வெள்ளி, 1 மே, 2009

2009-05-01

ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?

"ரஜினிய நல்ல நடிகன்னு கடந்த இருபதுவருட படங்களை பார்த்து சொல்லமுடியாது.... ஆனா ரஜினிகிட்ட எதோ ஒரு ஈர்ப்பு இருக்குன்னு நம்புராக... அந்த ரகம் நீங்கள்...."

முள்ளும் மலரும் மாதரி "இல்லாத நடிகையின் பொல்லாத நாய்" உண்மையில் நல்ல பதிவு...


ஹரிணியின் பதிவுகளை மிகவும் விரும்பி பார்பேன்...
(மனதை கொள்ளைகொண்டது ஹரிணியின் தமிழ் எழுத்துக்கள் பதிவு...).


இப்படி ஒரு வாசகர் எனக்கு ஒரு (நூறு) கடிதம் எழுதியிருந்தார். நானும் என்னுடைய நடையில் இதை வைத்து ஒரு பதிவு போட அனுமதி கேட்டிருந்தேன். நேரமின்மை மற்றும் எழுதும் மனநிலையில் இல்லாததால் எழுதவில்லை.இந்த பதிவு கூட ஒரு அறிவிப்புதான்.

என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.

ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.

தொடர்ந்து படித்து ஊக்கமளிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.
ழைக்கும் வர்க்கத்தைப் போற்றும் நாள் 'மே' நாள் ஆகும். மானுடம் இயங்குவதற்கு மூலாதார ஆற்றலாக விளங்கும் பாட்டாளி வர்கத்தின் மேன்மையை போற்றும் நாளாக இந்த 1 மே நாள் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையை மேம்படுத்துவதே அவ்வர்க்கத்திற்கு செலுத்தும் உண்மையான நன்றிக் கடனாகும்.

ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், உழவுத் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர் என ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கமும் இன்னும் கொடுமையான சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகி வருவதை எவரும் மறந்துவிட இயலாது. இந்நிலையில், இத்தகைய உழைக்கும் வர்க்கம் தம்முடைய விடுதலைக்காக அவ்வப்போது ஆர்த்தெழுந்து போராடுவது தவிர்க்க முடியாத இயல்நிலை போக்காகும்; அத்தகைய விடுதலைப்போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சூழ்நிலைகளுக்குகேற்ப வெடித்து எழுகின்றன.

ஈழவிடுதலைப்போராட்டமும் ஒரு தேசிய இன பாட்டளிவர்க்க விடுதலைப்போராட்டமே ஆகும். இவ்வாறான விடுதலைப்போராட்டங்கள் பேராதிக்க சக்திகளால் நசுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனினும் அதனை முற்றிலுமாக அழித்தொழித்துவிட இயலாது. அந்த வகையில் ஈழத்தமிழ் மக்கள் அரைநூற்றாண்டு காலமாக நடத்தி வரும் பாட்டாளி வர்க்க இனவிடுதலைப்போர் தற்பொது சர்வதேசிய பேராதிக்க சக்திகளின் கூட்டுச்சதியால் நசுக்கப்படுவதாக தோன்றினாலும் மீண்டும் அது முழு வீரியத்தோடு வெகுண்டெழும். இந்த மே நன்நாளில் ஈழவிடுதலைக்காக போராடிவரும் தமிழத் தேசிய பாட்டாளிவர்க்கத்தினருக்கும் உலகெங்கிலும் இத்தகைய அறப்போராட்டங்களில் பங்கேற்றுவரும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
thiruma

இதோ வந்துவிட்டது
மற்றுமொரு மே தினம்

8மணி நேர உழைப்புக்காகவும்
உழைப்புக்கேற்ற ஊதியத்துக்காகவும்
உருவானதுதான் இந்த மே தினம்

1880ல் அமெரிக்காவில் உருவாகி
10 வருடம் போராட்டக் கருலிருந்து
1890ல் பாரீசில் பிறந்த அந்தக்
குழந்தைதான் இந்த மே தினம்

1923லிருந்து இந்தியாவில்
கொண்டாடப்பட்டு வரும்
விடுமுறை நாள்தான் மே தினம்

8மணிநேர உழைப்பையும்
8மணிநேர வாழ்க்கையையும்
8மணிநேர உறக்கத்தையும்
உணர்த்தத்தான் இந்த மே தினம்

அரசுத்துறை ஊழியர் தவிர
அறிந்திடுவாரா யாரும் இந்த
8மணிநேர மே தின சித்தாந்தம்?

கல்லுடைக்கும் கொத்தடிமைகள்
தோட்டத் தொழிலாளர்கள்
ஆலை ஊழியர்கள்
நெசவுத் தொழிலாளர்கள்
ஒப்பந்த ஊழியர்கள்
வியாபாரத்தள வேலையாட்கள்
தினக் கூலிகள்
..............
இவர்களில் எத்தனைபேர் அறிவார்
இனிய இந்த மே தினம்

கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்

நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்


மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்

உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்

இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்

இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்

குகையிலிருக்கும் ஆன்மீக ரகசியங்கள் வெளியே பரவ வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார்.

நமது உயிர் சக்தியை, அது நமது உடலில் இருக்கும் பகுதியை உணர்த்தக் கூடிய பயிற்சிகள் இன்று அரிதாகவே கற்பிக்கபட்டு வருகிறது.

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியானத்தின் முழு எல்லையை தொட்டவர். 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே காவி உடுத்தாமல், கடமைகளை துறக்காமல் உலகத்திற்கு மிக அரிய தியான முறையை பரப்பி உள்ளார்.

அருட்தந்தையின் அருள் மொழிகளில் சில:

1. எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.

2. எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். 
தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். 
அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

3. எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி. 
எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.

4. எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

5. உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே 
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.

6. இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.

7. வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.



More than a Blog Aggregator

by தமிழரசி
எல்லாம் முடிகிறதுஉன்னால்

எப்படி இது சாத்தியம்

அன்று இருந்த அமைதி எங்கே.......

இன்று வந்த ஆணவம் ஏது?

எல்லாம் முடிகிறது உன்னால்

எப்படி இது சாத்தியம்..

ஓயாது வேலை வந்தால்

ஒதுக்கி வைப்பாயா காதல் நினைவை...

உன்னால் முடிவது எல்லாம்

என்னால் ஏன் முடிவது இல்லை

உரைத்தாய் என்பதால் உணர்ந்தேன்

உதறினால் என்செய்வேன்..

அன்று முழு நேர காதல் நான்

இன்று பகுதி நேரத்திற்கு

கூட பயன் படவில்லை

இனி ஒரு ஈர்ப்பு இல்லை என்றாய்

இதயத்தில் ஈரத்தையே தொலைப்பாய் என

ஏன் சொல்லவில்லை

இருந்தால் என்ன?...

சுவடாய் வந்தாய் சித்திரம் எழுதிவிட்டேன்.....

நினைவாய் மாறிவிட்டாய்!!!!!!

கவிதைக்காகவாவது பயன் படுகிறது

என் காதல் என்று இதோ .....

கண்ணீர் சிந்திகிறேன்.....

காற்றில் கலந்த என் காதலுக்கு......

எல்லாம் முடிகிறது உன்னால்

எப்படி சாத்தியம் உனக்கு....

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி வருகிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே எட்டு மணி நேர வேலை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் ஓயாது, ஒழிச்சலின்றி போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான்.

கருத்துகள் இல்லை: