வியாழன், 28 மே, 2009

2009-05-28

All weapons captured from the LTTE in the Ealam War IV that started from Mavilaru in 2006 will be displayed to public on June 03 at Galle Face in the national celebration of victory over terror to be held under the auspices of the President Mahinda Rajapakse.

The Defense Secretary, the commanders of the three armed forces, the Inspector General of Police, all the commanders of the battlefield and the soldiers are to participate in the function and they are to present the President a souvenir.

Four thousand artists are to participate in a cultural pageant held parallel to the national celebration of the victory against terrorism.

சினிமா. எடிசன் கண்டுபிடித்த போதோ, லூமினியர் சகோதரர்கள் முதல் படத்தை திரையிட்டபோதோ, இது சமுதாயத்தில் நிகழ்த்த போகும் மாற்றங்களை அறிந்திருக்கமாட்டார்கள்.இன்று சினிமா - இலக்கியம்,பொழுதுபோக்கு,வெகுஜன ஊடகம், என அன்னைத்து வகையாகவும் எடுத்துக்கொள்ளபடுகிறது.


ஒரு நல்ல திரைப்படம் தான் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.திரைப்படத்தை பார்க்கும் நாம், அதில் வரும் கதாபத்திரங்களில் நம்மை கவரும் கதபத்திரதில் நம்மை பொருத்தி பார்க்கிறோம்.வில்லனை அடிக்கும் பொழுது நம் புஜம் பெரிதாகுவதும், நாமே ஒரு கதாபத்திரத்தின் சோகத்திற்க்கு அழுவதும் சினிமாவின் பெரிய வெற்றி.

சினிமா பொழுதைபோக்க மட்டுமல்ல நாம் பயணிக்காத தேசங்களின் அழகை,அவர்களின் கலாச்சாரத்தை, அவர்களின் நம்பிக்கையை சொல்லும் ஒரு நல்ல ஊடகம்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை இங்கு நல்ல விமரிசனம் செய்பவர்கள் இல்லை செய்தாலும் அதை கேட்டுகொள்ளும் படைபாளிகள் இல்லை. நம்முடயை சினிமா ஆசைகளை 'கிணற்று தவளையாக' சுருக்கிக்கொள்ளாமல், பல உலக திரைப்படங்களின் மூலம் ஒரு சிறு பயணம் மேற்க்கொள்ளலாம்.அப்படி செய்தாலும் அந்த படங்களை பற்றிய நம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள யாரவது வேண்டுமே! கிம் கி டக்கின் '3 அயர்ன்' படத்தை பற்றி தெரிந்தவர்களிடம் பேசலாம், ரசனை இல்லாதவரிடம் பேசுவது வீண்..

இதற்க்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, வலைபதிவர் 'பைத்தியகாரன்' முயற்ச்சியில் சென்னையில் இனி ஒவ்வொரு மாதம் முதல் ஞயிற்றுக் கிழமை உலக படங்களை திரையிட்டு, அதனை பற்றிய விமர்சனங்களை விவதிக்கும் ஒரு களத்தை அமைக்க போகிறார். வலைபதிவர்கள் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் வரலாம்.

முதல் முயற்ச்சியாக ஜூன் 7ன் தேதி முதல் திரைப்படம் திரையிடப்படும். இதை பற்றிய இன்னும் பல செய்திகள் இறுதியானபின் அதிகாரபூர்வமாக அண்ணன் வெளியிடுவார்.அதுவரை காத்திருக்கவும்..

நரசிம் ஆரம்பித்த 'ஏதாவது செய்யனும் பாஸ்' தொடர்ந்து வலைபதிவர்களுக்கான சிறுகதை போட்டி, இப்பொழுது உலக சினிமா விவாத களம்.. தமிழ் பதிவுலகம் கலக்கிக்கொண்டிருக்கிறது...

இத்துடன் நிற்க்காது இன்னும் நிறைய வரும்...
டிகர் கமலஹாசன் ஒரு நல்ல நடிகர் மட்டுமில்ல, ஒரு நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர், அத அவரோட சொந்த கம்பெனியில தயாரிக்கிற படங்கள்ல நாம நெறையா பாக்கலாம்.

ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தார்ன்னா அவரோட பேச்சை கேட்குறதுக்கே நெறைய பேர் வருவாங்க. இன்னிக்கி அவரோட ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் கம்பெனியும் மெட்ராஸ் ஐ.ஐ.டி யும் சேர்ந்து ஒரு "screenwriting workshop" நடத்திக்கிடிருக்காங்க, இன்னும் ரெண்டு நாளைக்கு நடக்கபோகும் இந்த பயிற்சி பட்டறையை பத்தி பத்திரிகை காரங்ககிட்ட விரிவா விளக்கமா சொன்னாரு...

இடையிடையே காமெடியும் கலந்து பதில் சொல்லிக்கிட்டிருந்தவர்கிட்ட ஒரு நிருபர் "நீங்க டைரக்ஷன் பண்ண படங்கள்ல உங்களுக்கு பிடிச்ச திரைக்கதை உள்ள படங்கள் என்னன்னு கேட்டாரு"?

அதுக்கு கமல், "எனக்கு எல்லா திரைக்கதையும் பிடிக்கும் ஆனா இதுவரைக்கும் நான் எழுதிய திரைக்கதையை மறுபடியும் நான் எழுதினா இன்னும் பெட்டரா எழுதுவேன். இதுல என்ன பிரச்சனைனா எது நல்ல திரைக்கதைன்னு இங்க இருக்கிற (மேடையில் இருப்பவர்களை காட்டி) யாராலையும் கண்டுபிடிக்க முடியல? ஏன்? என்னாலேயும் கூட இது தான் நல்ல திரைக்கதைன்னு ஒரு தீர்மானத்துக்கு வர முடியல.

எனக்கு பிடிச்ச ஒரு படம் ரசிகர்களுக்கு பிடிக்காம போயிடுது.அவங்களோட டேஸ்ட் எப்படிப்பட்டதுன்னு எந்த சினிமாக்காரன் களாலேயும் தேட முடியல, அதாவது சந்நியாசிகள பத்தி ஒரு விஷயம் சொல்வாங்க, சந்நியாசிங்க ஒரே எடத்துல இருக்க கூடாது, அவங்க ஓடிக்கிட்டே இருக்கணும்னு, ஆனா எல்லா சந்நியாசியும் அப்படி இல்லையே எல்லா எடத்திலேயும் மடங்கள கட்டி வச்சிக்கிட்டு உட்காந்துடுறாங்க. அது மாதிரி தான் சினிமாவும். சினிமாவுல ஒரு இடத்துல நிற்காம ஓடிக்கிட்டே இருக்கணும். அப்போ தான் பெட்டர் பண்ண முடியும்

என்ன கேட்டீங்கன்னா எனக்கு பிடிச்ச நல்ல திரைக்கதை நேத்திக்கு நான் புதுசா எழுதின திரைக்கதை தான் எனக்கு பிடிக்கும். நேத்திக்கு முன்னாடி எழுதின திரைக்கதைகள் எல்லாம் பழசாயிடிச்சி ,அத நீங்க படமாவும் பாத்திருப்பீங்க.அதுல ஆயிரத்தெட்டு குறைகள் இருந்திருக்கும். ஆனா நேத்திக்கு எழுதின திரைக்கதையை நீங்க பாத்திருக்க மாட்டீங்க ஸோ அது தான் எனக்கு பிடிக்கும்,ஏனா?அதுல இருக்குற குறைகள் உங்களுக்கு தெரியாது என்றவுடன் அரங்கத்தில் சிரிப்பொலி,கைத்தட்டல்.

ஒரு விஷயத்தை கத்துக்கிறதுக்கு ஆசிரியரா இருக்கிறதை விட மாணவனா இருக்கிறது ரொம்ப பெட்டர்.ஆனா மாணவனா இருக்கணும்னா நெறைய திமிர் வேணும்,ஆசிரியரா இருக்கணும்னா ரொம்ப பொறுமையும்,பணிவும் வேணும். நான் எப்பவுமே மாணவனா இருக்கவே ஆசைப்படுறேன்.அப்படி இருக்கிறதுக்கு எங்கிட்ட நெறைய திமிர் இருக்கு...என்றார்.

இந்தநிகழ்ச்சிக்குஅமீர்,ராதாமோகன்,சுசீந்திரன்,மௌலி,சந்தானபாரதி,சசி,மிஸ்கின் இப்படி ஏகப்பட்ட திரைப்பட இயக்குனர்கள் வந்திருந்தாங்க

கருத்துகள் இல்லை: