சனி, 2 மே, 2009

2009-05-02

நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis)தெற்காசியாவின் திறந்த வெளி காடுகளில் வாழ்ந்து வரும் ஒரு மான் இனமாகும். இவ் இனத்தின் பெரும் பகுதி இந்தியாவிலும் ஒரு சிறு பகுதி நேபாளத்திலும் வாழ்ந்து வருகின்றது. இம் மானுக்கு இந்தியில் " சௌசிங்கர்' என்று பெயர். அதன் அர்த்தம் " நான்கு கொம்புகள்" ஆகும்.

நாற்கொம்பு மான் போசிலாபினி எனும் குலத்தைச் சேர்ந்த விலங்காகும். இக் குல உயிரினங்கள் பெரும்பாலானவை அழிந்து போய்விட்டன. எஞ்சி இருப்பது நாற்கொம்பு மானும், நீல மானும் மட்டுமே. இவ் மானின் 4 கொம்புகளே மற்றைய மான்களில் இருந்து இதனை வேறுபடுத்துகின்றன. இதன் பழக்க வழக்கங்களும், உடலமைப்பும் கூட மூதாதைய இனத்தை சார்ந்தவையாகவே இருக்கும். இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் அங்கும் பெரும் தொகையாக இல்லாமல் சிறு தொகையே வாழ்ந்து வருகின்றது. உலக் காடுகளிலே இம் மான் இனம் வாழ்ந்து வருகின்றது.


நாற்கொம்பு மானின் உடலமைப்பு மற்றைய மான்களை போல் இருந்தாலும் வளைவுகள் இல்லாத நான்கு கொம்புகளும் புள்ளிகள் இல்லாத தோலமைப்பும் இவற்றின் சிறப்பம்சமாகும். பெண் மான்களுக்கு கொம்புகள் காணப்படாது. இவற்றின் கர்ப்பகாலம் 8 மாதங்கள் ஆகும். பிறந்து சில மாதங்களிலேயே பின் புற கொம்புகள் முளைக்க தொடங்கி விடும். முன் புற கொம்புகள் 14 - 15 மாதங்களின் பின்னே வளர தொடங்கும்.முன் கொம்புகள் சிறியதாவும் பின் கொம்புகள் பெரியதாவும் காணப்படும்.

இது மிகவும் கூச்ச உணர்வு கொண்ட விலங்காகும். ஆபத்தை உணர்ந்தால் புற்கள் மரங்களுக்கு பின் சென்று பதுங்கி கொள்ளும். இவை அதிகமாக நீர் உள்ள இடங்களிலேயே வாழும் ஏனென்றால் இவை மிக அதிகமாக நீர் பருகும் தன்மை கொண்டவை. இவ் அபூர்வமான மானின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகளே ஆகும்.
வெகு நாட்களாக அயன் படப்பாடல்கள் கணினியில் இருந்தாலும் இன்று வரை கேட்டதில்லை.
இன்று எதேச்சையாக வின்னாம்பில் (winamp) சேர்த்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.
அமைதியாக ஆரம்பித்து முழுமையாக மனதில் நிறம்பி அளுமை செயதது ஒரு பாடல்!!
அட!! இது நன்றாக இருக்கிறதே என்று பாடலை ரிப்பீட்டில் போட்டவன் தான்!! பாடல் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருக்கிறது.
பல நாட்களுக்கு பின் இப்படி ஒரு பாடலை கேட்கிறேன்.மனதிற்கு அமைதி தந்து ஒற்றடம் தரவல்ல பாடல்!! இதை போன்ற பாடல்கள் புனையும் அதை உருவாக்கும் கலைஞர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் கூடுகிறது.நம்மை போல காதலில் இல்லாதவர்கள் கூட ஒரு நிமிடம் காதல் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்து பார்க்கக்கூடிய உணர்வுகளை தரக்கூடிய பாடல்!! காதலர்கள் எல்லாம் ஏன் இப்படி கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள் என்று புரிந்துக்கொள்ள உதவும் பாடல்!!
ஒரு அழகான பாடல்!
இந்தப்பாடல் கேட்டதில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசை கூடுகிறது.

நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்.




Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல் வரிகள்:
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே சென்றேனே (விழி மூடி யோசித்தால்)


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..(விழி மூடி யோசித்தால்)



ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும் (விழி மூடி யோசித்தால்)
[சனிக்கிழமை, 02 மே 2009]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்புக்கு கிழக்காக உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுற்றிவளைத்துள்ள படையினர் கடல் மற்றும் தரைவழியாக அதற்குள் நுழைவதற்காக பெரும் எடுப்பிலான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தரைவழியாக மூன்று முனைகளில் முன்னேறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையின் தாக்குதல்கள் மூலம் தரை இறக்கம் ஒன்றை மேற்கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.

தரைவழியாக முன்நகர முனையும் சிறிலங்கா படையினரின் ஒரு அணி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வரை பத்து தடவைகள் முன்நகர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

செறிவான எறிகணைத் தாக்குதல்களின் மத்தியிலேயே படையினரின் இந்த முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர்.

படையினரின் முன்நகர்வுக்கு எதிராக கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள், படையினரின் முயற்சியை முறியடித்ததுடன், அவர்களுக்கு பாரிய இழப்பையும் ஏற்படுத்தியியிருக்கின்றனர்.

நேருக்கு நேராக இடம்பெற்ற இந்தச் சமரில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என 'புதினம்' செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து நேற்று முன்னாள் வரை நான்கு நாட்களாக இந்த முனையில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டதாக கொழும்பு படைத்துறைச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் கரும்புலித் தாக்குதல்கள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வன்னி போர் முனையில் விடுதலைப் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இரட்டைவாய்க்கால் பகுதியிலும் இராணுவ ட்றக் வாகனம் ஒன்றில் வெடிபொருட்களை நிரப்பிக்கொண்டு வந்த கரும்புலிகள் அதனை வெடிக்கவைத்ததில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தின் இறுதி நான்கு நாட்களிலும் படை முன்நகர்வுகள் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட தாக்குதல்களில் படைத்தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்தும் பல முனைகளில் படை முன்நகர்வுகளும் முறியடிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இதனால் வன்னிப் பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது.
[சனிக்கிழமை, 02 மே 2009]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் ஒரு வாரத்தில் 9 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளையில் பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர்.

உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறாக - சிறிலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்ற போதும், இப்பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் பீரங்கிகளால் தாக்குவதால், உணவு விநியோகப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.

இந்நிலையில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த சூழலில் சிறிலங்கா படையினரின் கனரக துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஆனால், தாம் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதாகவும், இந்த பொருட்களை எடுக்காது சென்றால் தமது பிள்ளைகள் பட்டினியால் சாக நேரிடும் என்று மக்கள் அழுது கெஞ்சும் நிலையே அங்கு காணப்படுவதாக 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


More than a Blog Aggregator

by நாடோடி இலக்கியன்
1982 ல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டவர். முந்தைய தலைமுறை பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு எப்படி ஒரு தனித்த அடையாளம் கிடைத்ததோ அது போன்றே கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான சொர்ண குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ண லதா.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்று 90களில் தமிழ் திரையுலகில் கோலாச்சினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் அற்புதமான இசையில் இவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச","என்னுள்ளே என்னுள்ளே" போன்ற பாடல்களால் இசைப் பிரியர்கள் மட்டுமன்றி சக பின்னணி பாடகர்கள்,பாடகிகளையே தன் குரலால் மதிமயங்கவைத்தவர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.1996ம் ஆண்டு வெளியான "கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது இவரைத் தேடிவந்தது. ரஹ்மானின் இசையில் சில ஹிந்தி படங்களிலும் பாடியிருக்கிறார்.

இவர் பாடிய மேலும் சில பாடல்கள்:
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட -உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)

இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் சுவர்ண லதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.


கருத்துகள் இல்லை: