இலக்கியத்துறையில் ஈடுபட வரும் பெண்கள் ஆண்களின் காமவலைக்குள் விழுந்து விடுவார்களாம்! ////
என்னை பார்த்து நாங்கள் ஜெர்மனியில் கலை நிகழ்ச்சியெல்லாம் செய்கின்றோம். மற்றும் ஐரோப்பா முழுவதும் கலை நிகழ்ச்சிகள் செய்வோம் நீங்கள் கலந்து கொள்வீர்களா? எல்லா பொறுப்பும் எங்களுடையது தான் அருகில் இருந்த நண்பரைப் பார்த்து கண்சிமிட்டி கூறுகின்றார். நாம் வெளிவந்த நோக்கத்தை திசை மாற்றி செல்லும் பேச்சை ஆணாதிக்கம் என்பதா? காம உணர்வின் சீண்டல் என்பதா? ///// /////
எண்ணப்பறவை said...
////// நம் ஊரில் இப்படிப்பட்ட குள்ளநரிகளை பற்றி அறிவேன். ஆனால், ஐரோப்பாவிலும் இந்த நிலை என்பது வேதனையாகத்தான் உள்ளது. \\அந்தபோராட்டங்களை தமிழ்மண வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளவே எழுதுகின்றேன் .....\\பகிர்ந்து கொள்ளுங்கள், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். /////
சிவாஜி said...
மேற்கண்டவை தமிழச்சியின் பதிவில் படித்தது, எனக்கு தோன்றுவதை கீழே எழுதியுள்ளேன், தங்களின் கருத்துக்கள் என் சிந்தனையை மாற்றும்! '' சக இலக்கியவாதி யாராக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டுவது இருக்கிறது, பெண்ணாக இருப்பின் அது பாலியல் மூலமாக இலகுவாகிறது! பெண்ணியம் பேசுபவர்கள் யாவரும் கூடலை அதன் சார்ந்த விசயங்களை பெண்ணுக்கு விழைக்கபடும் அநீதியாகவே பேசுகின்றனர்,
தேவையில்லையே!
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்துதான் தவறு செய்ய முடியும்!!
ஒரு பெண் பல ஆண்களுடன் தவறு செய்கிறாள் என்று கணக்கு பார்ப்பீர்களானால் அது பெண்களுக்குதான் இழுக்கு!!! "
"யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா"
"ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?"
"இருக்கு"
"எடுத்துட்டு வா!"
***
"ஹலோ யார் பேசறது?"
"நான் பாரதியார் பேசறேன்"
"யாரு?"
"பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?"
"திருவள்ளுவரா?"
"திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…"
"அப்படிலாம் யாரும் இங்க இல்ல…"
"ஹலோ ஹலோ"
கொஞ்ச நேரம் கழித்து…
"ஹலோ யாரு?"
"நான் திருவள்ளுவர் பேசறேன்"
"என்னது?"
"திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?"
"ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?"
"என்ன மீட் பண்ணனும்னு பாரதியார் சொன்னார். நாந்தான் உங்க நம்பர் கொடுத்தேன். மறுபடியும் கால் பண்ணாருன்னா என்ன கி.மு 23 வது வருசத்துல வந்து மீட் பண்ண சொல்றீங்களா? ஹலோ ஹலோ…"
கொஞ்ச நேரம் கழித்து…
"ஹலோ"
"நான் பாரதியார் பேசறேன்…"
"இங்க பாரதியாரும் இல்ல திருவள்ளுவரும் இல்ல போன வைக்கிறியா இல்லையா?"
"ஹலோ… ப்ளீஸ்…ப்ளீஸ்…"
(தொடரும்)
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
எனது அறைச்சுவரெங்கும்
ஆணியில்லாமல் தொங்குகின்றன
உனது புகைப்படங்கள்.
ஒன்றில் சிரிக்கிறாய்.
ஒன்றில் சிணுங்குகிறாய்.
ஒன்றில் பயப்படுகிறாய்.
ஒன்றில் முகம்புதைத்து அழுகிறாய்.
ஒன்றில் தூர விலகி நடக்கிறாய்.
இன்னும் பலவற்றில் இன்னும் பல மாதிரி.
என்னை வெறுமைக்கு துரத்துகிற பாவனையில்
தினமொன்றாய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
உன்னிடமிருந்து தப்பிக்கும் முடிவுடன்
எல்லாப் படங்களையும் மூட்டைகட்டி
கொல்லைப்புற ஆழத்தில் புதைத்துவிட்டு திரும்புகிறேன்.
புகைப்படங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உன்னை இன்னுமதிகமாய் நினைவூட்டியபடி
இப்பொழுது தொங்கிக்கொண்டிருக்கிறது
அவற்றை மூட்டைகட்டிய கணம், கனமாய்!
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.
விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.
அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.
நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!
*
ஷேர் ஆட்டோவின் மூவர் அமரும் பின்னிருக்கையில்
பெண்கள் இருவர் அமர்ந்திருக்க,
முன்பக்கம் ஓட்டுநர் அருகே அமர்கிறேன்.
சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.
நான் இன்னும் பண்படவேண்டுமென
நினைத்துக்கொண்டிருக்கலாம்.
பரவாயில்லை.
இயல்பாய்ப் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போதும்
தள்ளி தள்ளி அமர்ந்து சங்கடப்படுத்துவதைக் காட்டிலும்
இது மேல்!
*
கடவுளைத் திட்டி எழுதியபோது
என்னிடம் கேட்கப்பட்டது - 'நீ நாத்திகவாதியா?'
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – 'ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?'
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – 'நீ தலித்தா?'
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – 'உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?'
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
*
தோட்டத்து தென்னைமரம்
இடிவிழுந்து தீப்பிடித்த நாளில்
எனக்கும் நடை முடங்கியது.
பிறகு படுக்கையே வசிப்பிடம்.
பேச்சும் குழறி பின்னொருநாள் முழுவதுமாய் ஊமை.
ஒருவாரத்தில் செவியின் மரணத்தால் உலகமே அமைதி.
எழுபது வயதில் கணவருக்கு பாரமாய் இருக்கவே பிடிக்கவில்லை.
விட்டுப் போகவும் மனமில்லாமல் கண்ணீர் விடுகிறேன்.
எதிரில் கணவரும் அழுவது தெரிகிறது.
நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
'அவனை' நினைத்துப் பார்த்ததும்,
எதிரில் கணவர் அழுவது தெரி...
*
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி.
அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
அலைந்து கொண்டிருந்தது கடல்.
நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும்
அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள்.
நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.
காற்றுக்கும் யாரோ தூதனுப்ப தென்றல் உடையில் அதுவும் வந்து விட
தேவதையின் சிறகென தென்றலில் பறக்கும் துப்பட்டாவை அவள் இழுத்து நிறுத்தும் வேளையில்
தேவதைகள் ஏமாந்து போகின்றன.
ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.
இவையெதனையும் கண்டுகொள்ளாமல்
எந்த கணத்திலும் பதுங்குதல் பாய்தல் என இரண்டுக்கும் தயாரான பார்வையை
கண்களில் ஒளித்துக்கொண்டு காதலனை மட்டுமே தேடுகின்றன அவள் கண்கள்.
தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.
இப்பொழுது
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி,
இமைகளை மூடிக்கொண்டால்…
காதலி தெரிகிறாள்!
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக