செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by நண்பர்கள் பரங்கிபேட்டை
























ஒரேயொரு சொல்
குதித்தோடும் ஒரேயொரு
சொல்லிலிருந்தே உருவானாய்
சப்தங்களாய்ச் சேகரமானாய்
நினைவிடுக்குகளில் மணல்துகளாய்
உறுத்திக்கொண்டிருந்த நீ
உன் தொடையில் பூனை குதித்தோடிய
ஒரு நள்ளிரவில்
என் கரங்களிலிருந்து
புகையாய் மாறிக் கரைந்து போகிறாய்
நினைவுகள் பெருக்கும் சொற்களை
ஒளித்துவைக்க இடமில்லாமல்
சொற்களைத் தாவித்தின்னும்
பூதமாகிறேன்

நினைவின் மெல்லிய சரடுகளில்
கோர்த்து வைத்திருக்கும் குரல்களை
நெடுங்கூந்தலுக்காக சேர்த்து வைத்திருக்கும்
பன்னீர்ப்பூக்களை
சிரிப்பொலிகள் தீண்டும் மௌனத்தை
என்ன செய்வேன்?
அதையெல்லாம் விடு
நிசப்தம் ஊறித்திழைக்கும்
இந்த நள்ளிரவை
என்ன செய்ய?

Image Courtesy:
http://www.noracamps.com/show-image/33462/Nora-Camps/Midnight.jpg

























ஒரேயொரு சொல்
குதித்தோடும் ஒரேயொரு
சொல்லிலிருந்தே உருவானாய்
சப்தங்களாய்ச் சேகரமானாய்
நினைவிடுக்குகளில் மணல்துகளாய்
உறுத்திக்கொண்டிருந்த நீ
உன் தொடையில் பூனை குதித்தோடிய
ஒரு நள்ளிரவில்
என் கரங்களிலிருந்து
புகையாய் மாறிக் கரைந்து போகிறாய்
நினைவுகள் பெருக்கும் சொற்களை
ஒளித்துவைக்க இடமில்லாமல்
சொற்களைத் தாவித்தின்னும்
பூதமாகிறேன்

நினைவின் மெல்லிய சரடுகளில்
கோர்த்து வைத்திருக்கும் குரல்களை
நெடுங்கூந்தலுக்காக சேர்த்து வைத்திருக்கும்
பன்னீர்ப்பூக்களை
சிரிப்பொலிகள் தீண்டும் மௌனத்தை
என்ன செய்வேன்?
அதையெல்லாம் விடு
நிசப்தம் ஊறித்திழைக்கும்
இந்த நள்ளிரவை
என்ன செய்ய?

Image Courtesy:
http://www.noracamps.com/show-image/33462/Nora-Camps/Midnight.jpg



More than a Blog Aggregator

by முபாரக்
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே
என்னிடம் வாருங்கள்
இம்முறை
என் பாரத்தினை
உங்களிடமிருந்து இறக்கிக் கொள்வேன்


More than a Blog Aggregator

by முபாரக்
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே
என்னிடம் வாருங்கள்
இம்முறை
என் பாரத்தினை
உங்களிடமிருந்து இறக்கிக் கொள்வேன்
தூதாசபானியிடம் நேற்று ஒரு சொல்லை வெறும் சொல்லாகவே உணருவதெப்படியென்பதை சொற்களால் விளக்கியபடியே தூங்கிப்போனேன். அவள் வெறும் சொல்லாகவே மாறி மூடியிருந்த சன்னலின் வழி வெளியேறிப்போனாள். அவள் கனவில்,சொற்கள் கடவுளை உருவாக்கின.சொற்களால் கடவுள் உருவாக்கபட்டார்.சொற்களை கடவுளை உருவாக்கினார்.என் கனவில்,சொற்கள் வேதங்களை உருவாக்கின.சொற்களால் வேதங்கள் உருவாக்கப்பட்டன.சொற்களை வேதங்கள் உருவாக்கின.

வாசகமனம் உருவாக்கும் பிரதியும்,பிரதி உருவாக்கும் வாசகமனமும் ஒரே நுழைவாயிலில்தான் நரகத்தை அடைவதாகவும், அவ்வாறு வருகையில் சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலையில் இருந்து தனது துரிதஸ்கலித பிரச்சினைக்கு மருந்து வாங்கிவரும்படியும் ஆண்கடவுள் கூறினான்.ஆனால் மூன்று கோப்பை மது இருந்தால் தன்னால் 60 நிமிடங்கள் இயங்கமுடியும் என்றும் தான் இதன் மூலம் கடவுளை வென்றுவிட்டதாகக் கூறி பூமி அதிரச்சிரித்தான் ஆதிமூலம்.

தேவி அவளது திருமணத்திற்கு பிறகு இதுவரை 31முறை மட்டுமே வெளியிடங்களுக்குச் சென்றிருப்பதாகவும்,அதில் 7 முறை திரு(?)மண வீடுகளுக்கும், 24 முறை மரணவீடுகளுக்கும் சென்றதாகக்கூறினாள். ஆனால் இதுவரை அவள் 365 ஆண்களைப் புணர்ந்தும்,புணர்ச்சிக்குபின் அவர்களது குறிகளை வரவேற்பறையில் தன் கணவனின் பார்வைக்கு வைத்தும் பழிவாங்கிக்கொண்டிருக்கிறாள்.

பின்னிரவில் இருசக்கரவாகனத்தில் பயணிக்கையில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளாவன.
1) முன்னே செல்லும் வாகனத்தின்மீது மோதலாம்.
2) எதிரே வரும் வாகனத்தின்மீது மோதலாம்.
3) பின்னே வரும் வாகனம் மோதலாம்.
4) எதிரே வரும் வாகனம் மோதலாம்.
5) வரும் வாகனம் மோதலாம்.
6) வாகனம் மோதலாம்.
7) மோதலாம்
8) தலாம்
9) லாம்
10) ம்
இரவுநேரத்தில் சாலையில் இவ்வளவு பெரிய பள்ளம் இருக்குமென்று எவன் கண்டது?மண்டை உடைந்துபோனது.

விதவிதமான கத்திகளை கையாள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்,அதிலும் அந்த பச்சைக்கைப்பிடி வைத்த கத்தியை.அது எனக்கு சுளைகள் நீக்கப்பட்டு தூக்கியெறியப்பட்ட பலாப்பழத்தின் நடுவே கிடைத்தது .பேருந்தின் இருக்கையில் பின்புறம் தலைசாய்த்து படுக்கும்போது கவனித்திருக்கிறீர்களா?கழுத்து கத்தியால் அறுக்கப்படுவதெற்கென்றே உருவானதுபோலிருக்கும். அந்த பச்சை கைப்பிடி வைத்த கத்தி இல்லாமற்போனதால் என்னுடைய தற்கொலை தள்ளிபோய்க்கொண்டிருக்கிறது. .அது இன்று பரசுராமனிடம் இருக்கிறது உபயோகங்களின்றி..உங்களில் திறமையாக திருடத்தெரிந்தவர்கள் அந்த பச்சைக்கைப்பிடிக்காகவேனும் எனக்கு திருடித்தாருங்கள்..அவர்கள் அனைவரும் கையுயர்த்தி சொன்னார்கள் நிச்சயம் பச்சைக்கைப்பிடி கத்தியை திருடுவதாக.

கருத்துகள் இல்லை: