திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29




முகவரி இன்றி தனித்தபோது
என் விழிகளில் தவழ்ந்த
முகவரி நீ தான் அன்பே

உன் முதல் பார்வையிலேயே
என் சோகவலிகளையும் மறந்து
இதமான வலியொன்றை
இதய வாயிலில் உணர்ந்தேன்

முகவரிக்குள் குடி கொண்டு
நீ அவஸ்தை என நினைத்து
முதல் வலியுனையே இன்பமாக
சுமந்தேன் இதயத்தில்..

அன்று முதல்..என் இதயம்
உனக்காகவே இயங்குகிறது
என் எண்ணங்கள் யாவும்
உனையே நினைக்கின்றது.

என் இதய வாசல் அழகானது
தினம் தினம் பலகடிதங்களை
வரைந்தேன் என் புதிய
இதய முகவரிக்கு..

பதில் மடல் வராத போதும்
என் இதய முகவரிதனை
தரிசிக்காமல் நகர்வதில்லை
என் நாழிகைகள்..!!

இதயத்தில் உன்னையே
முகவரியாக சுமக்கிறேன்
நிஜத்தில் ஏனோ உன்
வீட்டைக் கடக்கையில்
தாடுமாறுகின்றேன்
உன் முகாரி ராக குரலைக்
கேட்கையில் மெளனமாகின்றேன்...

என் இதயத்திற்கு
முகவரியானவளே
எதற்காக நீ
முடங்கி கிடக்கின்றாய்
என்னை எப்போ உன்
முகவரியாக்குவாய் சொல்?

என் காதலின் முகவரியே
நம் காதலுக்கு நீ
முதல்வரியாகுவாயா
இல்லையேல்
முற்றுப்புள்ளியாகுவாயா?





முகவரி இன்றி தனித்தபோது
என் விழிகளில் தவழ்ந்த
முகவரி நீ தான் அன்பே

உன் முதல் பார்வையிலேயே
என் சோகவலிகளையும் மறந்து
இதமான வலியொன்றை
இதய வாயிலில் உணர்ந்தேன்

முகவரிக்குள் குடி கொண்டு
நீ அவஸ்தை என நினைத்து
முதல் வலியுனையே இன்பமாக
சுமந்தேன் இதயத்தில்..

அன்று முதல்..என் இதயம்
உனக்காகவே இயங்குகிறது
என் எண்ணங்கள் யாவும்
உனையே நினைக்கின்றது.

என் இதய வாசல் அழகானது
தினம் தினம் பலகடிதங்களை
வரைந்தேன் என் புதிய
இதய முகவரிக்கு..

பதில் மடல் வராத போதும்
என் இதய முகவரிதனை
தரிசிக்காமல் நகர்வதில்லை
என் நாழிகைகள்..!!

இதயத்தில் உன்னையே
முகவரியாக சுமக்கிறேன்
நிஜத்தில் ஏனோ உன்
வீட்டைக் கடக்கையில்
தாடுமாறுகின்றேன்
உன் முகாரி ராக குரலைக்
கேட்கையில் மெளனமாகின்றேன்...

என் இதயத்திற்கு
முகவரியானவளே
எதற்காக நீ
முடங்கி கிடக்கின்றாய்
என்னை எப்போ உன்
முகவரியாக்குவாய் சொல்?

என் காதலின் முகவரியே
நம் காதலுக்கு நீ
முதல்வரியாகுவாயா
இல்லையேல்
முற்றுப்புள்ளியாகுவாயா?




More than a Blog Aggregator

by வெண்ணிலா

என் ஐந்து வயதில்
பாலர் வகுப்பில்
"தோ தோ நாய்க்குட்டி
துள்ளிவா நாய்க்குட்டி.."
பாட்டு படித்தபோது
உடனே ஆசைப்பட்டேன்
"அச்சோ இப்படி ஒரு அழகான
நாய்க்குட்டி வாங்கி அதனோடு
ஓடியாடி விளையாடணும்" என்று...

ஏழு எட்டு ஒன்பது வயதுவரை
என் நாய்க்கு என்ன நாமம்
வைக்கலாம் என யோசித்தேன்
ரொம்மி...ஜிம்மி...பிறவுணி...
பிளாக்கி...டிங்கி...பிங்கி....

பத்துவயது நிரம்பியதும்
பதுங்கி பதுங்கி சென்று
அம்மாவிடம் கேட்டேன்
"அம்மா அம்மா எனக்கொரு
அழகான நாய் வேணும்"
அம்மா அடித்து அழவைத்தா


பத்தாம் வகுப்பு படிக்கையில்
பதினைந்து வயதானது
பண்பாக அப்பாவிடம் கேட்டேன்
"அப்பா அப்பா எனக்கொரு
வெள்ளை நாய்க்குட்டி வேணும்"
கேட்டு வாய்மூடும் முன்னே
நாய் கடிக்கும் என்றகன்றார்

நாய் நன்றியுள்ளது என்று
நான் படித்தேனே முணுமுணுத்தபடி
நண்பி வீட்டு நாயை
யன்னல் வழியே ரசித்தவாறு

அண்ணனிடம் கேட்டேன்
நாயொன்று எனக்கு வேணும்
"நாய் ஒன்று நாய் வளர்க்க
ஆசை கொள்ளுதே என கைகொட்டி
நையாண்டி செய்ததை இன்றும்
என்னால் மறக்க முடியவில்லை

பதினெட்டு வயதில் பக்குவப்பட்டு
ரெட்டை ஜடை போட்டு
பாவாடை தாவணி உடுக்கையில்
காதல் வந்து குடிகொண்டது
அப்போதும் என்னை நாய் ஆசை
விட்டுப் போகவே இல்லை..

காதலன் கேட்டான்
"நிலாக்குட்டி உனக்கு
என்ன பிடிக்கும்?"


ஆசையாக புன்னகையோடு
அகலமாக கண்கள் விரித்து
"எனக்கு அழகான நாய்க்குட்டி
ரொம்ப பிடிக்கும்" என்று
குழந்தை போல சொன்னேன்

மறுநிமிடமே என் காதலன்
எனக்கு பரிசளித்தான்
அழகான நாய்க்குட்டி பொம்மை
முதலில் அதிர்ந்தேன்
ஆனாலும்...
காதலர்தினப் பரிசு என்றெண்ணி
பக்குவமாக வைத்திருக்கிறேன்


இருப்பினும் என் நாய் ஆசை
இன்னும் எனை அகலவில்லை
முடிவு எடுத்தேன்...
எனக்கொரு பிள்ளை பிறந்தால்
அதன் பெயர் "பிங்கி"



(நல்லகாலம் அதுக்கு நாய் என்று பெயர் வைக்காமல் விட்டீயளே என்று எல்லோரும் நினைக்கிறது

எனக்கும் கேட்கிறது : -) )


More than a Blog Aggregator

by வெண்ணிலா

என் ஐந்து வயதில்
பாலர் வகுப்பில்
"தோ தோ நாய்க்குட்டி
துள்ளிவா நாய்க்குட்டி.."
பாட்டு படித்தபோது
உடனே ஆசைப்பட்டேன்
"அச்சோ இப்படி ஒரு அழகான
நாய்க்குட்டி வாங்கி அதனோடு
ஓடியாடி விளையாடணும்" என்று...

ஏழு எட்டு ஒன்பது வயதுவரை
என் நாய்க்கு என்ன நாமம்
வைக்கலாம் என யோசித்தேன்
ரொம்மி...ஜிம்மி...பிறவுணி...
பிளாக்கி...டிங்கி...பிங்கி....

பத்துவயது நிரம்பியதும்
பதுங்கி பதுங்கி சென்று
அம்மாவிடம் கேட்டேன்
"அம்மா அம்மா எனக்கொரு
அழகான நாய் வேணும்"
அம்மா அடித்து அழவைத்தா


பத்தாம் வகுப்பு படிக்கையில்
பதினைந்து வயதானது
பண்பாக அப்பாவிடம் கேட்டேன்
"அப்பா அப்பா எனக்கொரு
வெள்ளை நாய்க்குட்டி வேணும்"
கேட்டு வாய்மூடும் முன்னே
நாய் கடிக்கும் என்றகன்றார்

நாய் நன்றியுள்ளது என்று
நான் படித்தேனே முணுமுணுத்தபடி
நண்பி வீட்டு நாயை
யன்னல் வழியே ரசித்தவாறு

அண்ணனிடம் கேட்டேன்
நாயொன்று எனக்கு வேணும்
"நாய் ஒன்று நாய் வளர்க்க
ஆசை கொள்ளுதே என கைகொட்டி
நையாண்டி செய்ததை இன்றும்
என்னால் மறக்க முடியவில்லை

பதினெட்டு வயதில் பக்குவப்பட்டு
ரெட்டை ஜடை போட்டு
பாவாடை தாவணி உடுக்கையில்
காதல் வந்து குடிகொண்டது
அப்போதும் என்னை நாய் ஆசை
விட்டுப் போகவே இல்லை..

காதலன் கேட்டான்
"நிலாக்குட்டி உனக்கு
என்ன பிடிக்கும்?"


ஆசையாக புன்னகையோடு
அகலமாக கண்கள் விரித்து
"எனக்கு அழகான நாய்க்குட்டி
ரொம்ப பிடிக்கும்" என்று
குழந்தை போல சொன்னேன்

மறுநிமிடமே என் காதலன்
எனக்கு பரிசளித்தான்
அழகான நாய்க்குட்டி பொம்மை
முதலில் அதிர்ந்தேன்
ஆனாலும்...
காதலர்தினப் பரிசு என்றெண்ணி
பக்குவமாக வைத்திருக்கிறேன்


இருப்பினும் என் நாய் ஆசை
இன்னும் எனை அகலவில்லை
முடிவு எடுத்தேன்...
எனக்கொரு பிள்ளை பிறந்தால்
அதன் பெயர் "பிங்கி"



(நல்லகாலம் அதுக்கு நாய் என்று பெயர் வைக்காமல் விட்டீயளே என்று எல்லோரும் நினைக்கிறது

எனக்கும் கேட்கிறது : -) )


எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!

பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..

உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!

மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!

இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!


Tamil,camera,gadgets,science,microsoft,google

காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்

காதல் அது சில
மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்

காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்

காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்

காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்

காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்

காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து

காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்

காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்

காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்

காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்

காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்

என்னிடமும் காதல் வந்திச்சு
அதை இன்றுவரை சொல்லாமல்
சிரித்து பழகுகின்றேன்
பிரியாமல் உன்னோடு..

எப்போது உன் காதலை
என்னிடம் சொல்லி
மாலையிடப் போறாய்
என் பிணத்துக்கு நீ..?

ஆம்
காதல் அது
உயிரோடு சாகவைக்கும்
உயிர்கொள்ளி......!

கருத்துகள் இல்லை: