்கியப் பதுமை, உன்
நினைவுகளால் என்னுள் தினமும் பல பல புதுமை!
பஞ்சு போல் இருக்கும் உன் கைப் பகுதி; அதைப்
பற்றினால் என்றும் இல்லை என்னுள் விகுதி!

'நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!

'நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!

*************************************************
20.04.2006

பொருள் விளக்கம்:
*குழல்- கூந்தல்
*காந்தள் மலர்- கார்த்திகைப் பூ/ கார்த்திகை மலர்

பிற் குறிப்பு: வைரமுத்து, கவியரசர் கண்ணதாசன் முதலியோர் தமிழ் இலக்கணத்துடன் பெண்ணை ஒப்பிட்டுக் கவிதை படைத்துள்ளார்கள். அந்த வகையில் நான் பாடசாலை படிக்கும் காலப் பகுதியில் படித்த இலக்கண மொழி வழக்கிற்கு அமைவாக இந்தக் கவிதையையும் என் பள்ளிப் பருவத்தில் எழுதியுள்ளேன். இதில் வருகின்ற தமிழ் இலக்கணத் தொடர்களின் பொருளினைப் புரிந்து கொண்டு கவிதையைப் படித்தால் கவிதையில் உள்ள விடயங்கள் அதிகமாகப் புரியும் என்று நினைக்கின்றேன்.

இந்தக் கவிதையினை வழமை போல் அல்லாது இலகு நடையில் தந்திருக்கிறேன். பொருள் புரியாவிடின் சொல்லுங்கள்?? அடுத்த கட்ட நகர்வு பற்றி யோசித்துப் பார்க்கலாம்.

TRINCOMALEE WAR CEMETERY
திருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது.

228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன.
இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.

நான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.

காலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி மறைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி,ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின.

இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.
கைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {??சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன்.பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.

வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது.காலாகாலமாய்,பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை: