செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

மைக்ரோசாஃப்டிடம் இருந்து தப்பித்த யாஹு கூகிளிடம் அடைக்கலம் சேர்ந்துவிட்டது.10 வருட ஒப்பந்தம். ஏற்க்கனவே யாஹு ரொம்ப நிறைய இழந்துவிட்டது. கொஞ்சமே கொஞ்சம் இருந்த மரியாதையும் இப்போ காலி (!).யாஹுவின் ஓப்பன் சோர்ஸ் டெவ் குரு ஜெரிமி கிளம்புகிறார். டேட்டா குருவும் கிளம்பிவிட்டார்.ஷேர் நாளுக்கு நாள் இறங்கிகொண்டே இருக்கிறது.புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இங்கு அருமையாக பொருந்தும். யாஹு
தமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.தமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றனஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெக்கான் க்ரோனிகிள்
தினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:சென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.இதுல தமிழ் நாடு
தினகரன் நாளிதழை வாங்கிய சன் குழுமம் தற்போது அதை மெருகேற்றி அதன் விலையை 1 ரூபாயாக குறைத்துள்ளது. வலையில் ஈ-பேப்பர் வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பை சற்றே மாற்றி கொஞ்சம் வண்ண மசாலா தூவியிருக்கிறார்கள். செய்திகளின் சார்பில் பெரிய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை. :, தமிழ், தமிழ்ப்பதிவுகள், நடப்பு
இந்த வருடவெயில் கடந்த 25 வருடங்களில் அடித்த வெயிலையும் விட அதிகம் என்று நண்பர் சொன்னார்.ஒவ்வொரு வருடமும் இதேதான் சொல்கிறோம் என்று இன்னொருவர் சொன்னார்.

நேற்று மின்சாரம் இல்லாத இரவைக்கடக்க நேர்ந்தபோது உலகத்தின் வெப்பம் உயர்ந்துவருவதை நானும் உணர்ந்தேன்.

ஒருமுறை படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றிருந்தபோது அந்த மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் நுழைந்ததும் குளிர் பரவுவதை உணர்ந்தேன்.அதற்கு காரணம் மரங்கள் என்று புரிந்தது.உடனே எனக்கு ஒரு ஆசை தோன்றியது.சென்னையை இப்படி குளிர் நகரம் ஆக்கமுடியுமா? மரங்கள் வளர்த்தால் சாத்தியம் எனில் எத்தனை லட்சம் மரம் வளர்க்கவேண்டும்?

சென்னையில் எல்லோரும் தொட்டிச்செடி வளர்ப்பதன் பின்னிருக்கும் இயலாமை புரிந்தது.புழுக்கம் நிறைந்த வாடகைவீட்டில் மரத்தை எங்கு வளர்ப்பது?

ஒருமுறை புத்தக வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் பரிசாக சிறியமண் சட்டியில் மூங்கில் செடியைக்கொடுத்தார்கள்.அதை எங்கு வளர்ப்பது என்று தெரியாமல் வீட்டின் மூலையில் வைத்திருந்தேன். அது சீன வாஸ்து சாஸ்திரப்படி இங்குதான் வைக்கவேண்டுமென்று வீட்டுக்குவந்த நண்பர் சொன்னார்.

அதை இப்போது என் புத்தக அடுக்கின் அருகில் வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஆக்ஸிஜன் உருவாகும் என்று அதே நண்பர்தான் சொன்னார்.சென்னை முழுக்க மரம் வளர்ப்பதன் மூலம் அது குளிர் நகரமாகும் என்ற கனவுடன் புழுக்கம் நிறைந்த ஒற்றைப்படுக்கையறை வாடகை வீட்டில்இப்போது என்னால் வளர்க்கமுடிந்தது இந்த சிறிய மூங்கில் செடிதான்.

நேற்று மின்சாரம் இல்லாத அந்த தகிக்கும் இரவில் என் கைபேசியின் ஒளிரும் வெளிச்சத்தில் என் மூங்கில் மரத்தைப்பார்த்தேன். ஒருநாள் அதைத்தேடி பறவைகள் வரலாம். இந்தக்கோடையைத் தாண்டும் கொதிநிலையோடு இன்னொரு கோடை வருவதற்குள் இதன் கிளைகள் விரிந்து என் வாடகைவீட்டின் வெக்கை தணியலாம்.

அந்தச்சிறிய மூங்கில்மரத்தை அருகில் போய்ப்பார்த்தேன். அதன் மெல்லிய கூர்இதழ்கள் வாடிக் கவிழ்ந்திருந்தன. பதட்டமடைந்த நான் அதற்கு நீரூற்றலாம் என்று நினைத்தேன். இருட்டுக்குள் வியர்வையைத்துடைத்துக்கொண்டு மினரல் வாட்டர் இருக்கும் அடுப்படி நோக்கி மெல்ல நடந்தேன்.
கடந்த வாரத்தில் காந்தி படம் பார்த்தேன்.சிறுவயதில் பள்ளியில் அழைத்துபோகையில் காந்தியையையும் நேருவையும் அதிசயத்துணர்ந்த உருவ ஒற்றுமையை மட்டுமே பார்த்திருந்தேன்।இப்போது பார்க்க அதன் தொழில் நுட்பமும் அர்ப்பணிப்பு சார்ந்த உழைப்பும் பென் கின்க்ஸ்லியின் நடிப்பும் பிரமிக்கவைக்கிறது।நேற்று எங்கள் படத்திற்கான ஒரு தேர்வுக்காக ஒரு பள்ளி மைதானத்திற்குப்போனோம்.சும்மா படப்பிடிப்பிற்கான இடம் பார்ல்க வந்திருப்பதாகப் பொய் சொல்லி உள்ளே போனோம்.அங்கிருந்த வயதான காவலாளி என்களை முதலில் அனுமதித்துப்பின்னர் கேமராவைப்பார்த்ததும் வெளியேறச்சொன்னார்.அவரிடம் இது சாதாரண கேமரா என்று எவ்வளவோ சொல்லியும் அவர் அனுமதிக்கவில்லைபோய் அனுமதி பெற்றுக்கொண்டு வாருங்கள்.இல்லையெனில் அனுமதிக்கமாட்டேன்,என்னைத்தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இது என்கடமை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.எங்களுக்கு எரிச்சலாக இருந்தது.ஒருநிலையில் நான் சற்று அதட்டலாக உங்கள் கரஸ்பாண்டண்ட் பெயர் என்ன என்று கேட்டேன்.அவர் சொன்னார்.அவரை எனக்குத்தெரியும் நான்பேசவா என்று கேட்டேன்.அப்படி ஒருவரை எனக்குத்தெரியாது என்றபோதும் நான் அப்படிச் சொன்னேன்.அவரிடம் கரஸ்பாண்டண்டின் எண் என்று கேட்டேன்.அவர் தெரியாது என்று சொன்னார்.'அப்ப என்ன செய்யறது'சொல்லுங்க என்று நான் அவரிடம் கோபமாகசொன்னேன்.அதெல்லாம் தெரியாது சார்.இங்க எடுக்கக்கூடாது.தப்பா நினைக்காதீங்க என்று திரும்பவும் சொன்னார்.இதற்கிடையில் உடன்வந்த நண்பர் அவரை ஒரு நிமிடம் தனியா வாங்க என்று அழைத்துப்போய் பணம் ஏதாவது வாங்கிகங்க என்று சொன்னதும் அவர் அதை மறுத்து எனக்கு னான் வாங்குற சம்பளமே போதும் சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.இதற்கிடையில்அவருக்குத்தெரியாமல் நான் படம்எடுக்க ஆரம்பித்திருந்தேன்.அதைக்கவனித்த அவர் திரும்பவும் அருகில் வந்து எடுக்ககூடாது சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க॥அனுமதி வாங்கிட்டு வாங்க ''ஹலோ॥இது ஷூட்டிங் இல்ல.சும்மா டெஸ்ட்.''எதுன்னாலும் இருக்கட்டும் சார்.தயவுசெய்து எட்டுக்காதீங்க'ஒருநிலையில் கோபம்வந்த நாங்கள் எல்லோரும் அங்இருந்த ஒருவரை சும்மா அனுமதி வாங்க அனுப்புவதுமாதிரி அனுப்பினோம்.அவர் வரட்டும் வந்தபிறகு தயவுசெய்து எடுங்க.யாராவ்து பாத்தா என்வேலை போயிடும்'அதெல்லாம் போகாதுங்க.ஏற்கனவே இன்க பலமுறை வந்து எடுத்திருக்கிறோம்(ஏற்கனவே ஒருமுறை அங்கிருக்கும் காவலாளிக்கு அறுபது ரூபாய் குவார்ட்டருக்காக அவர் கேட்டு கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறோம்)எனவே இவரையும் சமாளிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் மசியவில்லை. ஒருநிலையில் அவர் சமாதானமாகாமல் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றார்.நாங்கள் அவரை மனசுக்குள் திட்டிவிட்டு அவரது அறியாமையைக்கேலி செய்துவிட்டு என்கள் வேலையைத்தொடர்ந்தோம்.கொஞ்சநேரத்தில் அவர் ஒரு ஆசிரியையுடன் திரும்பி வந்தார்.ஆசிரியையும் அவர் சொன்னதையே திரும்பதிரும்பச்சொன்னாள்.திருப்பி என்ன சொன்னாலும் அவர் தயவுசெய்து நீங்க அனுமதி வாங்கிட்டு எடுங்க சார் என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினோம்.எனக்கு நடந்த சூழல் ஒருநிலையில் சிரிப்பாகவும் இருந்தது.சற்றே கேலியாக அந்த காவலாளியை பார்க்கும் போது அவர் கையில் நீளமான தென்னங்கீற்றின் நடுவிலிருக்கும் நீளமான கம்பைக்கையில் வைத்திருந்தார்.எனக்கு ஆச்சரியமாக காந்தியின் ஞாபகம் வந்தது.உடனே நான் சொன்ன பொய்களும்,அவர் தோற்றத்தைப் பார்த்ததும் என்இயல்புக்கு மாறாக னான் அவரை அதட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்லிய குற்ற உணர்வு எனக்குள் வந்தது.இரவெல்லாம் காந்தி படமும் அவர் விவசாயிகளுக்காக கைது செய்யப்படும்போது நீதிபதி ஜாமீன் தொகை கட்டச்சொல்லும்போது கட்டமுடியாது.என்பதைத் தயவுடன் தெரிவிக்கிறேன் என்பார்.நீதிபதி வேறு வழியில்லாமல் அவரை ஜாமீன் கட்டாமல் விடுதலை செய்வார்.அந்தக்காட்சி ஞாபகம் வந்தது.அந்த அதட்டல் எனக்குள் ஏன் ஏற்பட்டது? நண்பர் எந்தக்குற்ற உணர் வும் இல்லாமல் அவருக்கு லஞ்சமாகப் பணம் தருவதாகச்சொன்னது எப்படி?கேள்விகள் இன்னும் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: