திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29



More than a Blog Aggregator

by ஆடுமாடு
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அதுக்கு நீண்ட ப்ளாஷ்பேக இருக்கு. எங்கப்பா மகாராஷ்ட்ராவுல வேலை பார்த்தாரு. அங்கயே பொறந்துட்டதால இந்த பெயர். இந்தப் பெயர் கண்டிப்பா பிடிக்கும். அதுலயும் ஒரு சென்டிமென்ட் இருக்கு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
டிசம்பர் 8. நண்பனின் மரணத்தின் போது...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு டைரக்டர் 15 வருஷத்துக்கு முன்னால என்னை அசிஸ்டெண்டா சேர்த்துக்கிட்டாரு.

4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறு. புளித்தண்ணி. கானம் துவையல்.

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கண்டிப்பா.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கிணத்துல.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பல்லு. ஏன்னா எனக்கு ஓட்டைப்பல்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
உடனே கோபம் வராது. பிடிக்காததும் அதுதான்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
தினமுமே லேட்டாவே வாங்க.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் சின்னவன் நீனோ

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ப்ளூ ஜீன்ஸ். வொயிட் டிசர்ட்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
களவானியே...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு.

14.பிடித்த மணம்?
மல்லி... மல்லி

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

ஜ்யோவ்ராம் சுந்தரு, நம்ம பைத்தியக்காரன்... அநியாயத்துக்கு நல்லவங்களாச்சே!

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே.


17. பிடித்த விளையாட்டு?
செல்லாங்குச்சி.

18.கண்ணாடி அணிபவரா?

பின்ன.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அப்டிலாம் இல்லை. எல்லாத்தையும் பார்த்து தொலைச்சுடுவேன்..

20.கடைசியாகப் பார்த்த படம்?
மாயாண்டி குடும்பத்தார்

21.பிடித்த பருவ காலம் எது?
கோடை. கிணத்துல குளிக்கலாமில்ல.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

பரசுராமின் சாளரம்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் வைக்கிறதே இல்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: கோயில் கொடையில் பட்றையன் சாமிக்கு அடிக்கும் கொட்டு.
பிடிக்காதது: ஏங்க இங்க வாங்க!

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இலங்கை. டில்லி. எது தூரம்?

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா மாடுமேய்ப்பேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கள் இறக்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அதைதான் தேடுறேன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தோணியாறு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மூச்!

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நதியில் விழுந்த இலை.


More than a Blog Aggregator

by Valathoor - Valliban
நான் எழுத நினைத்த கவிதைக்கும், 

எழுதும் கவிதைக்கும் உள்ள

இடைவெளிகளில் நீ 



நான் வாழ நினைத்த வாழ்கைக்கும் 

வாழுகின்ற வாழ்கைக்கும் உள்ள 

இடைவெளிகளில் நீ 


உனக்கான தருனங்களில்

பிறர்க்காக வாழ்கிறேன்


நமக்கான நிமிடங்களுக்கான 

காத்திருப்புக்களோடு ...... 



More than a Blog Aggregator

by Valathoor - Valliban
நான் எழுத நினைத்த கவிதைக்கும், 

எழுதும் கவிதைக்கும் உள்ள

இடைவெளிகளில் நீ 



நான் வாழ நினைத்த வாழ்கைக்கும் 

வாழுகின்ற வாழ்கைக்கும் உள்ள 

இடைவெளிகளில் நீ 


உனக்கான தருனங்களில்

பிறர்க்காக வாழ்கிறேன்


நமக்கான நிமிடங்களுக்கான 

காத்திருப்புக்களோடு ...... 


எனக்கு சமீபத்தில் வந்த மின் அஞ்சல்



தலைப்பு -இனவெறியை நிறுத்துங்கள் 

செய்தி -  மனித உரிமைகளுக்கு எதிரான இனவெறி பாகுபாட்டை தடுத்திடுங்கள் 






தலைப்பு -உங்கள் இல்லங்களில் நடைபெறும் வன்முறையை நிறுத்துங்கள் 

செய்தி -  உங்கள் இல்லங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் 78 % மரணத்தில் முடிகின்றது 


 


தலைப்பு -எனது உதாரணம் - என் பெற்றோர் 

செய்தி -   குழந்தைகள் வேகமாக கற்று கொள்கிறார்கள், உங்கள் இல்லங்களில் சண்டை போடாதீர்கள் 



தலைப்பு -பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் 




தலைப்பு -தத்து எடுப்பதை ஆதரியுங்கள் 

செய்தி -  நீங்கள் யாரை வளர்ப்பீர்கள் என உங்களுக்கு தெரியாது 
 



விளக்கம் வேண்டுமா ? 

உணவை வீனாக்காதீர்கள் 


தலைப்பு -பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்



தலைப்பு -பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் 


தலைப்பு - புகையிலை உபயோகிப்பதால், வாய் புற்றுநோய் ஏற்படும்.

உங்கள் வறுகைக்கு நன்றி 


கார்த்தி . தி 


எனக்கு சமீபத்தில் வந்த மின் அஞ்சல்



தலைப்பு -இனவெறியை நிறுத்துங்கள் 

செய்தி -  மனித உரிமைகளுக்கு எதிரான இனவெறி பாகுபாட்டை தடுத்திடுங்கள் 






தலைப்பு -உங்கள் இல்லங்களில் நடைபெறும் வன்முறையை நிறுத்துங்கள் 

செய்தி -  உங்கள் இல்லங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் 78 % மரணத்தில் முடிகின்றது 


 


தலைப்பு -எனது உதாரணம் - என் பெற்றோர் 

செய்தி -   குழந்தைகள் வேகமாக கற்று கொள்கிறார்கள், உங்கள் இல்லங்களில் சண்டை போடாதீர்கள் 



தலைப்பு -பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் 




தலைப்பு -தத்து எடுப்பதை ஆதரியுங்கள் 

செய்தி -  நீங்கள் யாரை வளர்ப்பீர்கள் என உங்களுக்கு தெரியாது 
 



விளக்கம் வேண்டுமா ? 

உணவை வீனாக்காதீர்கள் 


தலைப்பு -பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்



தலைப்பு -பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் 


தலைப்பு - புகையிலை உபயோகிப்பதால், வாய் புற்றுநோய் ஏற்படும்.

உங்கள் வறுகைக்கு நன்றி 


கார்த்தி . தி 



More than a Blog Aggregator

by Valathoor - Valliban
தேவை ஒரு தேவதை

காத்திருந்த பொழுதுகளில் கரைந்துபோகவில்லை உன் ஞாபகங்கள்

திரை நட்சத்திரங்களின் மெல்லிய ஆடைகளிலும் தேகங்களிலும் வீழ்ந்துவிடாமல்
என்னை காத்தது உனக்கான காத்திருப்புக்கள் தான். 

நான் ஊர் சுற்றும் வேலைகளில், உலகம் சுற்றும் கச்சை மாந்தரில், கலந்துவிடவில்லை நான், உனக்கான கனவுகள் என்னில் வேலி போட்டன

படிப்பு வந்ததா இல்லை, வந்ததை படித்தேனோ, அன்றாட பள்ளி, கல்லூரி ஓட்டத்திலே கூட, மனதின் அடி ஆழத்தில் ஒளிந்துகொண்டு என்னை ஆளாக்கியது உனக்கான என் ஞாபகங்கள். 

பார்த்து, பல வருடம் ஆனாலும், வயதுக்கு வாராத உன் பிம்பமே என்றும் என் மனதில், பால்யத்தில் பேசிய வார்த்தைகளை, எனக்குள்ளே பொக்கிஷமாக பொத்தி பொத்தி வார்த்தைகளை எண்ணுகிறேன். 

பருவத்தில் உன்னை பார்கவும் இல்லை, உன்னிடத்தில் பேசவும் இல்லை, 

நம் பால்யம் எல்லாம், ஆயுள் ஞாபகமாய் எனக்குள் நிறைந்து இருக்க, அதனால் தான் எந்த பெண்ணையும் நான் பார்க்கவில்லை, பேசவும் இல்லை. 

ஒருவேளை நான் உன்னை காதலிப்பது, உன்னை தவிர எல்லோருக்கும் தெரியும் போல, அதனால் தான் எந்த பெண்ணும், என்னிடம், பழகவும் இல்லை, பேசவும் இல்லை, 

ஒருதலை காதலோ, அல்லது இன கவர்ச்சியோ, எனக்கான முதல் காதல், முதல் காதலி நீதான், 

குழந்தையில் பொறாமைபடவைத்தாய்
என்னை நல்லவனாய் வளர வாய்ப்புக்களை கொடுத்தாய்
என் பருவத்தில் எனக்கு காம கடிவாளம் ஆனாய்
ஆண்டாள் பெருமாள் காவியத்தை போல

நான் ஆண்டாள் ஆனேன், நீ என்னை ஆண்டாய், முழுமையாய். 

நீ மேலும் படித்தாய், மேலும் சம்பாதித்தாய், என் கனவுகளை எனக்காகவும், உனக்காகவும் வளர்த்தேன், கூடவே நானும் வளர்ந்தேன்.

ஆனால் நீ வளர்ந்ததை கவனிக்க மறந்துவிட்டேன். 

உனக்கும் கனவுகள் வருமா, உனக்கும் காதல் வருமா என எண்ண மறந்துவிட்டேன், 

உன்னை ஒரு ஜடமாக எண்ணி அல்ல, உன்னை என்னில் ஒரு உயிராய் எண்ணினேன், 

ஆனால் காலம் எல்லோரையும் எப்போது ஒரே நிலையில் வைத்திருப்பதில்லையே, 

கிராமத்தில் நான் உன்னை பார்த்து மையால் கொண்டேன், 
அது போல், நகரத்தில் நீ மையல் கொள்ள காரணம் ஆயிரம் இருந்தும்
நீ யாரையும் காதலிக்கவில்லை என்று சரியாகதான் கனித்தேன், 

காலம் உன்னையும் என்னையும் மாற்றியது, 

நான் காதலிக்க பல வாய்ப்புக்கள் வந்தும் உன் காதல் உறுதிபடாதவரை யாரையும் மனதால் கூட நினைக்க கூடாது என்று பால்யத்தில் கொண்ட உறுதி இன்றுவரை நீள்கிறது. 

இந்த நொடி, உன் காதல் பற்றிய உறுதிபடும் தகவல் என்னை சேர்ந்தது, 

வாழ்க உன் காதல், வாழ்க உங்கள் காதல். 

உன்னை என்னால் மறக்க இயலும், இயலாமலும் போகும், இப்போதும் என் எல்லா கடவு சொல்லும் நீதான், என்னை அறியாமல் அடிக்கடி கூகுள்ளில் அதிகம் தேடுவது உன்னைதான். எப்போதும் நீதான் என்னை அறியாமல் என்னை ஆட்கொண்டுள்ளாய்,

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை, ஆனாலும் கடவுள் உங்களை பார்க்காவிடினும், நீங்கள் கடவுளை கானாவிடினும், கடவுளின் தொலைபேசி எண்னும், மின் அஞ்சல் முகவரி தெரியாவிடினும் அவரிடம் அன்பு கொண்டது போல் உன்னிடம் நான் என்றுமே அன்பு கொள்வேன். 

 எனக்கு உடனடி தேவை ஒரு தேவதை, நான் காதலிக்க, என்னை காதலிக்க, என் காதலை காதலிக்க, வரும் தேவதையில் காதலையும் காதலிக்க

தேவை ஒரு தேவதை. 

உடலுக்கும், மனதுக்கும், 
பணத்துக்கும், ஏழ்மைக்கும், 
அனைத்துக்கும், அனைத்துக்கும் 

போட்டிபோடும் உலகில் எனக்கும், என்னிடத்தில் போட்டி போடவும் 

தேவை ஒரு தேவதை ........... 

உடனடி தேவையில்லை, ஆனால் உண்மையான தேவை ...... 


தேடும் படலம் தொடர்கிறேன், எனக்கான என் தேவதையை ...... 

என் பொற்றோர்களும் தேடிகிறார்கள் ....... 

நீங்கள் எப்படி .......



இப்படிக்கு

வேறு யார் - நான் தான் - கார்த்தி .... 
 

 

கருத்துகள் இல்லை: