செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30




நாகரீக அரசியல் நமக்கு பழக்கமில்லை..குண்டாதடிகளும்,சோடா பாட்டில்களும்தான் நமக்கு புரிகின்ற அரசியல்...பலியானது மூன்று உயிர்கள்.
தினகரன் நாளிதழும் சன் டிவியும் இணைந்து ஏ.சி.நீல்சன் என்ற சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் உதவியோடு தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தி வருகின்றன.

அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா, கூடாதா என்று கேட்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவால் அவரது ரசிகர்கள் கடுப்படைந்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு அவசியம் வர வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் 1624 பேரிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் 487 பேர் மட்டுமே ரஜினி அரசிலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். திருநெல்வலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 37 சதவீதம் பேர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.ெசன்ைன மாவட்டத்தில் 36 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருச்சி பிராந்தியத்தில் 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

ரஜினி அரசியலுக்கு வரத் ேதவையில்லை என்று 40 சதவீதம் பேரும், அது வீண் வேலை என்று 14 சதவீதம் பேரும் கருத்து ெதரிவித்துள்ளனர். அதாவது 54 சதவீதம் பேர் ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்று கேட்ட கேள்விக்கு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள், அவர் நல்ல மனசுக்காரர் என்று பதில் அளித்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படும் என 10 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கேள்விக்கு அவர் நடிகர் என்று அவரை எதிர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், ெகாந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்நத் பிரமுகர் ரஜினி முருகன் கூறுகையில், இது பாரபட்சமான ஒரு கருத்துக் கணிப்பு. இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன.எங்களது தலைவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். இதை ஆளுங்கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ரஜினி ரசிகர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ரசிகர் மன்றத்தை விட்டு விலகியவர்கள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர். உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. ரஜினி செல்வாக்கின் நிழலைக் கூட இதுபோன்ற கருத்துக் கணிப்புகளால் தொட முடியாது என்றார் கோபமாக.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம். முதலில் கருத்து தெரிவிக்க மறுத்தார்.நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர் அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும். அவர்களது இதயங்களில் ரஜினிக்கு நிரந்தர இடம் கொடுத்துள்ளனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/rajini_070502.html
இந்த 'பெரியார்' திரைப்படத்தை பற்றி சில மாறுபட்ட கருத்துக்களும்,விமர்சனமும் வரலாம். ஆனால் அதையும் மீறி இந்தப் படம் மக்களால் பாராட்டபடும். திரைக்கதை அருமையாக அமைக்கப்பட்டு, நேர்த்தியான முறையில் படமாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த படத்தை அனைவரும் அரங்குக்கு சென்று பார்க்கவேண்டும். இளைய தலைமுறையினருக்கு பெரியார் பற்றிய தாக்கத்தை இந்தப் படம் நிச்சயம் அதிகரிக்கும்.

படத்தில் உள்ள பாராட்டுக்குறிய விசயங்கள்:


1.திரைக்கதை.

2.ஒளிப்பதிவு.

3.சத்யராஜ் நடிப்பு..பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார்.

4. இசை.

5.இயக்கம்.


குறைகள் என்று நான் உணர்ந்தது:

1. அரசியல் தலைவர்கள் சிலரின் உருவ அமைப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தாதது.

2. அப்போதைய அரசியல் தலைவர்களை அவசர அவசரமாக இணைத்து காண்பித்தது.

3. பெரியார் அவர்கள் எப்போதும் அரசியல் கூட்டங்கள்,போராட்டம் என்று எப்போதும் பெரும் மக்கள் கூட்டத்தில் இருந்தவர். ஆனால் படத்தில் ஒரு சிறிய அளவிலான மக்கள் மத்தியில் உலா வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது.

4. பெரியார் இடம் பெறும் அந்த சோக பாட்டு.

5. ஒரு சில இடங்களில் சிறிய வசனக் கோர்வைக்காக சற்று நீளமான காட்சியை அமைத்திருப்பது.(எ.கா) தாசிவீட்டில் செலவு கணக்கு பார்ப்பது, அம்பேத்கார் சம்பந்தப்பட்ட காட்சி.

6. இறுதியில் வரும் கருணாநிதி சம்பந்தபட்ட காட்சி, திணிக்கப்பட்ட மாதிரி இருப்பது.


இந்தப் படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லுபவர்களுக்கு.....


பெரியார் 90 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தவர்...நிறைய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கும். அந்த அனுபவங்களை வைத்து இந்த மாதிரி நிறைய படங்களை எடுக்கலாம். எதிர்காலத்தில் அந்த மாதிரி எடுக்கப்படலாம்.இப்போது இந்த 'பெரியார்' படத்தை பாராட்டலாம்.
சமீபத்தில் சென்னை நகரின் முக்கிய திரை அரங்கில் ஒரு திரைப்படம் பார்க்க சென்றேன்.என் இரு சக்கர வாகனத்தை,அதன் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கினேன்.அப்போது அங்கு இருந்த சுவற்றில் இருந்த ஒரு வாசகம் கண்டு திடுக்கிட்டேன்.

'parking vehicles at owner's risk' என்று எழுதப் பட்டிருந்தது. நான் அந்த டோக்கன் கொடுப்பவரிடம் இந்த மாதிரி எழுதியிருப்பதின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். அங்கு நிறுத்தப் படும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு, தங்கள் ஏஜன்சி பொறுப்பல்ல என்று விளக்கமளித்தார். 'நீங்கள் பொறுப்பல்ல என்றால் எதற்கு பணம் வசூல் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'அது வண்டி நிறுத்துவதற்கான கட்டணம் மட்டும்தான்..வண்டியின் பாதுகாப்பிற்காக அல்ல..' என்றார். இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டேன். சரியான பதில் இல்லை.

திரைஅரங்கு மேலாளரை கண்டு விளக்கம்கேட்கப் போனேன். அங்கிருந்தவர்கள் என்ன விசயம் என்று வினவினார்கள். விசயத்தை கூறி விளக்கம் கேட்டேன். அவர்கள் அவர்களுக்குள் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு 'மானேஜர் இல்லை..வெளியே போய் இருக்கிறார்...அப்புறமா வாங்க..'
என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

திரைஅரங்குகள் வாகனம் நிறுத்துவதற்கு நம்மிடம் பணமும் வாங்கிக் கொண்டு,பாதுகாப்பு மட்டும் கிடையாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
சென்னை-ஜூலை 3

சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பலின் கடற்படை வீரர்கள் 4 நாட்கள் ஆட்டம், பாட்டத்துடன் உல்லாசமாக பொழுதை கழிக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மது விருந்துக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது.சென்னை வடபழனியில் உள்ள 'கிரீன் பார்க்' ஓட்டலில் 70 வீரர்கள் தங்கியிருந்தனர்.நேற்று இரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் பொழுதை கழித்தார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=346541&disdate=7/3/2007

எல்லாம் சரி...அது என்னையா..'ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'...?

ஒரு அரசாங்கம் இதற்கெல்லாமா ஏற்பாடு செய்து தரவேண்டும்?
நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,

அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!

சரி போ...

நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?

நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!

கருத்துகள் இல்லை: