செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

நீ என்னை தனித்தன்மையானதொரு கவிதை
எழுதச்சொல்லி வற்புறுத்துகிறாய்
நகுலனோ
எதிர்வீட்டு தூதா சபானியோ இல்லாது
உனக்கென ஒரு பிரத்யோக கவிதை வேண்டுமெனவும்
அது எப்படி இருக்கவேண்டுமெனவும்
விவாதிக்கிறாய்
யாருமற்ற உலகத்திலும்
யாரும் இல்லையென்ற ஏக்கமோ
யாரேனும் இருந்திருக்கலாமென்ற நிராசையாகவோதான்
இருக்குமென் கவிதை

அது உனக்கானதாயிருக்காது
நீ என்னை தனித்தன்மையானதொரு கவிதை
எழுதச்சொல்லி வற்புறுத்துகிறாய்
நகுலனோ
எதிர்வீட்டு தூதா சபானியோ இல்லாது
உனக்கென ஒரு பிரத்யோக கவிதை வேண்டுமெனவும்
அது எப்படி இருக்கவேண்டுமெனவும்
விவாதிக்கிறாய்
யாருமற்ற உலகத்திலும்
யாரும் இல்லையென்ற ஏக்கமோ
யாரேனும் இருந்திருக்கலாமென்ற நிராசையாகவோதான்
இருக்குமென் கவிதை

அது உனக்கானதாயிருக்காது
இரகசியங்களடங்கிய
இப்பின்னிரவின்முடிவில்
வந்திறங்குகிறது உன் நினைவுகள்
மலரின் மீதமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல்.
வண்ணங்கள் உதிர்ந்த இருட்சுவரிலிருந்து
பிரதியெடுத்த ஓவியமென
வந்திருக்கிறாய் நீயும்.
என் நிலைக்கண்ணாடியில் விழும்
உங்கள் பிம்பங்கள் பொருந்தாதுகண்டு
அதிர்ந்து நிற்கிறேன் நான்.
வெகுசிரத்தையோடு கவனிக்கிறது
காலம்
இரகசியங்களடங்கிய
இப்பின்னிரவின்முடிவில்
வந்திறங்குகிறது உன் நினைவுகள்
மலரின் மீதமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல்.
வண்ணங்கள் உதிர்ந்த இருட்சுவரிலிருந்து
பிரதியெடுத்த ஓவியமென
வந்திருக்கிறாய் நீயும்.
என் நிலைக்கண்ணாடியில் விழும்
உங்கள் பிம்பங்கள் பொருந்தாதுகண்டு
அதிர்ந்து நிற்கிறேன் நான்.
வெகுசிரத்தையோடு கவனிக்கிறது
காலம்
அவனும் கடவுளும் நண்பர்கள்
அவருடைய ஒய்வுநேரங்களிலும்
அவனுடைய தனிமையிலும்
உரையாடுவதாய்ச் சொல்லிருக்கிறார்

அவனிடம்

இன்றைய தேநீர்நேரத்தில் வருவதாய்
ஒத்துக்கொண்டிருக்கிறார்
அவனுடைய கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்ற கவலையோடு.
அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்
கடவுளிடம் ஒரு மலர்ந்த புன்னகை
வேறுவழியற்று நான்கு விடைகளைச்சொல்லி
சரியான பதில் கேட்டான்
இன்னும் பெரிய புன்னகை.
நான்கில் ஒன்றைச்சொல்லி
இது சரிதானாவென்றான்
அதே புன்னகை
மிஞ்சிய தேநீரை அவருக்குக் கொடுத்தான்
நாளைவரச்சொல்லி கதவை மூடினான்

*நண்பன் பாரதிக்கு..

அவனும் கடவுளும் நண்பர்கள்
அவருடைய ஒய்வுநேரங்களிலும்
அவனுடைய தனிமையிலும்
உரையாடுவதாய்ச் சொல்லிருக்கிறார்

அவனிடம்

இன்றைய தேநீர்நேரத்தில் வருவதாய்
ஒத்துக்கொண்டிருக்கிறார்
அவனுடைய கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்ற கவலையோடு.
அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்
கடவுளிடம் ஒரு மலர்ந்த புன்னகை
வேறுவழியற்று நான்கு விடைகளைச்சொல்லி
சரியான பதில் கேட்டான்
இன்னும் பெரிய புன்னகை.
நான்கில் ஒன்றைச்சொல்லி
இது சரிதானாவென்றான்
அதே புன்னகை
மிஞ்சிய தேநீரை அவருக்குக் கொடுத்தான்
நாளைவரச்சொல்லி கதவை மூடினான்

*நண்பன் பாரதிக்கு..

கருத்துகள் இல்லை: